Nila serial: பரவால்லியே பசங்களையும் நம்பலாம் போலிருக்கே!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவின் காதலன் கார்த்திக் நினைத்து வந்தது ஒன்று.இங்கு வந்து காட்சி மாறிப் போனது ஒன்று என்று அசத்தி விட்டான்.
இந்த பசங்களையும் நம்பலாம் போலிருக்கேன்னு நினைக்கும்படி செய்து விட்டான். நேற்று நிலாவை இனிமேல் நீலாம்பரி வீட்டில் விட்டு வைக்க மாட்டேன்.உண்மையை சொல்லி, அவளை அழைச்சுட்டு வந்துருவேன்னு போதையில் உளறினான்.
நண்பன் சொல்லியும் கேட்காமல் ராத்திரி நேரத்தில் நிலாவுக்கு போன் செய்ய, நிலாவை எப்போது நீலாம்பரியிடம் காட்டிக் கொடுக்கலாம் என்று காத்திருந்த ஸ்வேதா போனை திருட்டுத் தனமாக எடுத்து நிலா போல பேசுகிறாள்.

கூட்டிய ஸ்வேதா
ஹாலில் அனைவரையும் கூட்டிய ஸ்வேதா, கார்த்திக்கை நிலா வர சொல்வது போல மெசேஜ் அனுப்பினோமே... இன்னும் காணோம்னு அவள் வாசலைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். என்ன வெண்மதி இப்படி எல்லார் நேரத்தையும் வீணடிச்சுக்கிட்டு இருக்கேன்னு நீலாம்பரி பொறுமை இழந்து கேட்க, அக்கா இருக்கா ஸ்வேதாதான் என்னவோ சொல்லணும்னு எல்லாத்தையும் வெயிட் பண்ண வச்சு இருக்கான்னு வெண்மதி சொல்றா.

கார்த்திக் கிளம்பறான்
இங்கு பார்த்தால்,நிலவை அழைச்சுட்டு வந்துடறேன்னு ஸ்வேதா அனுப்பிய மெசேஜை நம்பி கார்த்திக் நிலா வீட்டுக்கு கிளம்பி வர்றான். சிறிது நேரத்தில் கார்த்திக்கும் வந்துவிட, . அப்போதுதான் நிலா போனில் பேசினாள், கார்த்திக் வந்து அழைச்சுட்டு போயிரு .நீ இல்லாமல் இனிமேலும் என்னால் இருக்க முடியாதுன்னு மெசேஜ் அனுப்பினான்னு ஸ்வேதா நீலாம்பரியிடம் சொல்ல, என்ன நிலா இதெல்லாம்னு நீலாம்பரி கோச்சுக்கறாங்க.

ஆன்ட்டி இல்லை
அதுக்குள்ள கார்த்திக் வா நிலா நாம் போகலாம் .நீ நடிச்சது போதும்.கிளம்பு போகலாம்னு கூப்பிடறான். கார்த்திக் உனக்கு பைத்தியமா.. எதுக்கு இங்கே வந்தேன்னு நிலா கத்தறா. ஆமாம் நிலா இந்த வீடு, வசதியான வாழ்க்கை எல்லாம் கிடைச்சதும் என்னை விட்டுட்டு இங்கியே செட்டிலாயிட்டே இல்ல.. உன்னையும் உன் தங்கச்சி ஸ்வேதா மாதிரி கல்யாணத்துக்கு முன்பே பொண்டாட்டி மாதிரி உறவு வச்சிருந்தா நிலா நீ என்னை விட்டு போயிருக்கமாட்டா இல்லேன்னு சொல்லி நடிச்சுட்டு போயிடறான்.

நம்பலாம் பசங்களை
வரும் போது நிலாதான் மெசேஜ் செய்தாளான்னு போனில் கேட்க, நிலா இல்லை என்று சொல்லி இருக்கிறாள். இனிமேல் நிலாவின் திட்டத்துக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று முடிவெடுத்து நண்பனிடம் பேசுகிறான். நிலா அப்பா அம்மாவை கண்டு பிடிக்க எவ்ளோ கஷ்டப்படறா...நான் இனி அவளை தொல்லை பண்ண மாட்டேன்னு சொல்றான்.
சோ...பசங்களையும் நம்பலாம் போலிருக்கே!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications