ஆரம்பத்தில் ஒழுகும் ஓலை வீடு.. இப்போ 2 அடுக்கு மாடி வீடு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் வளர்ச்சி
பாண்டியன் ஸ்டோர் ஹேமா தான் இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டி வருவதாக ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் நடிகை ஹேமா தற்போது புதிய வீடு ஒன்றை கட்டி இருக்கும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
தன்னுடைய புதிய வீடு குறித்தும் அதற்காக தான் பட்ட கஷ்டங்களை குறித்தும் அந்த வீடியோவில் அவர் பேசி இருக்கிறார்.
தற்போது சமூக வலைத்தளத்தில் பாண்டியன் ஸ்டோர் ஹேமாவுக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த மீனா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல நடிகர்கள் நடித்தாலும் அனைவரும் முக்கியமான கேரக்டராக இருந்து வருகின்றனர். இந்த கேரக்டர்களுக்கு தனித்தனியான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமாவுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் காமெடி ஆகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்வதற்கு இருக்கும் கேரக்டராக மீனாதான் இருந்து வருகிறார். இவருடைய நடிப்பு பார்த்தே பலர் இவருக்காக இந்த சீரியல் பார்த்து வருவதாகவும் கூறி வருகிறார்கள்.

தொடரும் கர்ப்பம்
சமீப காலமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அதிகமான கர்ப்ப நிகழ்வுகள் காட்டப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முல்லை கர்ப்பமாக ஆனார். அடுத்தது ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கிறார். தற்போது தனமும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் மீனா மட்டும்தான் இந்த சீரியலில் என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகிறார். இந்த சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் சலுப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று கருத்து கூறி வருகின்றனர். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளை எல்லாம் மீனா கேரக்டர் மட்டும்தான் கேட்டு வருகிறார்.

ஹேமாவின் ஆரம்ப காலம்
மீனாவாக நடிக்கும் ஹேமாவின் சொந்த ஊர் மயிலாடுதுறை தானாம். இவருக்கு சிறு வயதிலிருந்து மீடியாவில் சேர வேண்டும் என்று ஆசையில் இருந்திருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு சைதாப்பேட்டை காவல் நிலைய அலுவலகத்தில் ஹார்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார். பிறகு வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்திருக்கிறார். இந்த நிலையில் தான் இவருக்கு விஜய் டிவியில் ஆபீஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து இவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மெல்ல திறந்தது கதவு, சின்னத்தம்பி என பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

புது வீடு
இந்த நிலையில் இவர் சொந்தமாக வீடு கட்டி இருக்கும் மகிழ்ச்சியை தன்னுடைய youtube சேனலில் மூலமாக வீடியோ வெளியிட்டு தெரியப்படுத்தி இருக்கிறார். சொந்தமாக வீடியோ கட்டுவது என்பது நீண்ட நாள் கனவு. இப்போது என்னுடைய கனவு நினைவாகி இருக்கிறதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. நான் நினைத்தபடி என்னுடைய ஒவ்வொரு அறையும் வைத்திருக்கிறோம் என்று அந்த வீடியோவில் அவருடைய வீட்டை சுற்றி காண்பித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல வருடங்களாகவே இந்த வீடு கட்டப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் பைனான்ஸ் தான். கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும் பணத்தை வைத்து வீட்டை கொஞ்சம் கொஞ்சமாக தான் கட்டி வருகிறோம் என்றும், தன்னுடைய மகன் கைக்குழந்தையாக இருக்கும் போதே வீட்டு வேலை பாதி வந்த நிலையில், தற்போது மகனுக்கு இரண்டு வயது தாண்டி உள்ள நிலையிலும் வீட்டு வேலை இன்னும் முடிவடையாமல் தான் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications