கேரக்டரே இல்லாமல் பாண்டியன் ஸ்டோரில் கதை.. இதை கவனிச்சீங்களா? இப்படியுமா பண்ணுவாங்க?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்தில் தான் முல்லைக்கு குழந்தை பிறந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து தனத்திற்கு அடிக்கடி நெஞ்சுவலி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் செக் பண்ணி பார்க்கும்போது அவருக்கு மார்பகத்தில் கட்டி இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் நடக்கும் சொதப்பல்கள் குறித்து பார்க்கலாம். ஏற்கனவே கடந்த வாரம் மருத்துவமனையில் நடந்த சொதப்பல்கள் பார்த்தோம். இந்த வாரம் வீட்டில் நடந்து சொதப்பல்களை பார்க்கலாம்.
சீரியல்கள் என்றாலே கதைகள் கண்டினியூவாக இருக்காது என்பது தெரிந்ததுதான். காரணம் ஒவ்வொரு வாரமும் டிஆர்பிக்கு தகுந்த மாதிரி தான் கதை மாற்றப்படும். ஆனால் சில நேரங்களில் அங்கே செய்யப்படும் சொதப்பல்கள் ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிகிறது.

அது குறித்து ரசிகர்கள் இணையத்தில் அதிகமாக கலாய்த்து கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த பாரதி கண்ணம்மா சீரியல் இந்த வரிசையில் இடம் பிடித்தது தான். கண்ணம்மா கையில் பேக் உடன் நடுத்தெருவில் பல மாதங்களாக சுற்றி திரிந்ததை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களில் கண்ணம்மாவை ட்ரெண்ட் செய்து இருந்தனர்.
அதுபோல ஒரு சில சீரியல்களில் சில சில சொதப்பல்கள் அடிக்கடி நடப்பதும் வாடிக்கையாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கேரக்டரே இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கின்றனர். புரியலையா? அதுதான் முல்லையின் குழந்தை தான்.
பெரும் போராட்டத்திற்கு பிறகு முல்லைக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். அதுவும் 7 மாதத்தில் குழந்தை பிறந்து இருப்பதாக கூறி சில நாட்கள் மருத்துவமனையில் இருந்து தற்போது குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கே வந்து இருக்கின்றனர். இந்த நிலையில் இப்ப வரைக்கும் ஒரு நாள் கூட அந்த குழந்தையின் முகத்தை காட்டவில்லை.
கையில் ஒரு பெட்டை மட்டும் வைத்துக்கொண்டு மாறி மாறி இந்த சீரியலில் குழந்தையை கொஞ்சுவது போல கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் ஒரு பொம்மையை வைத்தாவது கொஞ்ச கூடாதா? இது பெட் என்பது அப்பட்டமாக தெரிகிறது. போதாத குறைக்கு இந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக நடிக்கும் பிஜே தீபிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மருத்துவமனையில் இருக்கும் போது முல்லையின் குழந்தை(அந்த பெட்) கொஞ்சிய வீடியோவையும் வெளியிட்டு இருந்தார் இது குறித்து சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த சீரியலில் இதுவரைக்கும் தனத்தின் குழந்தையாக பாண்டியனை சில நாட்களாகவே காணவில்லை. அந்த வகையில் புதியதாக இன்னும் குழந்தை கிடைக்கவில்லையா? அதனால் தான் முல்லையின் குழந்தை பெட்டுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறதா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். எப்படியோ ஒரு கேரக்டரே இல்லாமல் ஒரு வாரம் எபிசோட்டை ஓட்டி விட்டார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications