முல்லை வளைகாப்புக்கு கிளம்பிய ஜீவா- மீனா..கடைசி நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனை..குழப்பம் செய்த ஐஸ்வர்யா
சென்னை: முல்லையின் வளைகாப்புக்கு கண்ணனும் ஐஸ்வர்யாவும் வந்து இருக்கின்றனர்.
கண்ணன் அண்ணனைப் போல சட்டை அணிந்து இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.
ஜீவாவும், மீனாவும் வீட்டில் இருந்து கிளம்பும்போது ஜனார்த்தனன் தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஏப்ரல் 20ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் முல்லையின் வளைகாப்புக்காக அனைவரும் மண்டபத்திற்கு வந்திருக்கின்றனர். அப்போது முல்லையின் அம்மாவும் அத்தாச்சியும் நிற்கின்றனர். அந்த நேரத்தில் முல்லையுடன், தனம், மூர்த்தி, கதிர் ஆகியோர் வருகின்றனர். இவர்களை தொடர்ந்து கண்ணனும், ஐஸ்வர்யாவும் வருகின்றனர்.

கண்ணன் ஐஸ்வர்யாவை கதிர் வரவேற்க மூர்த்தி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அந்த நேரம் ஐஸ்வர்யா பாத்தியா கண்ணா உனக்கு வேற கலரில் சர்ட் வாங்கி தந்துட்டு அவங்க வேற கலர்ல சர்ட் எடுத்திருக்காங்க என ஏத்தி விடுகிறார். இருந்தாலும் கண்ணன் தன்னுடைய அண்ணன் போலவே தானும் சட்டை போட்டிருப்பதை நினைத்து மனதிற்குள்ளே மகிழ்ச்சி அடைகிறார்.
இவர்களைத் தொடர்ந்து தனத்தின் அம்மாவும் முல்லையின் அக்கா என ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது தனம், ஜீவாவும் மீனாவும் வரவில்லையே என்று எதிர்பார்த்து அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஜீவாவும் மீனாவும் வீட்டில் இருந்து கிளம்பி பைக்கில் ஏறுகின்றனர்.

அப்போது ஜனார்த்தனன் நெஞ்சு வலிக்கிறது என்று நடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார். அதை பார்த்து மீனாவின் அம்மா மீனாவிடம் ஓடி வந்து அப்பாவுக்கு நெஞ்சு வலிக்கிறது என்று சொல்ல, ஜீவாவும் மீனாவும் பதறிப்போய் அவரைப் ஹாஸ்பிடலுக்கு தூக்கிகொண்டு ஓடுகின்றனர். தன்னால் மூச்சு கூட விட முடியவில்லை என்று ஜனார்த்தனன் ஹாஸ்பிடலில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications