மண்டபத்தில் ஜீவாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி.. கடைசி நேரத்தில் கேட்ட வார்த்தை..கண் கலங்கும் தனம்
சென்னை: முல்லையின் வளைகாப்பிற்கு ஜீவாவும், மீனாவும் வந்து விட்டனர்.
மண்டபத்தில் அண்ணன் தம்பிகள் ஒரு போல சட்டை அணிந்து இருப்பதை பார்த்து ஜீவா அதிர்ச்சியாகிறார்.
முல்லை வளைகாப்பிற்கு தன்னுடைய உழைப்பில் வாங்கிய நகையை கொடுத்து அனைவரையும் ஜீவா அதிர்ச்சியாக்குகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 22ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஜீவாவும் மீனாவும் வளைகாப்பு மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். அனைவரும் இவர்கள் இருவரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். கதிர் ஓடிப்போய் மீனாவையும் ஜீவாவையும் அழைத்து வருகிறார்.
ஜீவாவும் தன்னுடைய அண்ணன் தம்பிகள் போட்டிருக்கும் அதே கலரில் சட்டை போட்டு இருப்பதை பார்த்து ஒரு நிமிடம் திகைத்துப் போய் நிற்க, மொத்த குடும்பமும் பிரிந்து இருந்தாலும் ஒன்று போலவே யோசித்து இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு மண்டபத்தில் ஜீவாவும் மீனாவும் தனியாக ஒதுங்கி நிற்க, தனம், மீனா, ஐஸ்வர்யாவை மேடையில் நிற்க வைக்கிறார்.

பிறகு நலங்கு வைக்க ஆரம்பிக்கின்றனர். சந்தோஷமாக அனைவரும் நலங்கு வைக்கும் போது ஐஸ்வர்யாவின் சித்தி வளைகாப்பு பாடல் பாட அங்கே அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் போது கண்ணனை ஐஸ்வர்யா மேடையில் அழைக்க அங்கு கண்ணன் வருவதை பார்த்து மேடையில் இருந்த மூர்த்தி மேடையை விட்டு கீழே இறங்கி விடுகிறார். அதனால் ஐஸ்வர்யாவும் அண்ணனும் கோபமாகின்றனர்.
அடுத்ததாக மீனாவும் ஜீவாவும் போட்டோ எடுக்க மேலே வந்த போது, ஜீவா தான் வாங்கி வைத்திருந்த நகையை திறந்து காட்டி இது நான் மாமனார் வீட்டில் இருந்தாலும் சூப்பர் மார்க்கெட்டில் நான் செய்த வேலைக்காக பெற்ற சம்பளத்திலிருந்து வாங்கியது என்று கூறி, இது ஜீவா மீனாவின் கிப்ட் என சொல்ல, மூர்த்தியின் முகம் மாறுகிறது. கதிர் கண்கலங்குகிறார். ஏய் ஜீவா இப்படி எல்லாம் செய்கிறாய் என்று மீனா கேட்க, இதை சொல்லித்தான் ஆக வேண்டும் என்று ஜீவா சொல்கிறார்.
இதை பார்த்த ஐஸ்வர்யாவும் நாமளும் இப்படி சொல்ல வேண்டும் என்று சொல்ல, அடுத்ததாக ஐஸ்வர்யாவும் கண்ணனும் போட்டோ எடுக்கும்போது தாங்கள் வாங்கிய மோதிரத்தை இது கண்ணன் ஐஸ்வர்யாவின் கிப்ட் என்று கூறி கொடுக்கின்றனர். இதை பார்த்து முல்லையின் அக்காவும் அம்மாவும் இது என்ன கல்யாண வீட்டில் மொய் வைக்கிற மாதிரி எப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்ததாக அனைவரும் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியாக இருக்கின்றனர். டான்ஸ் ஆடி முடித்ததும் அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சமையல் யார் செய்தது நன்றாக இருந்தது என்று ஐஸ்வர்யாவின் சித்தி பேசிக் கொண்டிருக்க, அங்கே வரும் ஜீவா மீனா நம்ம கிளம்புவோமா? என்று கேட்கிறார். அதைக் கேட்டு மூர்த்தியின் முகம் மாறுகிறது. இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications