கர்ப்பத்தை அறிவித்து சில நாட்களில் நடந்த நிகழ்வு.. கணவரைப் பற்றி பதிவிட்ட செய்தி வாசிப்பாளர் கண்மணி
சென்னை: செய்தி வாசிப்பாளர் கண்மணி மற்றும் சின்னத்திரை நடிகர் நவீன் தம்பதி சமீபத்தில் தான் தாங்கள் பெற்றோராக போகும் மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் கண்மணிக்கு எளிமையாக வளைகாப்பு நடந்து இருக்கிறது. அந்த புகைப்படங்களை கண்மணி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தன்னுடைய கணவர் குறித்து உணர்ச்சிகரமான வார்த்தையை பகிர்ந்து இருக்கிறார்.

செய்தி வாசிப்பாளர்
வெள்ளித்திரை, சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளராக இருந்தாலும் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் கண்மணி. இவர் ஆரம்பத்தில் ஜெயா டிவியில் தான் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். நியூஸ் 18,காவேரி போன்ற பல தொலைக்காட்சிகளில் இவர் பணிபுரிந்து இருந்தாலும் தற்போது சன் டிவியில் செய்தி வாசித்து வருகிறார். இவருக்கு சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்த பிறகும் அதில் எல்லாம் தனக்கு ஆசை இல்லை என்று கூறி செய்தி வாசிப்பில் தங்களது கவனத்தை தேடி செலுத்தி வருகிறார்.

இதயத்தை திருடாதே சிவா
இந்த நிலையில் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் நவீனை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் நவீன் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு இதயத்தை திருடாதே சீரியலில் சிவா என்கிற கேரக்டர் அதிகமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது. இந்த கேரக்டர் மூலமாகவே இப்ப வரைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

திருமணம்
இந்த நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள விஜயாபார்க்கில் நவீன் மற்றும் கண்மணியின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. இவர்களின் திருமணம் ஜூன் மாதம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் என்று செய்திகள் வெளியான நிலையில் அதுவெல்லாம் இல்லை இது வீட்டில் பார்த்த திருமணம் தான் என்று ஏற்கனவே இவர்கள் இருவரும் விளக்கம் கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

மறைத்து வைத்த ரகசியம்
சமீபத்தில் நவீன் மற்றும் கண்மணி இருவரும் காபி ஷாப்பில் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தனர். அதில் கண்மணியின் வயிறு பெரியதாக இருப்பதை கண்ட ரசிகர்கள் பலர் கண்மணி கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்வியை எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் தங்களுடைய youtube பக்கத்தில் இதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கின்றனர். அதில் நாங்க இதை சர்ப்ரைஸ் ஆக வச்சிருக்கணும்னு தான் நினைச்சிருந்தோம். மண்டையில் உள்ள கொண்டையை மறந்துட்டோம் என்கிற மாதிரி சலூனின் எடுத்து வீடியோவை பதிவிடும்போது, நாங்கள் இதை கொஞ்சமும் கவனிக்கல. அதனால பலரும் எங்க கிட்ட கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனாலதான் சரி நம்ம ஃபேமிலி கிட்ட இத சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டோம். கடவுள் கொடுக்குறாங்க அதை நாம அப்படியே ஏத்துக்கணும் என்று கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வளைகாப்பு பதிவு
இந்த நிலையில் இந்த ஜோடி கர்ப்பத்தை ரசிகர்களோடு பகிர்ந்து ஒரு சில வாரங்கள் தான் ஆகின்றது. இந்த நிலையில் தற்போது எளிமையாக இவர்கள் வளைகாப்பு பங்ஷனை கொண்டாடி இருக்கின்றனர். அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்த கண்மணி அதற்கு, உன் சிறு அணைப்பில் ஓராயிரம் ஆறுதல் உணர்கிறேன்.. என்று தன்னுடைய கணவரை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இவர்களுடைய இந்த புகைப்படம் மற்றும் பதிவிற்கு ரசிகர்கள் அதிகமானோர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications