விஜய் “அங்கே” போன் பயன்படுத்த மாட்டாரு.. அந்த திருக்குறளுக்கு அர்த்தம்! நடிகை சுஜாதா ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் இன்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து இருக்கும் நிலையில் அவர் பற்றிய பேச்சு தான் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் சுஜாதா நடிகர் விஜய்யோடு தான் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் சினிமாவில் தான் விஜய் கலகலப்பாக இருக்கிறாரே தவிர நிஜத்தில் ரொம்பவே அமைதியான நபர். சூட்டிங் ஸ்பாட்டில் செல்போன் கூட பயன்படுத்த மாட்டார். அங்கு என்ன நடக்கிறது என்பதை ஆழ்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார் என்று சுஜாதா பேசியிருக்கிறார். அதோடு மேலும் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

newsreader Sujatha about her experience while acting with actor Vijay

அந்த வகையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் சுஜாதா 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் செய்தி வாசிப்பாளர்களில் ஒருவராக தான் இருந்து வருகிறார். இவர் தமிழில் உச்சரிக்கும் வார்த்தைகள் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும். இந்த நிலையில் தான் சமீபத்தில் கூட இவர் தமிழ் உச்சரிப்பை தெளிவாக செய்கிறார் என்று இவருக்கு விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்பம் மற்றும் நடிப்பு செய்தி சேனல் வேலை என எல்லாவற்றையும் பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

அதில் எனக்கும் என்னுடைய கணவருக்கும் வீட்டில் பார்த்து தான் திருமணம் செஞ்சு வச்சாங்க. ஆரம்பத்தில் இருவருக்குமே எல்லா வீட்டில் வருவது போல சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தது. ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். எனக்காக என்னுடைய கணவர் பல விஷயங்களை தானாக செய்ய தொடங்கி விட்டார். என்னுடைய குழந்தை பள்ளியில் இருந்து வந்தால் நான் தான் வந்து சாப்பாடு செய்ய வேண்டும் என்று இல்லாமல் ஒரு தோசை மாவை வாங்கி குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து விடுவார்.

அப்படி சின்ன சின்னதாக தொடங்கிய வேலை இப்போது வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதுபோல நானும் முழுமையாக அவரை புரிந்து அவருக்கு தகுந்தபடி நடந்து கொள்கிறேன். இதனால் என்னுடைய திருமண வாழ்க்கை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. அது போல என்னுடைய சினிமா மற்றும் செய்தி வாசிப்பாளர் வேலையும் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் நான் தமிழ் வழியில் BA மற்றும் MA முடித்து படித்திருந்தேன்.

அந்த நேரத்தில் ஏதோ ஒரு டிகிரி படிக்க வேண்டுமே என்ற நோக்கில் தான் படித்திருந்தேன். அதற்கு பிறகு வேலை என்று வரும்போது நமக்கெல்லாம் என்ன வேலை கிடைக்கும் என்று இருந்தேன். அந்த நேரத்தில் செய்தி வாசிப்பாளராக இன்டர்வியூ அட்டென்ட் பண்ணியதும் எனக்கு அந்த வேலை கிடைத்தது. அதற்கு பிறகுதான் என்னுடைய படிப்பின் அருமையும் தெரிய தொடங்கியது. ஆரம்பத்திலேயே எனக்கு சீரியலிலும் சினிமாவிலும் வாய்ப்பு வந்த போது நான் என்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்று அதை மறுத்துவிட்டேன்.

பிறகு ஒரு முறை எனக்கு நடிகர் விஜய்யோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை கேட்டு நான் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். அதுவும் விஜய்யோடும் ஒரு மாதமாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் அதைக் கேட்டு நான் வானத்தில் பறந்து கொண்டு இருந்தேன். பிறகு சூட்டிங் ஸ்பாட் போன முதல் நாள் விஜய்யிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டதும் அவர் எளிமையாக சிரித்தபடியே ஹாய் சொன்னார்.

அதற்கு பிறகு அவருடைய நடவடிக்கையை பார்த்து நான் வியந்து போனேன். அதாவது சூட்டிங் ஸ்பாட்டில் வந்தால் அவர் வேலையை மட்டும் தான் பார்ப்பாரே தவிர யாரிடமும் வெட்டி கதை பேச மாட்டார். அதுபோல கையில் போனை வைத்து நோண்டிக் கொண்டு கூட இருக்க மாட்டார். அடுத்து என்ன செய்யலாம் எப்படி நடிக்கலாம் என்கிற ரீதியில் தான் அவருடைய சிந்தனைகள் முழுக்க இருக்கும் என்று விஜய் பற்றி பெருமையாக பேசி இருந்தார்.

அப்போது சுஜாதாவிடம் நீங்கள் சமீபத்தில் சிறந்த தமிழ் உச்சரிப்பு உள்ள செய்தி வாசிப்பாளர் என்று விருதுகள் வாங்கினீர்களே அது எப்படி? என்று கேட்க அதற்கு சுஜாதா ஒரு திருக்குறளை அந்த தொகுப்பாளரிடம் சொல்லி அதை உச்சரிக்க சொல்லி இருந்தார்.

அதாவது "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" என்ற திருக்குறளை சுஜாதா அந்த தொகுப்பாளரிடம் சொல்லுவதற்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதோடு இந்த திருக்குறளில் மூன்று சுழி "ண்" வருவதால் நாக்கை மடித்து சொல்ல வேண்டும் என்று சில டிப்ஸ்களையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+