பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் மாற்றம்.. சுகன்யாவை வைத்து குமார் குடும்பத்தை கதற வைத்த மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஜூன் 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சுகன்யா சொன்ன வார்த்தைகளை வைத்து வேல் குடும்பத்தின் பணத்திற்கு மீனா பிரச்சனை கொடுத்திருக்கிறார். மீனா செய்த செயலுக்கு அரசி மீது பழி விழுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியின் திருமணம் நடந்துவிட்டது. இந்த திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசியை குமார் கடத்தி வைத்திருந்தார். அப்போது இனி அரசி குமாரை கல்யாணம் செய்து கொள்வாரா? அல்லது இந்த குமாருடைய சுய ரூபத்தை குடும்பத்திடம் நிரூபித்து அவருடைய அத்தை மகனையே கல்யாணம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

பழிவாங்கும் படலம்
ஆனால் கடைசியில் அரசி தனக்குத்தானே தாலி கட்டிக்கொண்டு தனக்கும் குமாருக்கும் கல்யாணம் முடிந்துவிட்டது என்று அனைவர் முன்பும் சொல்லிவிட்டார். அதோடு தன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கும் குமார் குடும்பத்தை பழி வாங்குவதற்காக அரசி இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்திருக்கிறார். ஆனால் அரசி உண்மையாகவே குமாரை விரும்பிதான் கல்யாணம் செய்து இருக்கிறார், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று குமாரின் அப்பத்தா உட்பட எல்லோரும் நம்பி கொண்டிருக்கிறார்கள்.
தொடரும் பஞ்சாயத்து
இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் நேற்றைய எபிசோடில் கூட குமார் அரசியை காட்டுக்குள் விட்டு விட்டு வந்திருந்தார் ஆனாலும் அரசி மீண்டும் வீட்டிற்கு வந்து குமாருக்கு அதிர்ச்சி கொடுத்தார். கடைசியில் பாண்டியன் முன்பு அரசியை அடித்து அசிங்கப்படுத்த, அதனால் கோபமான பாண்டியன் அந்த இடத்தை விட்டு கிளம்பி இருந்தார். இதை சாதகம் ஆக்கிக் கொண்ட குமார், இனி இப்படியே அரசியை சித்திரவதை செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
குமாருக்கு விழுந்த அடி
கடைசியில் அரசி சாம்பார் எடுத்து குமார் மீது கொட்டி விட்டார். இந்த நிலையில் அடுத்த வாரத்தில் அடுத்த பிரச்சனையும் வந்திருக்கிறது. அதாவது அடுத்த வாரத்திற்கு என்று வெளியான ப்ரோமோவில் குமாருடைய அப்பா, அவருடைய அண்ணனிடம் நம்மகிட்ட அம்பது லட்சம் பணம் வந்திருக்கிறது இதை வச்சு ஒரு இடத்தை வாங்கணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்து சுகன்யா பணத்தைப் பார்த்து அம்மா இவ்வளவு பணமா என்று சொல்லிவிட்டு போகிறார்.
மீனா செய்த செயல்
பிறகு சுகன்யா இந்த பணத்தைப் பற்றி பழனியிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அதை கேட்ட மீனா இன்கம் டேக்ஸ் ஆபிஸ்க்கு போன் செய்து வேல் குடும்பத்தில் கணக்கில் காட்டாத பணம் இருக்கிறது என்று சொன்னதும் அங்கு இன்கம் டேக்ஸ் ஆபீஸர்கள் வருகிறார்கள். அப்போது நாங்கள் இடம் வாங்க போறோம் என்று குமாரின் அப்பா சொல்ல, அதற்கு உரிய ஆவணங்களை காட்டுங்கள் என்று கேட்க, அப்படி எந்த ஆவணம் எதுவும் இல்லாததால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
வீண் பழி
உடனே மொத்த பணத்தையும் இன்கம் டக்ஸ் ஆபீஸர்ஸ் கொண்டு போகிறார்கள். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அப்போது குமாருடைய அப்பா தரித்திரம் புடிச்ச குடும்பத்தில் இருந்து ஒருத்தியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுதான் நம்மளுடைய கஷ்டத்துக்கு காரணம். அவ வீட்டுக்கு வந்த நேரம் நம்முடைய மொத்த பணமும் போச்சு என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications