கமல்ஹாசன் என் கல்யாணத்தில் செய்த உதவி.. மறக்க முடியாது! நடிகர் நிழல்கள் ரவி உருக்கம்
சென்னை: கமல்ஹாசன் குறித்து நிழல்கள் ரவி பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தன்னுடைய திருமண நேரத்தில் தான் கஷ்டத்தில் இருந்த போது தனக்காக கமல்ஹாசன் செய்த உதவி குறித்து நிழல்கள் ரவி பெருமையாக பேசி இருக்கிறார்.
நடிகர் நிழல்கள் ரவிக்கு அறிமுகமே தேவையில்லை. 70ஸ் காலகட்டத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இப்ப வரைக்கும் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் ஆரம்பத்தில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தாலும் அதற்குப் பிறகு வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறது. இப்போது காமெடியான கேரக்டரிலும் கூட நடித்துக் கொண்டிருக்கிறார்.

நிழல்கள் ரவி நடித்த திரைப்படம்
சமீபத்தில் கூட நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு இப்போது உள்ள குழந்தைகள் வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அதுபோல நடிகர் கமல்ஹாசனுக்கும் அறிமுகம் தேவை இல்லை. அவர் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து கொண்டு இருக்கிறது.
ரசிகர்கள் விருப்பம்
கமல்ஹாசன் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்திற்கு அதிகமான நெகட்டிவ் கமாண்டுகள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு சில பிரபலங்கள் இந்த திரைப்படத்தை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
கமல்ஹாசன் பற்றிய சர்ச்சை
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசிய வழக்கு இப்ப வரைக்கும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் கமல்ஹாசன் தனக்கு செய்த உதவி குறித்து நடிகர் நிழல்கள் ரவி உருக்கமாக பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் நானும் கமல்ஹாசன் சாரும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தான் எனக்கு திருமணம் நிச்சயமானது. திருமணத்திற்கு கோட் சூட் போட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். ஆனால் இப்போதுள்ள மாதிரி அப்போது சூழ்நிலைகள் கிடையாது.
கோட் பிரச்சனை
கோட் தைக்க வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கு ரெடி பண்ண வேண்டும். அப்போது தான் கிடைக்கும். ஆனால் கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் நாங்கள் இந்த முடிவு எடுத்தோம். இது பற்றி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். பிறகு வேறு வழியில்லாமல் கமல்ஹாசனிடம் பேசினோம். உடனே அவர் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளரை கோட் ரெடி பண்ண சொல்லிவிட்டார்.
கமல்ஹாசன் செய்த உதவி
அதுவும் கல்யாணத்துக்கு முதல் நாளே என்னுடைய வீட்டிற்கு கோட் வந்துவிட்டது. இதனால் என்னால் திருமணத்தில் பதட்டமில்லாமல் இருக்க முடிந்தது. இதுபோன்று ஒரு பெரிய நடிகர் யாருக்கும் உதவி செய்வார்களா? என்றால் சந்தேகம் தான். ஆனால் கமல்ஹாசன் அவரிடம் என்ன உதவி கேட்டாலும் உடனே செய்து விடுவார் என நிழல்கள் ரவி பேசியிருக்கிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications