Tamil Selvi Serial: என்னாது அக்கினி குண்டத்துல அடிபிரதட்சணமா? என்னங்கடா சொல்றீங்க!
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில், தமிழ்ச்செல்வி அக்கினி மிதிப்பதோடு, அக்கினியில் அடிப்பிரதட்சணம் செய்யணுமாம்.
புருஷன் உயிருக்கு ஆபத்து வராம காப்பாத்த பொண்டாட்டி செய்யற பரிகார பிரார்த்தனையாம் இது.
உயிர் போற அளவுக்கு பரிகாரம் செய்தால்தான், புருஷன் உயிருக்கு ஆபத்து வராம காப்பாத்திக் கொண்டு வர முடியும்னு ஒரு ஐயர் டயலாக் பேசறார்..

பகல் நேர சீரியல்கள்
சன் டிவியின் பகல் நேர சீரியல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கிறது. இதில் மகராசி, சாக்லேட் இரண்டும்தான் பரவாயில்லை ரகம். மற்றது எல்லாமே மூட நம்பிக்கையை ஓவராகத் தட்டி எழுப்பவுது போலவும், ஒருத்தருக்கு ஒருத்தர் குத்துகிறேன்.. கொலை செய்கிறேன் என்று வெறிப் பிடித்து அலைவது போலவும்தான் கதை.

அமுதன் தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்வி சீரியல் கதையை ஆரம்பத்தில் அவள் ஏதோ குக்கிராமத்தில் பிறந்து கலெக்டருக்கு படிக்க ஆசைப்படும் பெண் என்று காண்பித்தார்கள். அதற்கு அவள் குடும்பமும் ஒத்துழைப்பு கொடுத்து படிக்க வைப்பது போல் காண்பித்தர்கள். சரி பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கதை என்று பார்த்தால், அவள் படித்து முடிப்பதற்குள் அமுதனுடன் கல்யாணம் நடந்து விடுகிறது.

குழந்தை பிறந்தால்
அமுதனுக்கும் தமிழ்ச்செல்விக்கும் குழந்தை பிறந்தால் அமுதன் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர் சொல்கிறாராம். இதனால், முதலில் மாமியார் கொடுமை செய்கிறார்கள். பிறகு மாமியார் மருமகளிடம் சுமுகமாக பேசி, உண்மையை கூற, இவள் ஒரு ஜோதிடரை பார்க்கிறாள். அவரும் அதையே சொல்கிறாராம்.

குழந்தை வேண்டாம்
இதனால் குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுக்கும் தமிழ்ச்செல்வி, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துக்கறாளாம். டாக்டர் கல்யாணம் ஆகாத பொண்ணுன்னு தெரிஞ்சு ஆபரேஷன் செய்யாம விட்டுட்டு அனுப்பி வச்சுடறாங்க. இதனால் தமிழ்ச்செல்வி குழந்தை உண்டாகிடறா.

மாமியார் கோபம்
மாமியார் கோபமடைஞ்சு மருமகளை அடிக்கறாங்க.. அபார்ஷன் பண்ண அழைச்சுட்டு போறாங்க. அங்கேதான் தமிழ்ச்செல்வியம், மாமியாரும் நிலா குடும்பம் மெகா சங்கமத்தில் நிலாவை சந்திக்கறாங்க. நிலாவின் அம்மாவை சந்திக்கறாங்க. அவங்க அபார்ஷன் பண்றது தப்பு.. இதுக்கு பரிகாரம் இருக்காதா? ஜோதிடர் கிட்டே கேளுங்கன்னு சொல்ல, அப்போதுதான் ஜோதிடர் அக்கினியில் அடிபிரதட்சணம் செய்யறதை சொல்றார்.

அக்கினியில் அடிபிரதட்சணம்
அக்கினியில் அடிப்பிரதட்சணம் செய்வது என்பது இதுவரை வழக்கத்தில் இல்லாத ஒன்று. இதை எல்லாம் இவங்களுக்கு யார் சொல்லித் தர்றது? இதை மனசில வச்சுக்கிட்டு சில பெண்கள் வேண்டுதல் வச்சா நீங்க என்ன பண்ணுவீங்க? கதை என்றாலும் ஒரு நியாயம் தர்மம் வேணாமா?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications