பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் புது நடிகை!? அடுத்தடுத்து மாற்றம்.. இதுதான் காரணமா?
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த சாய் காயத்ரிக்கு பதிலாக புது நடிகை நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூன்றாவது ஆக ஐஸ்வர்யா கேரக்டரில் சாய் காயத்திரி நடித்து வந்தார்.
இந்த நிலையில் சாய் காயத்திரி திடீரென்று இந்த சீரியலில் இல்லை என்றும் அவருக்கு பதிலாக வேறு நடிகை வரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தொடரும் இவருக்கு பதில் இவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று பல நடிகர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்த நடிகர்கள் இப்போது இல்லை. குறிப்பாக இந்த சீரியலில் ஒரே வீட்டிற்குள் நடக்கும் வகையில்தான் கதை நகர்ந்து கொண்டு வந்தாலும், இதில் நடிக்கும் முன்னணி கதாநாயகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தாலும் அவர்கள் திடீர் திடீரென விலகி விடுகிறார்கள். அதிலும் ஐஸ்வர்யா, மீனா,முல்லை கேரக்டருக்கு பல நடிகைகள் வந்தார்கள்.

திடீர் வெளியேற்றம்
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் மூன்று நடிகைகள் மாறி இருக்கின்றனர். அதேபோல ஐஸ்வர்யா கேரக்டரிலும் மூன்று பேர் மாறி இருக்கின்றனர். ஆரம்பத்தில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிகை வைஷாலி நடித்து வந்தார். அவரை தொடர்ந்து விஜே தீபிகா நடித்து வந்தார். இந்த நிலையில் பிஜே தீபிகா இந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி இருந்த நேரத்தில் தான் அவருடைய முகத்தில் இருந்த முகப்பரு காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியேவும் தொடரும் நட்பு
விஜே தீபிகா இந்த சீரியலில் இருந்து வெளியேறிய பிறகும் கண்ணனோடு சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் இருவரும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தொடர்ந்து இவரே இந்த சீரியலில் இருந்து இருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மூன்றாவதாக நடிகை சாய் காயத்ரி நடித்து வந்தார். இவர் ஏற்கனவே ஈரமான ரோஜாவே சீரியலின் மூலமாக பலருக்கும் பரீட்சை மானவர் தான். இந்த சீரியலிலும் இவருடைய கேரக்டர் ஐஸ்வர்யாவாக இப்போது ரசிகர்களின் மனதில் பதிந்து இருக்கிறது.

மீண்டும் அதே ஐஸ்
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா கேரக்டரில் இருந்து சாய் காயத்ரி விலகி விட்டதாகவும், அதே கேரக்டரில் மீண்டும் விஜே தீபிகா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அதை குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும் நடிகைகள் தரப்பில் இருந்தும் தெரிவிக்கவில்லை. அதுபோல சேனல் தரப்பில் இருந்தும் எதுவும் தெரிவிக்கவில்லை .ஆனால் தகவல்கள் நம்பத் தகுந்ததாக பரவி வரும் நிலையில் ரசிகர்கள் இதுகுறித்து பரவலாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications