ஜீவா உளறியதை வீடியோ எடுத்து அனுப்பிய பிரசாந்த்... அவமானப்படுத்திய முல்லையின் அம்மா.. தனத்தின் பதில்
ஜீவா குடித்துவிட்டு உளறியதை பிரசாந்த் வீடியோவாக எடுத்து மீனாவுக்கு அனுப்பி இருக்கிறார்.
சென்னை: ஜீவா குடித்துவிட்டு தன்னுடைய மனதில் இருக்கும் மொத்த கவலையையும் மாமனார் முன்பு உளறி இருக்கிறார்.
தன்னுடைய வீட்டைப் பற்றியும் அங்கு இருப்பவர்களை பற்றியும் முதல்முறையாக ஜீவா பேசியதை கேட்டு மாமனார் சந்தோஷப்படுகிறார்.
முல்லையின் அம்மா ஜீவா மற்றும் மீனாவை அவமானப்படுத்துகிறார்.

ஜீவாவிற்க்குள் இவ்வளவு காதலா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 9வது நாள் எபிசோடின் ஆரம்பத்தில் ஜீவா குடித்துவிட்டு தன்னுடைய குடும்பத்தை பற்றி உளறுகின்றார். அதில் மீனா நல்ல பொண்ணு மீனாவோட இடத்தில் யார் இருந்தாலும் என்னை இப்படி பார்த்துக்க முடியாது. உங்க வீட்டில் நீங்க மீனாவை ராணி போல வச்சிருந்தீங்க. ஆனா மீனா எங்க வீட்டில் கீழே படுத்து தூங்குறா. எல்லாரும் கட்டிலில் படுக்குறாங்க எனக்காக தான் மீனா எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டா என்று மீனா மீது தனக்கு இருக்கும் பாசத்தை உளறிக் கொண்டிருக்கிறார். அதை பிரசாந்த் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

மீனா குடும்பத்திற்கு சந்தோஷம்
அடுத்ததாக மீனாவின் அப்பா மீனாவின் அம்மாவிடம் மாப்பிள்ளை இப்போ எல்லாத்தையும் உணர்ந்துட்டாரு. ரொம்ப வேதனையில் பேசிட்டு இருந்தாரு. அவர் சீக்கிரமா நம்ம வீட்டுக்கு வந்து விடுவார் என்று சொல்ல, அவர் குடித்துவிட்டு சொல்வார் என்று முதலில் மீனாவின் அம்மா மறுத்தாலும் பிறகு மீனாவின் அப்பா ஜீவா பேசியதை எல்லாம் சொன்னதும் மீனாவின் அம்மா சந்தோஷப்படுகிறார். நம்ம பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தாலே போதும் என்று சொல்கிறார்.

மீனா ஹேப்பி அண்ணாச்சி
அடுத்ததாக ஜீவா குடித்துவிட்டு உளறிய வீடியோவை மீனாவிற்கு பிரசாந்த அனுப்பி இருக்கிறார். அதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார். அதிலும் மீனாவை பற்றி ஜீவா சொன்னதை எல்லாம் கேட்டு சிரிச்சுக்கிட்டே இருக்கிறார். அப்போது ஜீவா போதையில் வந்து கதவை தட்டுகிறார். மீனா கதவை திறந்து பார்க்கிறார். பிறகு ஜீவாவை யாருக்கும் தெரியாமல் அழைத்து செல்ல, ஜீவா மீனாவை புகழ்ந்து பேசிக்கிட்டே இருக்கிறார். எல்லாத்தையும் கேட்டு சிரித்தபடியே ஒருவழியாக அவரை சமாதானம் செய்து மீனா தூங்க வைக்கிறார்.

தனத்தின் பதில்
அடுத்த நாள் காலையில் மூர்த்தி கடையில் வேலை இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு ஜீவா சரி என்று சொல்லிவிடுகிறார். அப்போது மீனா அருகில் இருந்து கல்யாண பத்திரிக்கை வைக்க போக வேண்டும் என்று ஞாபகப்படுத்த, தனம் ஜீவாவிடம் கண்டிப்பா பத்திரிக்கை வைக்க நீங்க போய் தான் ஆக வேண்டும். அதனால் போயிட்டு வாங்க என்று கூறுகிறார். அதற்கு மூர்த்தி நியாயமா பார்த்தா உங்க ரெண்டு பேரையும் கல்யாண வேலை முடியுற வரைக்கும் அங்க தான் இருக்க சொல்லி இருக்கணும். ஆனா இப்போ நம்ம நிலைமை சரியில்ல. அதனால தான் என்று யோசிக்கிறேன் என்று கூறி, பிறகு சரி நீ அங்க முடிச்சுட்டு கடைக்கு வந்துரு. அதுவரைக்கும் நான் கடையை பார்த்துகிறேன் என்று மூர்த்தி கிளம்புகிறார். மீனாவும் ஜீவாவும் கிளம்பி வெளியே வருகின்றனர். பிறகு தனம் நீங்க வெளியே போகிறது காரில் போங்க குழந்தையை தூக்கிட்டு போறது வெயில்ல போக முடியாது. வேலையை சீக்கிரமா முடிச்சுட்டு வரலாம் என்று கார் சாவியை தூக்கிக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

இப்படி அவமானப் படுத்தலாமா
நாளை எபிசோட்டில் ஜீவா காரை துடைத்துக்கொண்டிருக்க அங்கே முல்லையின் அப்பாவும் அம்மாவும் வருகின்றனர். அவர்கள் என்ன நீங்க காரை தொடச்சிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க, கல்யாண பத்திரிக்கை வைக்க கிளம்பிக்கிட்டு இருக்கிறேன் என்று ஜீவா சொல்ல, கல்யாண பத்திரிக்கை வைக்கிறதுக்கு எங்க மாப்பிள்ளை வாங்குன காரை நீங்க எடுத்துட்டு போயிட்டீங்கன்னா நாங்க எப்படி போகிறது என்று கேட்கிறார். இதை கேட்டு ஜீவா அதிர்ச்சியில் இருக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications