ஊதாரியாக செலவு செய்யும் ஐஸ்வர்யா.. தவிக்கும் கண்ணன்.. கோபத்தில் மீனா எடுத்த முடிவு.. பறிபோகும் வேலை
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் வாங்கும் சம்பளத்தில் ஐஸ்வர்யா அடுத்தடுத்த செலவுகளை வைக்கிறார்.
மூன்று மாதம் சம்பளம் வாங்கும் தொகையை மொத்தமாக ஒரே நாளில் ஐஸ்வர்யா செலவு செய்வதை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார்.
ஐஸ்வர்யா செய்யும் செயலை கடைக்கு வந்த மீனா பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

ஜீவாவிற்கு தெரிய வந்த பிரச்சனை
பாண்டியன் ஸ்டோர் சீரியல் அடுத்தடுத்த பல திருப்பங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது பிரிந்து இருக்கின்றனர். ஜீவாவின் மாமனார் செய்த செயலால் கடுப்பான மூர்த்தி ஜீவா என்னுடைய தம்பியே இல்லை இனி எங்களுக்கும் ஜீவாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை கடை விஷயமாக யாரும் ஜீவாவிடம் பேசக்கூடாது என்று ஒவ்வொரு கஸ்டமரிடமும் போன் செய்து மூர்த்தி சொன்ன விஷயம் இன்று ஜீவாவிற்கு தெரிய வந்திருக்கிறது.

மாமனாரின் சூழ்ச்சி
ஏற்கனவே ஜீவாவின் மாமனார் ஜீவாவிற்கு போன் செய்த நபரிடம் இனி பாண்டியன் ஸ்டோர் பிரச்சனை சம்பந்தமாக யாரும் இந்த நம்பருக்கு போன் பண்ண கூடாது என்று திட்டிய செயல் யாருக்கும் தெரியாமல் இருக்கும் நிலையில், தற்போது மீனாவின் அப்பாவான ஜனார்த்தனன் மூர்த்தி சொன்ன வார்த்தையை கேட்டு மேலும் ஜீவாவின் கோபத்தை தூண்டி விடுகிறார். இதனால் அடுத்த பிரச்சனை வெடிக்க காத்திருக்கிறது.

ஆடம்பர வாழ்க்கை
இந்த நிலையில் தனி குடித்தனம் போன ஐஸ்வர்யா கண்ணன் வாங்கும் சம்பளத்தில் தாராளமாக செலவு செய்கிறார். ஏற்கனவே முதல் நாளே விதவிதமாக சாப்பாடு செய்து வைத்து சினிமாவிற்கு சென்று வந்து என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்று தற்போது ஷோரூம் சென்று இருக்கின்றனர். அங்கே அந்த பொருள் இந்த பொருள் என்று விதவிதமாக ஐஸ்வர்யா வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறார்.

செலவு செய்யும் ஐஸ்வர்யா
அப்போது ஒரு லட்சத்திற்கு மேலே பொருள்களின் விலை வந்தபோது அதை கேட்டு கண்ணன் அதிர்ச்சியாகி இது கிட்டத்தட்ட என்னுடைய மூன்று மாத சம்பளம் ஐஸ்வர்யா என்று சொல்ல, அதெல்லாம் பார்த்துக்கலாம் கண்ணா என்று ஐஸ்வர்யா இதைப் பற்றி கொஞ்சமும் பொறுப்பில்லாமல் பேச, அங்கே எதார்த்தமாக கடைக்கு வந்த மீனா இதை பார்த்து அதிர்ச்சியாகிறார். இந்த எபிசோடு நாளை ஒளிபரப்பாக இருக்கிறது.

அடுத்து வருவது
இந்த நிலையில் மீனா இனி ஐஸ்வர்யாவிடம் சென்று இப்படி எல்லாம் செலவு செய்யாதே என்று சொல்லப்போக, இதை கேட்க நீங்க யாரு ? நீங்கள்தான் இந்த வீட்டை விட்டு வெளியே போயிட்டீங்களே, உங்க கூட இருக்கும் போதுதான் இப்படி தொந்தரவு பண்ணீங்க, இப்பவும் தொந்தரவு பண்ணுறீங்க என்று திட்டப் போகிறார். இதனால் மீனா மேலும் கோபமாகி கிளம்பப் போகிறார். அது மட்டும் அல்லாமல் கையில் செலவுக்கு பணம் இல்லாததால் கண்ணன் இனி பணத்திற்காக தவிக்கப் போகிறார். ஏற்கனவே கண்ணனால் வேலை இழந்த உயர் அதிகாரி வெளியே வந்து மீண்டும் கண்ணனை பழிவாங்க புது முயற்சிகளை எடுக்கப் போகிறார். அதனால் கண்ணனின் வேலையும் பறிபோக போகிறது. இதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யாவும் கண்ணனும் மீண்டும் மூர்த்தியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அந்த குடும்பத்தோடு சேர இருக்கிறார்கள் என்பது போன்று கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications