Oneindia special: பிக்பாஸ் 8 “இவர்”தான் தொகுப்பாளர்.. உடைத்து பேசிய மக்கள் கருத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் எட்டாவது சீசனில் இருந்து விலகப்போவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் ஒன் இந்தியா தமிழ் ரசிகர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு கேட்டிருக்கின்றனர். இதில் அடுத்த யார் தொகுப்பாளராக வந்தால் நன்றாக இருக்கும் என்று பல மக்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து இருக்கின்றனர். அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வெற்றியைப் பார்த்து தமிழில் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கப் போகிறார் என்று சொன்னதும் அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா மற்றும் சீரியல் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்தனர்.

பிறகு ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அதிகமாக பேசப்பட்டது. கடந்த ஏழு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் எட்டாவது சீசன் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருக்கும் நிலையில் கமல்ஹாசன் தான் இந்த சீசனில் இருந்து விலக போவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதோடு தனக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன் என்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று ஒன் இந்தியா தமிழ் ரசிகர்களின் இடம் நேரடியாக கேள்வி கேட்டிருக்கிறது. அதில் பல ரசிகர்கள் கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சிக்கு அடையாளமாக இருக்கிறார், அவர் இந்த நிகழ்ச்சிக்கு மீண்டும் வரவேண்டும் என்று கருத்து கூறி இருக்கிறார்கள்.
கமல்ஹாசன் இதுவரைக்கும் தொகுத்து வழங்கியதால் தான் எங்களுக்கு நிகழ்ச்சி பிடித்தது, பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எங்களுக்கு கமல்ஹாசன் தான் நினைவுக்கு வருகிறார் என்று பலர் கருத்து கூறியிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே சிம்பு கமல்ஹாசன் கொரோனா பாதிக்கப்பட்டு ரெஸ்ட்டில் இருந்த நேரத்தில் சில எபிசோடுகளை தொகுத்து வழங்கி இருந்தார்.
அதுபோல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் சிம்பு தொகுத்து வழங்கி இருந்த நிலையில் அவரே இந்த நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக இருப்பார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் நடிகை நதியா இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வரலாம் என்று கூறி இருக்கின்றனர். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன? யார் வந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நீங்கள் நினைக்கிறீங்க? உங்க கருத்துக்களை தெரிவிக்கலாம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications