எட்டிப்பார்த்து ஏக்கம் கூட்டும் நிவிஷா... சொன்ன நல்ல செய்திக்கு ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தான் மீண்டும் சீரியலில் நடிக்கப் போவதை தன்னுடைய ரசிகர்களுக்கு சில்லென்ற அழகில் சிலிர்க்க வைக்கும் வார்த்தைகளால் நிவிஷா தெரியப் படுத்தியிருக்கிறார்.

சில நாட்களில் போஸ்ட் போடவில்லையே என்று ஏங்கி போய் இருந்த நிவிஷாவின் ரசிகர்களுக்கு தற்போது இவர் சீரியலில் மீண்டும் வருகிறார் என்ற செய்தி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

அதுவும் கலர்ஸ் டிவியில் மகா சங்கமத்தில் இவர் இணைவதை கொண்டாட ரசிகர்கள் குதூகலத்துடன் ரெடியாகி விட்டனர்.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ஒரு சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் நிவிஷா போஸ்ட் போடவில்லையே என்று இவருடைய ரசிகர்கள் ரொம்பவே தேடிக் கொண்டிருந்தனர். இவருடைய பழைய போஸ்டுக்கு கூட பலர் கமெண்டுகளை போட்டுக் கொண்டிருந்தனர். எங்க தலைவி எங்கே சென்று விட்டீர்கள்
என்றும், பலர் தலைவியை காணவில்லையே என்றும் இவருக்கு கமெண்ட்கள் பறந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் நிவிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் லைக்குகளை குவிக்க அவருடைய ரசிகர்கள் ரெடி ஆகி விட்டனர். போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் கேப்ஷனை பார்க்கவில்லை.பின்புதான் கேப்ஷனை பார்த்திருக்கிறார்கள். பார்த்ததும் சந்தோசத்தில் கமெண்ட்களையும் குவிக்கிறார்கள்.

சத்தியாவின் தங்கச்சி

சத்தியாவின் தங்கச்சி

தெய்வமகள் சீரியலில் சங்கீதா கேரக்டரில் அறிமுகமாகி முதல் சீரியல்களில் அவ்வளவு பிரபலமாகவில்லை என்றாலும் இவருடைய கேரக்டர் ஒரு சில நாட்களே அந்த சீரியலில் வந்தாலும் கதைக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்து விட்டது. அதனால் பலர் இவரை முதல் சீரியலே மறக்காமல் இருந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இவருக்கு தெய்வ மகளுக்கு பிறகு வந்த வாய்ப்புகள் எல்லாமே நெகட்டிவ் ரோல்கள் தான் ஆனாலும் அதிலும் எனக்கு கைவந்த கலைதான் என்று தன்னுடைய இன்னொரு முகத்தை சீரியலில் காட்டி வந்தார். முதலில் இவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்பதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இவரிடம் இந்த மாதிரி ரோல்களில் நீங்க நடிக்காதீங்க என்று கேட்டுக் கொண்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் நெட்டிசன்கள் கண்டமேனிக்கு இவரை கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆரம்பத்தில் இவரும் நெட்டிசன்கள் கமெண்ட் களுக்கு செவிசாய்க்காமல் தான் இருந்து கொண்டிருந்தார். தனக்கு வரும் கமெண்டுகள் கூட தன்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்று தான் கூறிக்கொண்டு இருந்தார்.

இந்தப் பார்வையே போதுமே

இந்தப் பார்வையே போதுமே

சீரியல் நடிகைகள் பலர் சீரியலில் மட்டுமல்லாமல் சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளத்திலும் பிஸியாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தோடு இருக்கின்றனர். அதேபோலத்தான் இவரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் கொடிகட்டி பறந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இவருக்கு இதுவரைக்கும் 537 கே பாலோவர்ஸ் இருக்கின்றனர். தன்னுடைய ரசிகர்களுக்கு அதிகமாக ரேஸ்பெக்ட் கொடுக்கும் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் லைவில் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். ஆனால் இப்பதான் ஒரு சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போஸ்ட்களை போடவில்லை. இது சில ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக தான் தெரிந்து கொண்டிருந்தது. பொதுவாக இவருடைய போஸ்ட்கள் பல புடவையிலும், மாடர்ன் உடையிலும் இருக்கும் அதிலும் அதிகப்படியாக புடவையில் தான் இருக்கும். புடவையில் தன்னுடைய முன்னழகு பின்னழகு என்று விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்து இருப்பார்.

உண்மையில் கேரக்டர் அப்படி அல்ல

உண்மையில் கேரக்டர் அப்படி அல்ல

தொடர்ந்து இவர் நெகட்டிவ் ரோல்களில் நடித்துக் கொண்டிருந்ததால் தனக்கு அதிகப்படியான நெகட்டிவ் கமெண்டுகள் வருகிறது. உண்மையில் தன்னுடைய கேரக்டர் அது அல்ல ரொம்பவே சாப்டான கேரக்டர்தான், அதனால் தொடர்ந்து இந்த மாதிரி நெகட்டிவாக நடிப்பதற்கு பெரிய கஷ்டமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது, அதனால் இனி நெகட்டிவ் ரோல்களில் நடிக்க மாட்டேன் என்று இவர் நடித்துக் கொண்டிருந்த ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்த சீரியலில் இருந்து இவர் விலகிய பிறகும் கூட பல சீரியல்கள் இவருக்கு நெகட்டிவ் ரோல் ஆகவே வந்துகொண்டிருக்கிறது. இதனாலே கடந்த இரண்டு வருடமாக இவர் எந்த சீரியலிலும் நடிக்க வில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக தான் இருந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் நடித்தால் ஹீரோயினியாக தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்து கொண்டிருந்தார்.அது மட்டுமல்லாமல் தனக்கு சினிமாக்களில் எல்லாம் நடிப்பதற்கு ஆசை கிடையாது, சீரியலில் மட்டும்தான் கதாநாயகியாக நடித்தாலே போதும் என்று உறுதியாக இருந்தார்.

அட இப்போ...துர்கா வா?

அட இப்போ...துர்கா வா?

தற்போது அவருடைய ஆசைப்படியே இரண்டு வருடங்களுக்கு பிறகு அவருக்கு கலர்ஸ் டிவியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் மகா சங்கமம் நடந்துகொண்டிருக்க இந்த சீரியலில் தான் இவர் துர்கா கேரக்டரில் களமிறங்கியிருக்கிறார். இதற்காக ப்ரோமோவை கலர்ஸ் டிவி வெளியிட்டுவிட்டது. அந்த சந்தோசமான விஷயத்தை கலக்கலான போட்டோவில் தன்னுடைய ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்டதும் அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். அதுவும் இவர் வெளியிட்ட போட்டோவில் அழகான பூவை கையில் வைத்துக்கொண்டு சிரித்த முகமாக இவர் மலர்ந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு பூவே பூவை கொஞ்சிக் கொண்டு இருக்கிறது. இதில் எதை கொஞ்சுவது என்று தெரியவில்லையே என ஒரு பட்டிமன்றமே போய்க்கொண்டு இருக்கிறது. எது எப்படியோ மீண்டும் சீரியலில் காலடி எடுத்து வைத்த நிவிஷா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம்வர வேண்டும் என்றுதான் அவருடைய ரசிகர்கள் மனது துடித்துக் கொண்டிருக்கிறது. இனி எப்படியும் அவரும் பழையபடி களமிறங்கி விடுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+