ஒரு நிமிடங்களில் இத்தனை அடியா? மாறி மாறி கன்னத்தில் அறைவாங்கும் கண்ணன், ஐஸ்வர்யா.. வெளியான வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து சில கிளிப்ஸ்களை வீடியோவாக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பிரிந்து இருக்கும் நிலையில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இதுவரைக்கும் வாங்கிய அடிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
மாஸ் டயலாக் பேசிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் ஐஸ்வர்யாவின் பழைய வீடியோவை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பரபரப்பான கதைக்களம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது பரபரப்பான கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்த எபிசோடு தற்போது நடந்து வருகிறது. ஒரு பக்கம் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் எபிசோட்டை பார்த்து பாராட்டும் ரசிகர்கள் மறுபக்கம் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனுக்கு எதிராக கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் குவித்து வருகின்றனர்.

ஜீவா கேட்ட கேள்வி
கடைக்குட்டி ஆக இருக்கும் கண்ணன் தன்னுடைய அண்ணன் ஜீவாவை அடிக்கடி அவமானம் செய்து நோஸ்கட் பண்ணிக் கொண்டே இருந்தது, பலருடைய எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது ஜீவா தன்னுடைய மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் மூர்த்தியிடம் கொட்டி அனைவரையும் கேள்வி கனைகளால் குத்தி எடுத்து விட்டார். இதை ரசிகர்கள் அதிகமாக பாராட்டி வருகின்றனர்.

ஐஸ்வர்யாவின் வசனங்கள்
மொய் பிரச்சனையால் இனி எனக்கும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கும் எந்த உறவும் இல்லை என்று ஜீவா அனைவரையும் மண்டபத்தை விட்டு அவமானப்படுத்தி வெளியே அனுப்பி இருந்த நிலையில் வீட்டிற்கு வந்து ஐஸ்வர்யா மூர்த்தி தனத்திடம் சண்டைக்கு நிற்கிறார். எப்படி என்னுடைய கணவரை அடிக்கலாம் அவரை நீங்கள் இன்னமும் குழந்தையாக தான் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு அது கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் பஞ்ச் வசனங்கள் கடந்த வாரத்தில் இருந்து பேச தொடங்கி இன்று வரைக்கும் பேசிக் கொண்டே இருக்கிறார்.

பரவி வரும் வீடியோ
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று தீயாக பரவி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா மாறி மாறி அடி வாங்கும் காட்சிகளை ஒன்று சேர்த்து ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். இதுவரைக்கும் ஐஸ்வர்யா வீட்டில் துருதுருப்பான கேரக்டராக இருந்த நிலையில் தற்போது அவர்தான் வில்லியாக மாறி கொண்டு இருக்கிறார். அதனால் ஐஸ்வர்யாவின் மீது இருக்கும் கோபத்தை அவருடைய வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications