ஒரிஜினல்.. கோடீஸ்வரன்.. மாமா.. உணர்ச்சி வசப்பட்ட ராதிகா சரத்குமார்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக ராதிகாவிடம் பேச சரத்குமார் லைனில் வந்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பங்கேற்பாளர் போஸ்ட்வுமென் மீனா சரத்குமார் ரசிகையாம்.
சரத்குமாரின் படங்களை வரிசையாக சொல்லி அவரின் நடிப்பைப் பாராட்டினார்.

நாட்டாமை சூரியவம்சம்
வெள்ளிக்கிழமை கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போஸ்ட் வுமன் மீனா சரத்குமாரின் தீவிர ரசிகையாம். அதை ராதிகாவிடம் சொல்லி மகிழ்ந்தார். அவரை கேட்டதாக சொல்லுங்கள் என்றும் சொன்னார். அத்தோடு சூரிய வம்சம், நாட்டாமை போன்ற சரத் குமாரின் படங்கள் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கூறினார்.

நீர் வடிந்தால்
படங்களில் நடிக்கும் அவர் கண்ணில் நீர் வடிந்தால் தன் கண்ணில் நீர் வடியும் என்றும், அந்த அளவுக்கு தான் சரத் குமாரின் ரசிகை என்றும் கூறிய மீனா. இப்போது அவருக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ராதிகா கொஞ்சம் சந்தேகமாக ஹலோ என்று கூற மறுமுனையில் ஆண் குரல் ஹலோ என்றது.

வாணி ராணி
உங்கள் சித்தி வாணி ராணியிடம் பேசலாமா என்றபடி சரத்குமார் லைனில் வந்தார். ஹலோ.. ஒரிஜினல் கோடீஸ்வரன்.. மாமா.. நீங்களா பேசறீங்க மாமா என்று உணர்ச்சி வசப்பட்டார் ராதிகா. எப்படி மாமா இருக்கீங்க ஷூட்டிங்கில் இருக்கீங்களா என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார் ராதிகா.

சரத்குமாரிடம் பிடித்தது
சரத்குமாரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று மீனா கேட்டபோது, அவரின் உடல் ஸ்ட்ராங்க் மட்டும் அல்ல, உள்ளத்தின் ஸ்ட்ராங்க் ரொம்ப பிடிக்கும். விடா முயற்சியும் ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். சரத்குமார் மீனாவிடம் நிகழ்ச்சி எப்படி இருக்கிறது என்கிற விவரங்களை கேட்டுக் கொண்டு இருந்தார் சரத்குமார்.
அப்போது பேசிய ராதிகா, என்ன மாமா என்கிட்டே பேச லைனில் வந்துட்டு, அவங்ககிட்டே பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த சரத்குமார், இல்லைமா, நிகழ்ச்சி எப்படி போகுதுன்னு கேட்டேன்னு சொன்னார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications