பாண்டியன் ஸ்டோரை காலி பண்ண நினைக்கும் மீனா அப்பா.. ஜீவா கொடுத்த பதிலடி.. பரபரப்பான தருணம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 4ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
கடையில் வியாபாரம் இல்லை என்று ஜனார்த்தனன் புது பிளான் போடுகிறார்.
ஜனார்த்தனன் பிளானால் பாண்டியன் ஸ்டோருக்கு பிரச்சனையாகி விடும் என்று ஜீவா மறுக்கிறார்.

வருத்தத்தில் ஜீவா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்த வண்ணமாகவே இருக்கிறது. ஏற்கனவே ஜீவா பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை விட்டு பெரிய சண்டை போட்டு மாமனார் வீட்டில் வந்து தங்கி இருக்கிறார். இனி அடுத்து என்ன செய்ய போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே மாமனார் தன்னிடம் சொல்லாமல் கயலை ஸ்கூலில் சேர்த்திருக்கிறார் என்று வருத்தத்தில் இருக்கிறார்.

போட்டுக் கொடுக்கும் ஐஸ்வர்யா
அதே நேரத்தில் ஜீவாவை தொடர்ந்து கண்ணன் ஐஸ்வர்யாவோடு தனி குடித்தனம் சென்று இருக்கிற ஐஸ்வர்யா வருமானத்திற்கு மேல் பொருள்களை வாங்கி குவித்து இஎம்ஐ கட்ட வைக்கிறார். இந்த நிலையில் இது தவறு என்று அட்வைஸ் செய்யப் போன தனத்திற்கு வழக்கம் போல பதிலடி கொடுத்து அவமானப்படுத்தி ஐஸ்வர்யா அனுப்பி வைத்துவிட்டு தனத்திற்கு நம்ம மீது பொறாமை அதனால் தான் இப்படி பேசிவிட்டு போகிறார் என்று வேற கண்ணனிடம் போட்டுக் கொடுக்கிறார்கள்.

ஜனார்த்தனன் புது பிளான்
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சூப்பர் மார்க்கெட்டில் வியாபாரம் இல்லை மாப்ள, சூப்பர் மார்க்கெட் ஓஹோன்னு நடக்கணும் அதுக்கு ஏதாவது ஐடியா சொல்லுங்க என்று ஜனார்த்தனன் ஜீவாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு பேசாம ஏதாவது அதிரடி ஆஃபர்ன்னு போட்டுருவோமா? என்று கேட்கிறார். அதற்கு நாம அவ்வளவு விலை குறைத்து கொடுத்தோம்னா சுத்தியிருக்குற கடை எல்லாம் அடி வாங்கிரும் என்று கூறுகிறார்.

ஜீவாவின் முடிவு
அதற்கு ஜனார்த்தனன் நீங்க சுத்தி இருக்கிற கடைகள் என்று சொல்வது குன்னக்குடியில் இருக்கிற எல்லா கடைகளுமா? இல்லை பாண்டியன் ஸ்டோர் கடைக்கு மட்டுமா? என்று கேட்க அதற்கு ஜீவா பாண்டியன் ஸ்டோரையும் சேர்த்து தான் சொல்கிறேன் என்று சொல்ல, வெளியே வந்துட்டாலும் அண்ணன் தம்பிகள் மீது பாசம் குறையல அப்படித்தானே? என்று தான் ஜனார்த்தனன் நயவஞ்சகமாக சிரித்தபடியே கேட்க, அதற்கு ஜீவா என் அண்ணன் தம்பிகள் மேல இன்னும் வருத்தமா தான் இருக்கேன். ரொம்ப ஆழமாக காயப்பட்டு இருக்கேன். அது என்னைக்கும் ஆறாது. ஆனா அதுக்காக அவங்க நல்லா இருக்கக் கூடாதுன்னு நான் நினைக்க மாட்டேன் என்று சொல்ல, ஜனார்த்தனன் அதிர்ச்சி ஆகிறார். பிறகு நாமளும் நல்லா இருக்கும் அவங்களும் நல்லா இருக்கட்டும் என்று கூறி ஜீவா கிளம்பி போக ஜனார்த்தனன் உள்ளுக்குள் குதர்க்கமாக யோசிக்கிறார்.












Click it and Unblock the Notifications