பாவாடை தாவணியில் பம்பரமாய் சுழலும் சுஜிதா..புது கெட்டப்பின் காரணம்..ரசிகர்களுக்கு இன்ப செய்தி
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியல் அண்ணியாக நடித்துவரும் சுஜிதா தற்போது பாவாடை தாவணியில் இளம் கதாநாயகிகளுக்கு டப் கொடுத்திருக்கிறார்.
இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சீரியல்களில் நடித்து இருந்தாலும் தற்போது இவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் தனம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குடும்ப ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றிருக்கிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு தனம் கேரக்டரும் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். காரணம் இந்த கேரக்டர் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த சுஜாதாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து வருகிறது. அண்ணன் தம்பிகளின் பாசத்தை சொல்லும் கதையாக இந்த சீரியல் இருந்தாலும் அதில் ஒரு அண்ணியாகவும், அம்மா ஸ்தானத்தில் அனைவரையும் அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கும் தனம் கேரக்டர் சுஜிதாவிற்கு தத்ரூபமாக செட் ஆகி உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
சுஜிதா குழந்தை நட்சத்திரமாக சினிமாக்களில் அறிமுகமாகி சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்து இடங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் குழந்தையாக இருக்கும் போது அதுவும் நாற்பத்து ஒன்றாவது நாளிலிருந்தே நடிப்பதற்கு வந்துவிட்டார். நடிப்பு என்று தெரியாத வயதில் நடிக்க தொடங்கிய இவர் தற்போது நடிப்பில் பின்னி பெடல் எடுத்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவருக்கு அதிகமான தமிழ் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

பாவாடை தாவணியில் அசத்தல்
தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கேரக்டரிலும், வாடியம்மா என்னும் தெலுங்கு சீரியலில் சீதை கேரக்டரிலும், எடடுகுலு எனும் தெலுங்கு சீரியலில் வாணி கேரக்டரிலும் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது தான் நடித்து வரும் தெலுங்கு சீரியலில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர் சீரியல் இவரை குடும்பத்தலைவியாக புடவையில் அமைதியில் சொரூபமாக பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது பாவாடை தாவணியில் பவ்யமாக ஆட்டம் போட்டு இருக்கும் இவருடைய லேட்டஸ்ட் வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இது என்ன புது கெட்டப் என்று தான் கேட்டு வருகின்றனர்.

அதிக பட்ஜெட் வீடியோ
தான் நடிக்கும் தெலுங்கு சீரியலில் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை தற்போது அதிக அளவில் பட்ஜெட்டில் எடுத்த ரீல்ஸ் வீடியோ என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் அதிகமாக குவிந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த வீடியோவை இவருடைய ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் இந்த வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. அதில் பல ரசிகர்கள் அவருடைய அழகை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். தொடர்ந்து இந்த மாதிரி வீடியோவை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications