புத்தாண்டில் ரசிகர்களுக்கு புத்துணர்வு ஊட்டிய ஓவியா...அந்த நாட்களை நினைத்து ஏங்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு தினத்தில் ஜிகுஜிகு உடையில் ஓவியா தன்னுடைய ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எத்தனை பிக் பாஸ் சீசன்கள் வந்தாலும் ஓவியாவை போன்று யாரும் இல்லையே என்று பல ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள்.

ஏங்க வைக்கும் அந்த சிரிப்பு

ஏங்க வைக்கும் அந்த சிரிப்பு

திரைப்படங்களில் தன்னுடைய தனித்துவமான அழகையும் சிரிப்பையும், நடிப்போடு காட்டி அனைத்து இளைஞர்களையும் தன்வசப்படுத்தி இருக்கும் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் வேற லெவலில் பிரபலம் ஆகிவிட்டார். இவருடைய அந்த துருதுரு கேரக்டரில் அவருக்கே உரிய நக்கல் பேச்சும் யாரும் அடித்துக்கொள்ள முடியாது என்று பலர் கூறி வருகின்றனர். தற்போது ஐந்தாவது சீசனில் பிக்பாஸ் முடிவடைய இருக்கும் நிலையிலும் ஓவியாவை தான் பல ரசிகர்களும் தேடி வருகின்றனர்.

இளைஞர்களை கவர்ந்த கனவுக்கன்னி

இளைஞர்களை கவர்ந்த கனவுக்கன்னி

களவாணி திரைப்படத்தில் பள்ளி குழந்தையாக இளைஞர்களை தன்னுடைய அந்த துறுதுறு பார்வையாலே கவர்ந்துவிட்டார். பல காலேஜ் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில் அட்டைப்படமாக சிரித்துக் கொண்டிருந்த ஓவியாவை தற்போது திரைப்படங்களில் அதிகமாக காணமுடியவில்லை என்று அவருடைய ரசிகர்கள் ஏங்கி போயிருக்கின்றனர். புது படங்களில் அவர் நடித்தால் அவருடைய அட்ராசிட்டி தற்போது வேற லெவல் இருந்து வருகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவ முத்தத்தால் பேமஸ்

மருத்துவ முத்தத்தால் பேமஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் யாருக்கும் அடிபணியாமல் தன்னுடைய கேரக்டரில் எப்போதும் பின்வாங்க மாட்டேன் என்று தனக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தைரியமாக விளையாடிய ஓவியாவை பார்த்து பல ரசிகர்கள் ஏங்கி போய் இருந்தனர். எப்போதும் தன்னுடைய துறுதுறு பேச்சால் அனைவரையும் கவர்ந்து இழுத்து வந்த இவர் மருத்துவ முத்தத்தால் அதிகமாக பேமஸ் ஆகி விட்டார். இவர் ஆரவ் மீது வைத்திருந்த அன்பை பார்த்து பலர் இளைஞர்கள் பொறாமைப் பட்டுக் கொண்டிருந்தனர்.

குறையாத அன்பு தான் காரணம்

குறையாத அன்பு தான் காரணம்

ரசிகர்களின் செல்ல தலைவியாக வலம் வந்துக்கொண்டிருந்த ஓவியா விடம் ஜூலி சண்டை இழுத்ததால் இப்ப வரைக்கும் ஜூலியை ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். எந்த நேரத்திலும் எவ்வளவு போட்டோ ஷூட் எடுத்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதற்கு காரணம் ஓவியாவின் மீது வைத்திருக்கும் அன்பு தான் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தன்னுடைய ரசிகர்களுக்காக புத்தாண்டு தினத்தில் கலக்கலாக வாழ்த்துக்களை கூறி அனைவரையும் கிறங்கடித்து இருக்கிறார். ஓவியாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+