பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: “தங்கமயில்” குடும்பம் இவ்வளவு பெரிய ரவுடியா? இதை கவனிச்சீங்களா? பாண்டியன் பாவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஏப்ரல் 4ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாண்டியன் தன்னுடைய மூத்த மகனுக்கு அமைதியான ஒரு மருமகளை கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சுயம்வரத்தில் பார்த்த குடும்பத்தை பேசி முடித்து விடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

ஆனால் இன்று தான் தங்கமயில் குடும்பத்தையே எபிசோடில் காட்டி இருக்கின்றனர். அதில் தங்கமயில் குடும்பத்தினர் சின்ன சின்ன பிரச்சனைகளையும் கூட பெரிதுபடுத்தி பக்கத்து வீட்டில் சண்டை போடும் நபர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Pandian Store Season 2 April 4th Promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடில் கோமதி தன்னுடைய இளைய மகன் கதிர் வேலைக்கு போனது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார். அதில் தன்னுடைய மனைவிக்காக கதிர் உணவு டெலிவரி செய்யும் வேலையை பார்த்ததால், அது உனக்கு கஷ்டமா இல்லையா என்று கோமதி விசாரிக்க, அதற்கு கதிர் எனக்கு கஷ்டமா எல்லாம் இல்லமா சரியான நேரத்திற்கு நான் சாப்பாட்டை கொண்டு போய் கொடுத்து விடுவதால் அவர்கள் என்னை எதுவும் திட்ட மாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதோடு நீங்க மளிகை கடைகளில் இருந்து பொருட்களை எடுத்து கொண்டு போய் எப்படி டெலிவரி செய்கிறீர்களோ அதுபோலத்தான் நான் ஹோட்டலில் சமைத்த உணவை வாங்கி வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து தன்னுடைய மூத்த மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று பாண்டியன் கோவிலில் பூ போட்டு பார்த்ததாகவும் அவர்கள் சுயம்வரத்தில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து வைக்கலாம் அது பற்றி இனி மேற்கொண்டு பேச்சை தொடங்கலாம் என்று சம்மதம் கிடைத்து விட்டதாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்.

அதோடு பாண்டியன் எனக்கு பிடிச்ச அந்த குடும்பம் ரொம்ப அமைதியானது என்று அவர்களைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் மறுபக்கத்தில் சரவணனுக்கு பார்த்த தங்கமயில் குடும்பத்தினர் பக்கத்து வீட்டினர் தங்களுடைய வீட்டில் முன்பு பைக்கை நிறுத்தி விட்டார்கள் என்று தெருவில் நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Pandian Store Season 2 April 4th Promo and episode full update

அம்மாவும் அப்பாவும் சண்டை போடுகிறார்கள் என்றால் தங்கமயிலும் ரோட்டில் நின்று சண்டை போட்டு வாயாடி கொண்டிருக்கிறார். பாண்டியனின் வீட்டில் ரொம்பவும் அமைதியான கேரக்டராக இருக்கும் சரவணனுக்கு பார்த்திருக்கும் தங்கமயில் அவருக்கு ஆப்போசிட்டாக இருக்கிறார். ஆனால் பெண் பார்க்கும் போது மட்டும் அமைதியின் சிகரமாக மொத்த குடும்பமும் நடித்து இருந்தார்கள்.

Pandian Store Season 2 April 4th Promo and episode full update

இப்போது இவர்களுடைய சுயரூபம் வெளியே தெரிந்திருக்கிறது. அதே நேரத்தில் தங்கமயிலின் அப்பாவுக்கு பாண்டியன் ஃபோன் பண்ணி நாங்க நாளைக்கு பொண்ணு பாக்க வரோம் என்று சொல்ல, அதற்கு அவர் தான் என் பொண்டாட்டி கிட்ட கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என்று சொல்லி பொண்டாட்டியிடமும் பேசுகிறார்.

கயல் சீரியல் அட்ராசிட்டி.. தனுஷ் படத்தை தொடர்ந்து அஜித் படம் காப்பி.. இப்படியா பண்ணி வைப்பாங்க?
ஆனால் தங்கமயிலுக்கு இதைக் கேட்டு முகம் மாறுகிறது. இதனால் தங்கமயிலுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா? என்ற சந்தேகம் தான் வருகிறது. தங்கமயில் குடும்பத்தோடு இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. ஆனால் இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+