Nila serial: ஆடி வெள்ளி அன்று அன்வர் அம்மனுக்கு கூழ் காய்ச்சி படையல்!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் வைத்தியர் ஆஸ்ரமத்தில் அஞ்சலிக்கு துணையாக இருந்த ரேவதிக்கு அம்மை போட்டுவிடுகிறது. ஆத்தா ரொம்ப ஆங்காரமா இறங்கி இருக்கான்னு எல்லாரும் பேசிக்கறாங்க.
ரேவதி கண் விழிக்க முடியாமல் தவித்து படுத்து இருக்காங்க. அதே ஆஸ்ரமத்தில் வைத்தியர் அன்வராக இருப்பவர்தான் ரேவதியின் கணவர் ஸ்ரீதர். ஆனால், அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய் விடுகிறது.
நினைவில்லாமல் இருந்தபோது அவரை இஸ்லாமிய பெரியவர் ஒருவர் காப்பாற்றி அன்வர்னு பேர் வச்சு வைத்தியம் கத்து கொடுத்து இருக்கார்.அந்த வைத்தியத்தைத்தான் இப்போது ஆஸ்ரமத்தில் அன்வர் செய்துகொண்டு இருக்கார்.

அன்வர் அஞ்சலி
அன்வர்தான் அஞ்சலிக்கு வைத்தியம் பார்த்து வருகிறார் என்றாலும்,, ரேவதி ஒரு நாள் கூட அவரை நேரில் பார்க்கவில்லை. இதனால்தான் அன்வர் தன் கணவர் என்கிற உண்மை தெரியாமல் போகிறது. இப்போது, ஆத்தா இன்னும் இறங்கவில்லை என்று எல்லோரும் சொல்ல, நான் வந்து அவங்களைப் பார்த்து ஓதலாமான்னு கேட்கிறார். அந்த பெண்கள் தயங்குகிறார்கள்.

எதுக்கு தயக்கம்
உங்கள் தயக்கம் எனக்கு புரியுது. அல்லாவா இருந்தால் என்ன,அம்மனா இருந்தால் என்ன... நல்லது நடக்கணும்னு அவங்கவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி வேண்டிக்கறோம் அவ்ளோதான். இதுக்கு எதுக்கும்மா யோசிக்கறீங்கன்னு கேட்கிறார் அன்வர். ஆஸ்ரம காப்பாளரும் வழி விடுங்கம்மா.. அவர் மன திருப்திக்கு அவர் வேண்டிக்கறார்னு சொல்ல, இவர் ரேவதியைப் பார்க்கப் போறார்.

அன்வர் ரேவதி
அன்வர் ரேவதியைப் பார்த்து ஒரு சலனமும் இல்லாமல் ஓதிவிட்டு போகிறார். ரேவதி யாரு யாரு எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் என் அருகிலிருப்பது போல இருக்குதேன்னு புலம்பறாங்க. இங்கே அஞ்சலிக்கு வைத்தியம் பார்க்கும் அன்வர் உங்களுக்காக வேண்டிக்க வந்திருக்கார்னு சொல்றாங்க. அதே மாதிரி ஓதிவிட்டு போயிடறார் அன்வர்.

கூழ் காய்ச்சி
அன்வர் ரேவதி குணமடைய வேண்டிக்கிட்டு, மூன்று தண்ணீர் விட்டதும், அம்மனுக்கு தனது கையால் கூழ் காய்ச்சுகிறார்.அதை அம்மனிடம் வைத்து பூஜை செய்து, பிறகு ரேவதிக்கு கொடுக்க சொல்கிறார்.ரேவதி கணவர் செய்த கூழ்னு தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, வெளியில் கூழ் பானையை வைத்து அன்வர் மக்களுக்கு கூழ் ஊத்தி கொடுத்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications