Nidhhi Agerwal: கூட்டத்தில் மோசமாக நடந்து கொண்ட ரசிகர்கள்.. தப்பி பிழைத்த நடிகை நிதி அகர்வால்
சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ராஜா சாப் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகை நிதி அகர்வாலும் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு நசுக்கிய காட்சிகள் சோசியல் மீடியாவை பதற வைத்திருக்கிறது.
ரசிகர்கள் என்கிற பெயரில் சிலர் செய்கிற மோசமான செயல் பார்ப்பதற்கே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கிறது. சமீபத்தில் நடிகரும் அரசியல் பிரமுகரான விஜய் நடத்திய கரூர் கூட்டத்தில் அதிகமானோர் கலந்து கொண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத சூழ்நிலையில் இப்போது நடிகையை நிதி அகர்வாலை ரசிகர்கள் சூழ்ந்து செய்த செயலும் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குனர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன் உட்பட பலர் நடிப்பில் உருவான படம் தான் ராஜாசாப். இந்த படம் காஞ்சனா போல திரில் கலந்த பேய் படமாக உருவாகி இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. நடிகர் விஜய் நடித்த ஜனநாயகம் படத்துடன் இந்த படமும் மோதுகிறது. இந்த நிலையில் நேற்று தி ராஜாசாப் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் தனியார் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அரங்கத்தில் அதிகமான கூட்டம் கூடியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து நிதி அகர்வால் தன்னுடைய காரை நோக்கி வரும்போது கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் நிதி அகர்வாலை சூழ்ந்து கொண்டு அவரை வெளியே விடாமல், அநாகரிகமாக தொட்டு அவரை துன்புறுத்தினர். இதனால் நிதி அகர்வால் ரொம்பவும் கஷ்டப்பட்டு அந்த இடத்திலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சில பாதுகாவலர்கள் உடனடியாக வந்து கூட்டத்திலிருந்து ரசிகர்களை நீக்கி அவரை காரில் ஏற்றினார். ஆனால் நிதி அகர்வால் காருக்குள் வந்த பிறகும் பதட்டத்தோடும், பயத்தோடும் இருந்திருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை பலரும் கண்டித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications