ஓடிடியில் வெளியானது குட் பேட் அக்லி.. அதுவும் எந்த தளத்தில் தெரியுமா? போட்டிக்கு இந்த படங்களும் வருது
சென்னை: நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் உட்பட மே 8ம் தேதி முதல் 16ஆம் தேதி வரைக்கும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. எந்த தளத்தில் வெளியாகி இருக்கிறது என்று பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் திரையரங்குகளில் புது படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆவதை போல ஒவ்வொரு வார இறுதியிலும் ஏராளமான புதுப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படங்களை தியேட்டரில் மிஸ் பண்ணுபவர்கள் வீட்டில் இருந்தபடியே ஓடிடியில் பார்த்து விடுகிறார்கள். சிலர் திரைப்படங்களில் ரிவ்யூவை பார்த்து விட்டு தியேட்டரில் பார்க்க மறுத்தாலும் ஓடிடி நேரம் கிடைக்கும் போது அந்த படங்களை பார்த்து விடுகிறார்கள்.
அதேபோல இந்த வாரம் தியேட்டரில் எட்டு படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் ஓடிடியிலும் அதற்கு போட்டியாக அதிகமான படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இந்த வரிசையில் அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், ஜி5, சோனி லைவ் போன்ற ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ள படங்களில் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.

குட் பேட் அக்லி ஓடிடி
நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி தியேட்டரில் வெளியான நிலையில் இன்று மே 8ஆம் தேதி ஓடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த திரைப்படம் நெட்பிக்ஸ் ஓடிடிதளத்தில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக ரெட் டிராகன் என்கிற கேரக்டரில் அஜித் குமார் நடித்திருந்தார். திரைப்படம் வெளியான நாளிலிருந்து நான் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளையும் சந்தித்தது. ஆனாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்று இருந்தது. இந்த திரைப்படம் இப்போது ஓடிடிக்கு வந்திருக்கிறது. இதற்கு போட்டியாக சில திரைப்படங்கள் வருகிறது. அதையும் பார்க்கலாம்.

அஸ்திரம்
நடிகர் ஷியாம் கதாநாயகனாக நடித்த அஸ்திரம் திரைப்படம் இந்த வாரம் ஒடிடியில் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் மே 9ஆம் தேதி (நாளை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியிருக்கிறார்.

10 ஹவர்ஸ்
நடிகர் சிபிராஜ் நடிப்பில் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் வெளியான டென் ஹவர்ஸ் (10 hours) திரைப்படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் தியேட்டரில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. அதுவும் வருகிற மே 9 அதாவது நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications