சீரியலை விட்டு விலகல்.!? விளக்கம் கொடுத்த குமரன்.. மொத்த ரகசியத்தையும் ஓப்பனா சொல்லிட்டாரே!
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிராக நடிக்கும் குமரன் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து கதிர் விலக போகிறார் என்று சமீப காலமாக செய்தி பரவி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் கேரக்டரில் குமரன் நடித்து வருகிறார்.
தற்போது குமரன் பல வெப் சீரிஸ்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் சீரியலிலிருந்து விலகப் போகிறாரா? இல்லையா? என்பது பற்றி குமரன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அடிக்கடி மாற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த சீரியலில் அதிகமான வெளி காட்சிகள் இல்லாமல் இருந்தாலும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் காதல், மோதல், சண்டை சச்சரவுகள் போன்றவற்றை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை இருந்து வருகிறது. அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு கூட்டு குடும்பத்தை வலியுறுத்தும் இந்த சீரியலில் பல நடிகர்கள் ஆரம்பத்தில் இருந்தவர்கள் இப்போது இல்லை. குறிப்பாக பல கதாநாயகிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகின்றனர். அதிலும் முல்லை கேரக்டரிலும் ,ஐஸ்வர்யா கேரக்டர், மீனா கேரக்டர் போன்றவர்கள் முக்கியமான கேரக்டராக இருந்தாலும் இவர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறார்கள்.

வதந்தி வெப் சீரிஸ்
இந்த நிலையில் இந்த சீரியலில் கதிராக நடிகர் குமரன் நடித்து வருகிறார். இதற்கு முன்பு குமரன் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சிறந்த டான்சராகவும் இருக்கிறார். ஆனாலும் ரசிகர்களின் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது என்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இந்த சீரியலின் பிறகு தான் இவருக்கு நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்த வதந்தி என்ற ஓடிடி வெப் சீரிஸில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இணைய தொடர் நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் குமரனின் கேரக்டர் பெரும் திருப்புமுனையாக அந்த சீரிஸில் இருந்து வந்தது.

புது வாய்ப்பு
அதைத்தொடர்ந்து தற்போது ஹிந்தி மொழியில் பிரபலமான ஹாங்கமா ஓடிடி நிறுவனம் தற்போது தமிழில் முதல்முறையாக மாயத் தோட்டா என்ற தொடரை வெளியிட்டுள்ளது. மொத்தம் ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ் என பல பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வெப் சீரிஸில் கதாநாயகன் ஆன கதிர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் இயக்குனர் எஸ்ஏ சூர்யா நடித்த வதந்தி தொடரில் நான் நடித்து எனக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது. சினிமாவை நோக்கி பல காலமாக நான் பயணித்துக் கொண்டிருந்தேன் ஆனால் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் தற்போது சினிமா முற்றிலும் மாறிவிட்டது. இதனை பார்த்த எனக்கு வெப் சீரிஸ் கூட நன்றாக இருக்கிறது என்று தோன்றியது. நான் வதந்தி தொடரில் நடித்ததை பார்த்து தான் என்னை மாயத்தோட்டா தொடருக்கு நடிக்க அழைத்தார்கள்.

இனி தொடர்வாரா
மேலும், என்னுடைய கதாபாத்திரம் இசட் பிரிவில் வரும் தலைமை அதிகாரி தான். அதனால் என்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டியது இருந்தது. நான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் லுங்கியோடு வருவேன். ஆனால் இந்த தொடரில் பலவிதமான மாறுதல்கள் தேவைப்பட்டது. ஏற்கனவே வதந்தி தொடரில் போது கொஞ்சம் எடை போட வேண்டியது இருந்தது. ஆனால் இந்த வெப் சீரிஸுக்காக அதனை குறைத்து வருகிறேன். நான் இந்த மாயத்தோட்ட வெப்சீரிஸில் நடிப்பதற்காக இசட் பிரிவு என்றால் என்ன? அவர்களின் வேலை என்ன? அவர்களை எதற்காக உருவாக்கினார்கள்? அவர்கள் எப்படி ஆயுதங்களை பயன்படுத்துவார்கள்? முதற்கொண்டு அனைத்தும் நான் ஒவ்வொரு விஷயமாக தேடி கற்றுக் கொண்டேன். ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த சீரியஸை கண்டிப்பாக மக்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் கதிர் மீண்டும் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிப்பாரா? அல்லது வெப் சீரிஸில் பிஸியாக இருப்பதால் இந்த சீரியலை விட்டு விலகி விடுவாரா? என்று பல்வேறு கேள்விகள் கிளம்பி வருகிறது.

குமரனின் விளக்கம்
இதை குறித்து தற்போது குமரன் நான் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மாய தொட்டா வெப் சீரிஸ் நடித்து முடித்துவிட்டேன். இனிவரும் காலங்களில் திரைப்படங்களிலோ அல்லது வெப் சீரிஸ்களிலோ நடிக்கும் போது எனக்கு நேரம் இல்லாமல் போனால் கண்டிப்பாக சீரியலில் இருந்து நான் விலகி விடுவேன் என்று கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இப்போது மாயத் தொட்டாவில் என்னுடைய உடல் மொழி வேறு மாதிரியாக இருந்தாலும் அதை அப்படியே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மேனேஜ் செய்து விட்டேன். ஆனால் இனிவரும் காலங்களில் அதுபோல செய்ய முடியுமா? என்று தெரியவில்லை. இதைக் குறித்து நான் ஏற்கனவே சீரியல் டீம் இடம் பேசி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications