கண்ணன் துரோகத்தால் உடையும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.. இனி வீட்டை விட்டு வெளியே போகிறவர் இவர்!?
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி அடுத்ததாக ஜீவா வீட்டை விட்டு வெளியே போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி அடுத்தடுத்த பல திருப்பங்கள் நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே கதிர் வீட்டை விட்டு வெளியேறியது போல தற்போது மீண்டும் ஜீவா வீட்டை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஜீவா ஓட்டிய கார் மீது பைக்கில் வந்த நபர் மோதிய விவகாரத்தில் கண்ணனின் குற்றச்சாட்டால் அடுத்தடுத்து வீட்டில் புது பிரச்சனை ஏற்பட இருக்கிறது.

அண்ணன் தம்பி கதை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியலில் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் காதல், மோதல் சண்டை சச்சரவுகள் அனைத்தும் உள்ளடக்கியதாக இருந்தாலும் கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் நகர்ந்து வந்தது. வீட்டில் உள்ள நான்கு ஆண்களுக்கும் திருமணம் முடிந்த பிறகும் அவர்கள் எப்படி ஒன்றாக கூட்டு குடும்பமாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்படும் சிறு சிறு மனகசப்புகள் போன்றவற்றை இந்த சீரியல் அழகாக காட்டிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது.

மூன்று மருமகள்கள் கர்ப்பம்
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது மூன்று மருமகள் கர்ப்பமாக இருக்கின்றனர். அவர்கள் மூவரையுமே மீனாதான் பார்த்து வருகிறார். இதுவரைக்கும் வீட்டில் அதிகமாக வேலை செய்யாமல் இருந்து வந்த மீனா தற்போது விழுந்து விழுந்து மூன்று பேருக்கும் உபசரணைகள் செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து மீனாவுடைய அம்மாவும் அப்பாவும் எப்படியாவது மீனாவை அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான முயற்சிகள் எடுத்தாலும் அது வெற்றியடையாமல் போய்க்கொண்டிருக்கிறது.

கார் விபத்து
இந்த நிலையில் நேற்று மீனாவும் ஜீவாவும் காரில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழியில் கார் மீது பைக்க்காரர் ஒருவர் வந்து மோதியதால் காரில் லேசான கீறல் ஏற்பட்டு விட்டது. இதை பெரிய விஷயமாக மாற்றி கண்ணன் வீட்டில் சொல்லி பிரச்சனையை ஏற்படுத்திகிறார். தன் மீது தவறில்லை தான் சரியாகத்தான் வண்டி ஓட்டினேன் என்று கூறினாலும், மூர்த்தி ரோட்டில் ஆயிரம் பேர் வண்டி ஓட்டுவாங்க ஆனா நம்ம தான் கவனமாக ஓட்ட வேண்டும் என்று ஜீவாவின் மீது குறை கூறுகிறார். இதனால் மீனா வருத்தமாக மாறுகிறார். அது மட்டுமல்லாமல் கண்ணனும் தன்னுடைய பங்குக்கு அண்ணன் சரியாத்தான் வண்டி ஓட்டுவாரு ஆனா இப்போ சரியா கவனமா ஓட்டி இருக்கணும் என்று கூறுகிறார்.

சம்பள பிரச்சனை
தொடர்ந்து இன்றைய எபிசொட்டில் கண்ணன் தன்னுடைய சம்பள பணத்தை தனத்திடம் கொடுக்கிறார். அதே போல கதிரவனும் தன்னுடைய கடையில் உள்ள வருமானத்தை தனத்திடம் கொடுக்கிறார். அப்போது நீ எதுவும் கொடுக்கவில்லையா என்று ஜீவாவிடம் கண்ணன் கேட்க அதனால் ஜீவாவின் முகம் மாறுகிறது. ஜீவா முழுக்க பாண்டியன் ஸ்டோர் கடையிலே வேலை செய்து கொண்டு இருந்தாலும், அனைவருக்கும் இது தெரிந்திருந்தாலும் கண்ணன் இந்த மாதிரி ஒரு வார்த்தையை கூறியதால் ஜீவா மற்றும் மீனாவின் முகம் மாறுகின்றனர்.

அடுத்த வெளியேற்றம் ரெடி
இந்த நிலையில் ஜீவா சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும்போது மீனாவுடைய அப்பா சென்று ஜீவாவை தனியாக சந்தித்து பேசுகிறார். இதைத்தொடர்ந்து இனி வரும் எபிசோட்டுகளில் மீனா மற்றும் ஜீவா வீட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும் மீண்டும் இவர்கள் எப்படி வீட்டுக்குள் வருகிறார்கள் என்பது பற்றி தான் இன்னும் பல மாதங்களுக்கு இந்த சீரியல் இழுத்துக் கொண்டு இருக்கப் போகிறது என்பது தற்போது தெளிவாக தெரிகிறது. தற்போதைய நிலையில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி நாள்தான் டிஆர்பி யில் முன்னேற முடியும் என்பதற்காக இந்த சீரியலில் இப்படி ஒரு கதையை கொண்டு செல்கிறார்கள் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications