Nila serial: என்னாச்சு மாப்ளே... உள்ளதும் போச்சே! படபடக்கும் மாமியார்
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் பகல் நேர சீரியலில் ஓரளவுக்கு நல்ல ரேட்டிங்கில் இருக்கிறது. கதையும் நன்றாக இருக்கிறது. நடிகர் நடிகையரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள்.
நிலாவாக நடித்து இருக்கும் நிகழ்ச்சித் தொபகுப்பாளரும் மிக நன்றாகவே நடித்து இருக்கார். நிலாவுக்கு, நீலாம்பரிக்குமான பனிப்போர் நன்றாக இருக்கிறது.
நீலாம்பரியாக நடித்து இருக்கும் நடிகை நல்ல அழகு. சஞ்சய்க்கு அம்மா மாதிரி இல்லாமல், அக்கா மாதிரி கூட இல்லாமல் அவ்வளவு இளமையாக அழகாக இருக்கிறார்.

ஏன் வீரபத்திரன்
வீரபத்திரன் தன்னை பார்த்து அடையாளம் கண்டும், நீலாம்பரியிடம் எனக்குத் தெரியாது நான் பார்த்ததில்லைன்னு ஏன் சொன்னான்னு தெரியலையேன்னு நிலா கார்த்திக்கிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். வீரபத்ரனுக்கு உனக்கு நீயே தாலி கட்டிக்கிட்டது வரைக்கும் தெரியும்.அதோட, அதுக்கான ஆதரம்கூட அவன் வச்சிருந்தான். எதனால் அப்படி சொல்லி இருப்பான்னு கார்த்திக்கும் கேட்கிறான்.

அவன் முன்னால்
அப்போது திடீரென்று கண்ணுக்கு முன்னால் வந்து நிற்கிறான் வீரபத்திரன். எதனால் உன்னை தெரியலைன்னு சொன்னேன்னு தெரியணும்.. அவ்ளோதானே. இதுவரைக்கும் . நீலாம்பரி பூசாரியா இருந்தாங்க.இப்போதுதான் சாமி நீயே வந்துட்டியே... புரியலை சொத்துக்கு கார்டியன் நீலாம்பரிக்கு விசுவாசமா இருந்து சில்லறை வாங்கி அழுலுத்துப் போச்சு.அதான் இனி எஜமானிக்கு விசுவாசமா இருந்து மொத்தமா ஒரு அமவுண்ட் வாங்கிட்டு வெளிநாட்டு போயிடலாம்னு இருக்கேன்னு வீரபத்திரன் சொல்றான்.

ஃபாத்திமா சஞ்சய்
அன்வர் வளர்ப்பு பெண்ணான ஃபாத்திமா நிலாவுக்கு உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டு இருக்கையில்,அவளை மட்டும் தனியாக இருக்க வச்சு, மத்தவங்களளை சினிமாவுக்கு அனுப்பிடறான் சஞ்சய். அவளை புது புராஜெக்ட் என்று, அடைய பார்க்க, நிலா வந்து காப்பாத்தி, சஞ்சயை அடிச்சு ஆஃபீஸை விட்டுத் துரத்திடறா.

நாங்க போறோம்
வீட்டுக்கு வந்து, சஞ்சய் பொண்டாட்டி ஸ்வேதாவை கிளம்புன்னு சொல்றான். எங்கே போறே சஞ்சய்னு அம்மா நீலாம்பரி கேட்க, நிலா இருக்கற வீட்டில் இனி நான் இருக்க மாட்டேன் மம்மின்னு சொல்றான்.என்னடா தப்பு நடந்துச்சுன்னு அம்மா, கேட்க அதை நிலாகிட்டே கேளுங்க. அவ ஒரு கதை சொல்லுவா. அதை நம்பி என்னையே நீங்க திட்டுவீங்க. விட்ருங்கம்மான்னு சொல்லிட்டு ஸ்வேதா வீட்டுக்கு போயிடறாங்க.
மாப்பிள்ளை வீட்டை விட்டு வெளியில் வந்தால் செல்லாக் காசுன்னு நினைச்ச ஸ்வேதாவின் அம்மா கவுசல்யா, என்னாச்சு மாப்ளே..இப்படி உள்ளதும் போச்சேன்னு மனசுக்குள்ள நினைக்கறாங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications