Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வி.. மேடையில் பதிலடி கொடுத்த நடிகை! இப்படி பேசிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் திரைப்படமாக, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'மருதம்' இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து பத்திரிக்கையாளர்களுக்குத் திரையிடப்பட்டபோது, படத்தின் நாயகி ரக்‌ஷனாவிடம் பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வி, அதற்கு அவர் கொடுத்த பதிலடி இரண்டும் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது!

Paayilvaan Ranganathan Rakshana Vidhaarth

உணர்வுப்பூர்வமான படைப்பு

இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மருதம்' திரைப்படத்தில், ரக்‌ஷனா, அருள் தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்தப் படம், ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இயக்குநர் கஜேந்திரன், தன் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டத்தில் நண்பனுக்கு நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விதார்த், "படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. நாயகி ரக்‌ஷனா மற்றும் சிறுவனாக நடித்த பையன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். இசையமைப்பாளரின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது" என்று படக்குழுவை வெகுவாகப் பாராட்டினார். மேலும், "இந்த ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது உங்களுடைய கைகளில் தான் இருக்கிறது" என்றும் பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

பயில்வானின் கேள்விக்கு பதிலடி

விழாவின்போது, பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், நடிகை ரக்‌ஷனாவைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார். அதுதான் இப்போதைய ஹாட் டாபிக்! "உங்களுக்கு இது முதல் படம். அதிலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து விட்டால், அடுத்த படத்தில் நடிப்பதற்கு எப்படி வாய்ப்புக் கிடைக்கும்?" என்று அக்கறையுடன் கேட்பது போலக் கேள்வி எழுப்பினார்.

சற்றும் தயங்காமல் பதில் அளித்த ரக்‌ஷனா, "நான் இரண்டாவது படத்தில் நடித்து விட்டேன். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அந்தப் படத்தின் இயக்குநர் என்னைக் கூப்பிட்டு இப்படி ஒரு கேள்வியைக் கேட்கவில்லை" என்று கூலாகச் சொல்லி, முதல் அடியைக் கொடுத்தார்.

இதை நிறுத்தாத பயில்வான், "நான் உன்னுடைய நன்மைக்காகத்தான் சொல்கிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படி நடித்ததால்தான் அவருக்குப் பட வாய்ப்பு இல்லை" என்று மீண்டும் ஒரு 'ஃப்ரீ அட்வைஸ்' கொடுத்தார்.

கதாநாயகியின் பதிலடி

பயில்வானின் இந்த 'தாய்மை வேட அட்வைஸ்' பற்றிப் பேசிய ரக்‌ஷனா, சரியான பதிலடி கொடுத்து அசத்தினார். "ஐஸ்வர்யா ராஜேஷ் 'காக்கா முட்டை' திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் மூலம் அவருக்கு எவ்வளவு பெரிய பெயர் கிடைத்தது என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? ஐஸ்வர்யா ராஜேஷுக்கு என்று சினிமாவில் ஒரு தனிப் பெயர் இருக்கிறது." என்று ஐஸ்வர்யா ராஜேஷ் மீதான மரியாதையை வெளிப்படுத்தினார்.

மேலும் அவர், "இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்து விட்டால், அதன் பிறகு தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்கள் என்கிற ரூல் இங்கே இருக்கிறது. அப்படி ஒரு ரூலை இங்கே இருப்பவர்கள்தான் வகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த ரூலை யாராவது பிரேக் செய்ய வேண்டும். அதை உடைக்க சினிமாவிற்கு யாராவது வர வேண்டும், அது நானாகவே இருப்பேன்" என்று துணிச்சலான பதிலைக் கூறி, பழைய சினிமா சம்பிரதாயங்களை உடைத்தெறியும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். இது அங்கிருந்த எல்லோரும் பாராட்டி இருந்தனர். அதுவரைக்கும் அமைதியாக இருந்த நடிகர் விதார்த் கதாநாயகியின் பேச்சைக் கேட்டு கைதட்டி பாராட்டி இருந்தார்.

நடிகை ரக்‌ஷனாவின் இந்தத் துணிச்சலான பேச்சு, சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இத்தகைய அடக்குமுறைகளை உடைத்து, ரக்‌ஷனா சினிமாவில் சாதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+