Nila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா?
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரி நிலாவை கொன்றுவிட திட்டம் போட்டுட்டாங்க. வீர பத்ரனிடம் சொல்லி கொலை செய்வதற்கான ஆளையும் நியமித்து விட்டார்கள்.
ஆட்டை கடிச்சு,மாட்டை கடிச்சு கடைசியில் இப்போது மனுஷனை கடிச்ச கதையாக நிலாவின் அப்பாவை கொன்று விட்டதாக எண்ணிக்கொண்டு இருக்கும் நீலாம்பரி, நிலாவின் வளர்ப்பு அப்பா, அதாவது தாய் மாமாவையும் கொலை செய்துவிட்டார்கள்.
எல்லாம் நிலாவின் சொத்துக்காத்தான்... இப்போது நிலாவும், ரேவதியும் அம்மா பொண்ணு என்று தெரிந்துக்கொண்ட நீலாம்பரி, நிலாவை கொன்னுடனும்னு முடிவே பண்ணிட்டாங்க.

ஆரம்பம் ஆட்டம்
நிலா ஹைதராபாத் போன போது, எப்படி எல்லாம் நிலாவையம், அசோக்கையும் வீரபத்ரனை விட்டு பயமுறுத்த சொன்னாங்களோ அதை எல்லாம் இப்போது நீலாம்பரிக்கு நிலா செய்து பயம் காண்பிக்கிறாள்.ஏற்கனவே, நிலாவின் மாமாவை கொலை செய்தது நீலாம்பரிதான் என்று போலீஸ் சந்தேகப்பட இப்போது வீட்டில் நடக்கும் விபரீதங்களை போலீசிடம் சொல்ல வேண்டாம் என்று நீலாம்பரி சொல்கிறார்.

சொல்லியே தீரணும்
முடியாது ஆன்ட்டி.. இதை போலீஸ்கிட்டே சொல்லியே தீரணும்., இந்த வேலையை இந்த வீட்டில் யார் செய்து இருப்பாங்க. பூட்டி இருந்த உங்க கப்போர்டுக்குள்ள எப்படி எலும்புக்கு கூடு வந்துச்சுன்னு தெரியணும்னு நிலா போலீசுக்கு போன் செய்ய நீலாம்பரி பயந்து இருக்காங்க. போலீஸ் பழசை எல்லாம் கிளற ஆரம்பிச்சுருவாங்க என்று.

போலீசும் அதே போல
போலீஸும் அதே போலத்தான் பழசை கிண்ட ஆரம்பிச்சு,ஸ்ரீதர் ஆக்சிடென்ட்லதான் இறந்தார்னு உங்களுக்கு எப்படி தெரியும்?ஸ்ரீதர் போட்டோ உங்ககிட்ட ஒண்ணு கூட இல்லையே அது எப்படி? பல வருஷங்கள் ஒண்ணு சேர்ந்து பிஸினஸ் பண்ணி இருக்கீங்க..ஒரு போட்டோகூட இல்லைன்னு சொல்றீங்க சந்தேகம் வருதேன்னு சொல்றாங்க.

எதுக்கு உங்கள்
எலும்புக் கூட்டை எதுக்கு உங்கள் கப்போர்டில் உங்க வீட்டு மனுஷங்க வைக்கணும்.நிலா அப்பா இறந்துட்டார்னு சொல்றீங்க, அவங்க குடும்பத்தை தேடித் பிடிச்சு அப்பவே அவங்க சொத்துக்களை ஒப்படைக்காதது ஏன் என்று பல கேள்விகள்; எழுப்பறாங்க. நிலா மட்டும் அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று நம்பி போலீஸ் உதவியை நாடி வருகிறாள்.
கதை திரில்லிங்கா நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications