ஜீவாவை வீட்டுக்கு வர வேண்டாம் என அசிங்கப்படுத்திய மூர்த்தி.. மீனா செய்த செயல்.. ஐஸ்வர்யாவின் பதிலடி
சென்னை: ஜீவா பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் நான் பட்ட அவமானங்கள் போதும் இனி அந்த வீட்டிற்கு வரமாட்டேன் என்று கூறியதை கேட்டு மீனா கதறி அழுகிறார்.
ஜீவா பேசியதை கேட்டு கோபத்தில் மூர்த்தி இனி நீ அந்த வீட்டிற்கு வர வேண்டாம் என்று ஜீவாவை திட்டி விட்டு அனைவரையும் மண்டபத்தில் இருந்து கூட்டிக் கொண்டு கிளம்புகிறார்.
இத்தனை பிரச்சனைக்கும் காரணம் கண்ணன் தான் என மொத்த குடும்பமும் கண்ணனைத் திட்ட ஐஸ்வர்யா கோபம் ஆகிறார்.

திட்டும் ஜனார்த்தனன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 24 ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் ஜீவா தன்னுடைய மனதில் இருக்கும் மொத்த சோகங்களையும் சொல்லி இனி நான் அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு மூர்த்தி ஏன்டா இப்படி பேசிகிட்டு இருக்க, ஏதோ தெரியாம கூட இதுக்கு முன்பு வீட்டில் இப்படி நடந்திருக்கலாம். எங்களை எல்லாம் புரிஞ்சுகிட்ட பிறகும் நீ இப்படி எல்லாம் பேசுறது தான் ரொம்ப கஷ்டமா இருக்குது. உனக்கு தெரியாதா? எல்லாருடைய குணமும் எப்படி என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு குறுக்கிட்ட ஜனார்த்தனன் அவர் அழுது வருத்தப்பட்டு பேசிகிட்டு இருக்கார். நீங்க குற்றம் கண்டுபிடித்து இருக்கீங்க என்று மூர்த்தியை திட்டுகிறார்.

திட்டும் மூர்த்தி
பிறகு மூர்த்தி உன்னை விலக்கி வச்சுட்டோம் என்று பேசிக்கொண்டு இருக்கா, ஒரு நாள் உண்மை தெரிஞ்சு நீ கண்டிப்பா வீட்டுக்கு வருவாய் என மூர்த்தி ஜீவாவிடம் கூறுகிறார். நான் முடிவு பண்ணிட்டேன். வீட்டுக்கு வரவே மாட்டேன் என்னை விலக்கி வச்ச வீட்டுக்கு நான் வரமாட்டேன் என்று அழுது கொண்டு ஜீவா கூறுகிறார். தெரியாமல் செய்தால் அதை எல்லாம் பார்ப்பியா என மூர்த்தி விடாமல் கெஞ்சிக் கொண்டே இருக்க, ஆனால் ஜீவா அவர்களோடு செல்ல மாட்டேன் என்று மறுக்கிறார். அதனால் கோபம் ஆன மூர்த்தி இனி நீ வீட்டுக்கு வர வேண்டாம். இனி இவன் வீட்டுக்கு வரவே வேண்டாம். என்னைக்கு நம்மளை புரிஞ்சுகிட்டு வரானே அன்னைக்கு வந்தா போதும் என்று மூர்த்தி திட்டுகிறார்.

கண்ணனை அசிங்கப்படுத்தும் ஜீவா
அப்போது ஐஸ்வர்யா வா கண்ணா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட, கொஞ்சம் கொஞ்சம் இரு என்று ஐஸ்வர்யாவிடம் கூறிவிட்டு கண்ணன் ஜீவாவிடம் போய் அண்ணனை சமாதானம் செய்ய பார்க்க, என்ன நக்கல் டா உனக்கு.. கவர்மெண்ட் வேலை பார்க்கிற நான் அந்த கடைக்கு வரமாட்டேன் என்று நீ அன்னைக்கு சொல்ற, என்னை காசு சம்பாதிக்கவில்லை என்று நக்கல் பண்ற, இப்ப எல்லோரும் வீட்டில் போய் சந்தோசமாக இருங்க என்று கண்கலங்கி அழுது கொண்டே ஜீவா திட்டுகிறார். இதனால் கோபமான ஐஸ்வர்யா கண்ணனை வா என்று கையை பிடித்து இழுத்தபடி மண்டபத்தில் இருந்து கூட்டிக்கொண்டு வெளியே கிளம்புகிறார்.

மிரட்டும் முல்லையின் அம்மா
முல்லையின் அம்மாவும் எதற்காக இங்கே நின்னுகிட்டே இருக்கணும் வாங்க நாமளும் போகலாம். இவருக்கு அவருடைய மாமனார் வீட்டில் இருக்கணும்னு ஆசை வந்துட்டு அதனால எல்லாரையும் அவமானப்படுத்திகிட்டு இருக்காரு. அதை நின்னு பார்த்துட்டு ரசிச்சுக்கிட்டு இருக்கணுமா? வாரீங்களா? இல்லையா? என்று அனைவரையும் கூப்பிட, எல்லோரும் அப்படியே நிற்கின்றனர். அப்போது முல்லை நீ வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு இந்த மாதிரி எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்குன்னு அவசியமா வா வீட்டுக்கு என்று கூப்பிட்டு தன்னுடைய கணவரை கூப்பிட்டுக் கொண்டு கிளம்புகிறார்.

மாமனாருக்கு சப்போர்ட்
அடுத்து கதிர் ஜீவாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய, அப்போது ஜனார்த்தனன் குறிக்கிட்டு ஜீவாவுக்கு ஆதரவாக கதிரை திட்டுகிறார். அதனால் நீங்கள் எங்கள் குடும்ப பிரச்சனையில் தலையிடாதீங்க என்று கதிர் சொல்ல, அவர் அப்படித்தான் பேசுவார். நீங்க எல்லாரும் என்னை அவமானம் செய்த போது என்னை ஒரு மனுசனா மதிச்சதே அவர் மட்டும்தான். எனக்காக எல்லாமே செஞ்சிட்டு இருக்கார் என்று ஜீவா மாமனாருக்கு சப்போட்டாக பேசி கதிரை திட்டுகிறார். பிறகு நீ எல்லாம் பேசவே செய்யாதா, உன் மாமியார் என்னெல்லாம் பேசினாங்க ஒரு வார்த்தை அப்படி பேசக்கூடாது என்று நீ தடுத்தியா என்று கேட்க, கதிர் பதில் பேச முடியாமல் இருக்கிறார். பிறகு மூர்த்தி அனைவரையும் கூட்டிக்கொண்டு மண்டபத்தில் இருந்து கிளம்புகிறார்.

கதறி அழும் மீனா
அனைவரும் மண்டபத்தை விட்டு கிளம்பும்போது மீனா ஜீவாவிடம் கெஞ்சி கூத்தாடுகிறார். போக வேண்டாம் என்று சொல்லு ஜீவா என்று கெஞ்சுகிறார். அதே நேரத்தில் மூர்த்தி தனது இடமும் போக வேண்டாம் என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். எல்லோரும் கிளம்பிய பிறகு மீனா அழுது கொண்டே தனது அப்பாவை கட்டி இருக்கிறார். அப்போது ஜீவா என்னோட கஷ்டம் எல்லாமே உனக்கு தெரியும்லா மீனா? நீ என்னை எதுவும் சொல்லாத என்று சொல்கிறார். அதற்கு ஜனார்த்தனன் உங்க கஷ்டம் எல்லாமே எங்களுக்கு புரியுது மாப்பிள்ளை. அண்ணன் தம்பி கூட்டு குடும்பம் எல்லாம் இப்போ உள்ள சூழ்நிலைக்கு செட்டாகாது. அவங்க அவங்க தனித்தனியா குழந்தை குட்டிகளை பார்த்துகிட்டு ஏதாவது நல்ல நாள் கெட்ட நாளில் எல்லாரும் சேர்ந்து பேசிக் கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருக்க தனக்கு தலை வலிக்கிறது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் என ஜீவா கிளம்பி போகிறார்.

கோபத்தில் ஐஸ்வர்யா
பிறகு வீட்டில் எல்லா பிரச்சனைக்கும் காரணம் கண்ணன் தான் என்று மூர்த்தியும் தனமும் கண்ணனை திட்டுகின்றனர். பத்தாதற்க்கு முல்லையும் எடுத்துக் கொடுக்க தனம் கண்ணனை அறிவு இருக்கிறவங்க இப்படி செய்ய மாட்டாங்க என்று கடுமையான வார்த்தைகளால் கண்ணனை திட்டிக் கொண்டிருக்க, அதில் கோபமான ஐஸ்வர்யா நிறுத்துங்க அக்கா என்று கத்துகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications