பாண்டியன் ஸ்டோர்ஸ்: சுகன்யாவிற்கு கோமதி போட்ட அடி.. பாண்டியனுக்கு தெரிந்த அடுத்த உண்மை.. அதிர்ச்சியில் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 ஜூலை 19ஆம் தேதிக்கான எபிசோடில் சுகன்யா பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் கோமதி சுகன்யாவை அடித்திருக்கிறார். அதோடு சுகன்யா பற்றிய இன்னும் சில உண்மைகளை பழனியும் பாண்டியனிடம் சொல்லி இருக்கிறார். இதனால் பாண்டியன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சுகன்யா பற்றி ராஜியும் மீனாவும் சொன்ன உண்மைகளை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்க, கோமதி சுகன்யாவிடம் போய் எதுக்காக இப்படி பண்ணுன? நீயாடி இப்படி எல்லாம் பண்ணுனா? என்று கேட்க அதற்கு சுகன்யா இவங்க ரெண்டு பேருக்குமே என்னை பிடிக்காது அதான் இப்படி மோசமா சொல்லுறாங்க என்று சொல்கிறார். உடனே கோமதி அரசியை கூப்பிட்டு இவ சொல்றது உண்மையா? ராஜி, மீனா சொல்றது உண்மையா? என்று கேட்க அரசி அமைதியாக இருக்கிறார்.

சுகன்யாவுக்கு விழுந்த அடி
உடனே சுகன்யா தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்க கோமதி கோபத்தில் இதுக்காகத்தான் நீ இந்த வீட்டுக்கும், அந்த வீட்டுக்கும் ஓடிட்டே இருந்தியா? என்று போட்டு அடிக்கிறார். உனக்கு கல்யாணத்தை நடத்தி வச்சதுக்காக எங்க அண்ணனுங்க உன்னை இந்த வீட்டில் நிம்மதியை கெடுக்க சொல்லி அனுப்பி வச்சாங்களா? அன்னைக்கு அரசி காணலைன்ன போது நீ எங்க கூட சேர்ந்து தேடிட்டு இருந்த மாதிரி நடிச்சிட்டு, மனசுக்குள்ள சந்தோசமா சிரிச்சிட்டு தான் இருந்தியா?
இத்தனை நாள் நல்லவ மாதிரி வேஷம் போட்டுட்டு இருந்திருக்க என்று கேட்க, சுகன்யா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். உனக்கு ஒரு தங்கச்சி இருந்தா அவளை இந்த மாதிரி ஒருத்தனுக்கு கட்டி வைப்பியா? என்று கோமதி மீண்டும் போட்டு அடிக்க மீனா மற்றும் ராஜி இருவரும் தடுத்து வருகின்றனர். ஆனால் கோமதி அவர்களையும் திட்டி அனுப்பி விடுகிறார். அந்த குமாரு என் பொண்ணை போட்டோவை காட்டி மிரட்டி இருக்கிறான் ஆனால் நீ நல்லவளா இருந்தா காரி துப்பி இருக்கணும். ஆனா நீயும் சேர்ந்து என் பிள்ளையை மிரட்டி இருக்கிறா என்று கோமதி அடிக்கிறார்.
கோமதி கேட்ட கேள்வி
அதோடு கோமதி இருக்கிற வரைக்கும் அவ பிள்ளைங்களை யாரெல்லாம் தொட முடியாது. உனக்கும் உன்னை அனுப்புனவங்களுக்கு சொல்லிக்கிறேன், எனக்கு என் பிள்ளைங்க முக்கியம். அவங்களுக்கு எதுவும் ஆபத்து வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லி கோமதி கோபப்பட, நான் எதுவும் பண்ணல என்று மீண்டும் சுகன்யா நடிக்கிறார்.
அப்போது அரசி கோபப்பட்டு எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான். இவங்கதான் என்கிட்ட ஏமாத்தி நடிச்சிட்டு இருந்திருக்காங்க என்று சொன்னதும் கோமதி மீண்டும் சுகன்யாவை போட்டு அடிக்கிறார். பாண்டியனும் வந்து சுகன்யா பக்கத்தில் வந்து உனக்கு நாங்க என்ன பாவம் செஞ்சோம்? எதுக்காக எங்க குடும்பத்தை இப்படி பழி வாங்குன? என்று கேட்க, சுகன்யா எதுவும் பேசாமல் இருக்கிறார். பிறகு குடும்பத்தினர் எல்லோரும் கோமதியை சமாதானம் செய்து தண்ணீர் குடிக்க வைக்கின்றனர்.
பழனி சொன்ன உண்மை
அடுத்த கட்டத்தில் பழனி தன்னுடைய மருமகன்களுடம் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எனக்கு இன்னைக்கு தான் நிம்மதியாய் இருக்கு அவா என்னை படுத்தின கஷ்டத்தை வெளியே சொல்ல முடியாது, சரவணனுக்கு தான் தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது பாண்டியன் வருகிறார். பழனி ஒரு மாதிரியாக பார்க்க, நான் புரிஞ்சுகிறேன் அவளை துரத்தினாலும் கவலைப்பட மாட்டேன் என்று சொல்ல, பாண்டியன் என்ன பேசுற அவ ஏற்கனவே வாழ்க்கையை தொல்லைச்சிட்டு வந்த பிள்ளை, இனிமே அது போல நடக்கக்கூடாது அந்த புள்ளைகிட்ட சொல்லி வை என்று சொல்கிறார்.
ஆனால் பழனி என்னால எதுவும் சொல்ல முடியாது மச்சான், அவ எனக்கு பயப்படுற ஆளே இல்ல ஆம்பளையா இருக்கிறதால சில விஷயத்தை சொல்ல முடியல என்று கல்யாணத்தில் இருந்து நடந்து விஷயத்தை சொல்லி பழனி அழுகிறார். அதற்கு பாண்டியன் இதை ஏன் நீ என்கிட்ட சொல்லல என்று கேட்கிறார். இந்த கல்யாணம் நடக்காம இருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன், அரசி வாழ்க்கையும் கஷ்டம் இல்லாமல் இருந்திருக்கும் என்று பழனி வருத்தப்பட்டு பேசுகிறார்.
பாண்டியன் அதிர்ச்சி
அப்போது கதிர் குமாரை என்ன செய்ய என்று கேட்க செந்தில் கை, காலை உடைக்கணும் என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன் நீங்க இப்படி பண்ணுனா ஜெயிலுக்கு போயிருவீங்க. நாம பேசாம போலீஸில் கேஸ் கொடுப்போம் என்று சொல்ல, கதிர் அவனை நாங்களே பார்த்துகிறோம் என்று சொல்ல, செந்திலும் ஆமா அவனுக்கு கொடுக்க வேண்டியதை நாங்க கொடுக்கிறோம் என்று சொல்கிறார். இதனால் பாண்டியன் கடுப்பாகி பார்க்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications