Nila serial: வெள்ளைக் குதிரையிலே ஐயா ஓடி வர்றார் முனீஸ்வரர்!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவுக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடந்து வருது. முனீஸ்வரர் கோயிலில் இந்த சடங்குக்கு நீலாம்பரி ஏற்பாடு செய்யறாங்க. பெண்கள் கூட்டம் கூடி இருக்க, அசோக்கின் அருகில் நிலா உட்கார இந்த சடங்குக்கு நடக்குது.
ஆடி மாசம் என்றாலே கூழ் ஊற்றும் சடங்கு போல, புது மணமகளுக்கு தாலி பிரிச்சு கோர்க்கும் சடங்கும் நடப்பது வழக்கம். அதை நிலா சீரியலில் காண்பித்து இருக்கிறார்கள்.
இந்த கோயிலில் வைத்து நிலாவை சாகடிக்க நீலாம்பரியின் மகன் சஞ்சய் திட்டம் போடறான். அதே போல அலுவலகத்தில் நிலாவால் பாதிக்கப்பட்ட ஒருத்தரை வைத்து முனீஸ்வரன் கோயிலில் சாமியாடியை தூண்டிவிட்டு, கொலை செய்ய ஏற்பாடு செய்யறான்.

அசோக் நிலா
அசோக்கை கல்யாணம் செய்து கொண்டதாக நீலாம்பரியை நம்ப வச்சு, தனக்குத் தானே தாலி கட்டிக்கொண்டு வந்துடறா நிலா. இதை நீலாம்பரியிடம் ஆதாரத்தோடு சொல்ல வந்த வீர பத்ரன் தற்போது விபத்தில் நினைவில்லாமல் கிடக்கான். வீரபத்னுக்கு இவனும் நீலாம்பரியும் சேர்ந்து கொலை செய்த ஸ்ரீதர் அதாவது அன்வர் வைத்தியம் பார்த்து கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வந்துடறார். ஆனால், அவராக இருக்கும் ஸ்ரீதருக்கு நீலாம்பரியின் சதி வேலைகள் இப்போது நினைவில் இல்லாதபடி இருபது வருடங்களாக ஸ்ரீதருக்கு தான் ஸ்ரீதராக இருந்தோம் என்கிற நினைவு இல்லை. கடந்த இருப்பது வருட நினைவுகளில் அன்வராக மட்டுமே வாழ்ந்து வருகிறார்.

சொத்துக்கள் நிலா பேரில்
ஸ்ரீதர் நீலாம்பரியால் ஆபத்து என்று நினைத்து, தன் பேரில் இருக்கும் சொத்துக்களை தனது வாரிசான பெண் குழந்தைக்கு எழுதி வைத்து விடுகிறார். ஆனால், நிலாதான் அந்த பெண் குழந்தை என்று ஸ்ரீதருக்கு கூட தெரியவில்லை.ஆனால், நீலாம்பரிக்கு தெரிஞ்சு அவளை தனது மருமகளாக்கி சொத்தை எழுதி வாங்கிட நினைக்க, நீலாம்பரியின் தந்திரத்தை தெரிஞ்சுக்கிட்ட நிலா,அசோக்கை கல்யாணம் செய்து கொண்டது போல வீட்டுக்கு மருமகளா வந்துடறா.

நீலாம்பரி நாடகம்
நிலா தன் அப்பா சொத்துக்களை தான் மீட்டெடுக்க வேண்டும் என்று, நீலாம்பரியின் தம்பி பொண்டாட்டியாக நாடகம் போட, வந்துட்டியா, இரு உன் பேரிலிருக்கும் அத்தனை சொத்துக்களையும் என் பேருக்கு மாத்தி எழுத்திக்கறேன்னு நீலாம்பரியும் நாடகம் போடறாங்க. இப்படித்தான் கதை நகர்ந்துகிட்டு இருக்கு.இந்த நேரத்தில்தான் தாலி பிரிச்சு கோர்க்கும் சடங்கு நடக்குது.

சாமியாடியின் ஆட்டம்
முனீஸ்வரன் கோயிலில் சாமியாடியின் ஆட்டம் ரொம்ப நன்றாக இருந்தது. கருப்பு உடையில், வெள்ளைக் குதிரையில் ஐயா ஓடி வர்றார் முனீஸ்வரர்னு பாடலும் காதுக்கு இனிமையாக இருந்தது. இதற்கு முன்பாக தாலி கோர்க்கும் சடங்கும் முடிந்துவிட, இப்போது சாமியாடி பாடிகிட்டே கத்தியால் நிலாவை குத்த வர, அது தவறி அசோக்கின் மேல் பட்டுடுது. எல்லாரும் அதிர்ச்சியில் இருக்க சாமியாடி என்னடா கத்தியை மாத்தி செருகிட்டோமேன்னு அதிர்ச்சியில் இருக்கார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications