மீனாவால் அம்பலமான பிரச்சனை.. திட்டும் முல்லை..ஐஸ்வர்யாவிடம் அவமானப்படும் தனம்..எதிர்பாராத திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா EMIயில் பொருள் வாங்கி குவிப்பதை பார்த்து மீனா அதிர்ச்சி அடைகிறார்.

ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் செய்யும் செயலை பற்றி மீனா தனத்திடம் போட்டுக் கொடுக்கிறார்.

கடைசியில் அட்வைஸ் செய்யப் போன தனத்திற்கு ஐஸ்வர்யாவிடம் அவமானம் கிடைக்கிறது.

கடையில் சந்திப்பு

கடையில் சந்திப்பு

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் நான்காம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் டிவி மற்றும் வாஷிங் மெஷின் என வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக்கல் பொருள்கள் வாங்க கடைக்கு வந்திருக்கின்றனர். அதே நேரம் மீனாவும் கெட்டில் வாங்குவதற்காக கடைக்கு வந்து இருக்கிறார். மீனாவை பார்த்த கண்ணன் குட்டி அண்ணி எப்படி இருக்கீங்க என்று விசாரிக்க ஐஸ்வர்யாவின் முகம் மாறுகிறது.

மீனாவே அமைதியா ஆகிட்டாங்க

மீனாவே அமைதியா ஆகிட்டாங்க

பிறகு வேண்டா வெறுப்பாக மீனாவிடம் ஐஸ்வர்யா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா நீங்களும் வீட்டை விட்டு வந்து இருக்கக் கூடாது என சோகமாக பேச, இதற்கு ஐஸ்வர்யா நீங்க மட்டும் வரலாம் நாங்க வரக்கூடாதா? நாங்க செஞ்சா மட்டும் எப்பவுமே அது தப்புதான் என்ன என்று கேட்க? இதைப்பற்றி இதுக்கு மேல நான் எதுவும் பேசவில்லை என்று மீனா அமைதியாக மாறிவிடுகிறார்.

கடன் வாழ்க்கை தேவையா ஐஸ்வர்யா

கடன் வாழ்க்கை தேவையா ஐஸ்வர்யா

பிறகு இப்போ வாங்கிய பொருட்கள் பற்றி மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பிறகு வாங்கிய ஐஸ்வர்யா வாங்கிய பொருள்களின் விலை ஒரு லட்சத்திற்கு மேலே இருக்கும் நிலையில் அதை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். இதற்கு நான் என்னுடைய மூன்று மாத சம்பளம் முழுசா எடுத்து வைக்கணும் என்று சொல்ல, அதற்கு ஐஸ்வர்யா அப்படி முழுசா வேண்டாம். நாம இஎம்ஐயில் தானே வாங்குகிறோம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஐஸ்வர்யா கூறுகிறார்.

முல்லைக்கு கோபம் வந்துட்டு

முல்லைக்கு கோபம் வந்துட்டு

பிறகு வெளியே வந்த மீனா தனத்திற்கு போன் பண்ணி இங்கே நடந்த விஷயத்தை சொல்லுகிறார். நீங்க தான் அவங்களுக்கு எடுத்து சொல்லணும். அதிக விலைக்கு சாமான் வாங்கி இருக்கிறார்கள் எப்படி கட்டுபடியாகும் என்று தெரியவில்லை என்று கூறுகிறார். மீனா சொன்ன விஷயத்தை கேட்டு முல்லையும் திட்டுகிறார். இப்படித்தான் அவங்க சித்தியும் செய்வாங்க. என்ன தேவைப்படுற பொருள்னு பார்க்காம வந்த பொருளை எல்லாம் வீட்டுக்குள் வாங்கி குவிக்கிறது அவங்களோட வேலை. அதை பார்த்து வளர்ந்த ஐஸ்வர்யாவும் அப்படியே செய்கிறாள் என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

அவமானப்பட்ட தனம்

அவமானப்பட்ட தனம்

பிறகு நேரடியாக தனம் ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கே தனத்தை பார்த்த கண்ணன் நீங்க என்ன எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க என்று கேட்க, நான் வரக்கூடாதா என்று தனம் கேட்க, உள்ளே வாங்க என்று அழைத்து சென்ற பிறகு பொருட்களை பற்றி தனம் பேசியதை கேட்டு ஐஸ்வர்யா அவமானப்படுத்துகிறார். பிறகு இதுவெல்லாம் உங்ககிட்ட மீனா அக்கா போட்டு கொடுத்தாங்களா? வீட்டை விட்டு பிரிஞ்சு போன பிறகும் நீங்க எல்லாம் டச்சியில் தான் இருக்கீங்களா? என்று நக்கலாக கேட்கிறார்.

இதுதான் ஏத்தி விடறது

இதுதான் ஏத்தி விடறது

அவமானப்பட்டு தனம் ஐஸ்வர்யா டீ போட்டுக் கொடுத்தும் குடிக்காமல் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அவர் ஏன் இப்படி போனார் என்று கண்ணன் கேட்க அவருக்கு கடுப்புதான் நாம இவ்வளவு பொருள் வாங்கிட்டோமே என்று கடுப்பில் போடுகிறார் என்று ஐஸ்வர்யா கன்ணனை உசுப்பேத்துகிறார். கண்ணனும் அப்படிலாம் அண்ணி இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+