பாண்டியன் ஸ்டோர்ஸ்: கதிரின் கனவுக்குக் கைகொடுத்த பாண்டியன்! - மோதலில் வெடித்த குமார் விவகாரம்! அழுத ராஜி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில், இன்றைய எபிசோடில் இதுவரைக்கும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த கதிர் மற்றும் பாண்டியன் இருவரும் பேங்குக்கு ஒன்றாக போய் இருக்கின்றனர். தன்னுடைய மகன்கள் மீது தனது இருக்கும் பாசத்தை இன்று பாண்டியன் காட்டி இருக்கிறார். அதோடு குமாருடைய அம்மா ராஜியை அவமானப்படுத்தி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
கதிரின் கனவு
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கதிர் தன்னுடைய பிசினஸுக்காக லோன் வாங்குவதற்கு வங்கியில் சூரிட்டி தேவைப்பட, அப்பா பாண்டியனிடம் தயக்கத்துடன் விஷயத்தைச் சொல்கிறார். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், பாண்டியன், "உனக்கு நான் சூரிட்டி கையெழுத்து போடுகிறேன்!" என்று சொல்கிறார். முதலில் கதிர் இதை மறுத்தாலும், செந்தில் அண்ணன், "இதுதான் நல்ல வாய்ப்பு கதிர்! அப்பா இப்படி எல்லாம் செய்ய முன்வர மாட்டார், ஒத்துக்கோ!" என்று அட்வைஸ் செய்கிறார். குடும்பத்தில் எல்லோரும் சொல்லவே, கதிரும் சம்மதித்து, பாண்டியனுடன் வங்கிக்குக் கிளம்புகிறார்.

பாண்டியனின் உறுதி
வங்கிக்குக் கிளம்பும் முன், செந்திலிடம் கோமதி "நீ வச்சிருக்க செண்ட்டை எனக்கும் அடிடா" என்று கேட்க, சரவணன் இதைப் பார்த்துச் சிரிக்கிறார். வங்கிக்குக் கிளம்பும்போது, கதிர் ஒரு காரைக் காட்ட, பாண்டியன் "இது எதுக்கு?" என்று கேட்கிறார். அதற்கு கதிர், "நான் டிரிப் போவதற்காக எடுத்து வைத்திருக்கிறேன். நீங்கள் என்னுடன் பைக்கில் வர முடியாது, வங்கிக்கு நடந்தும் போக முடியாது!" என்கிறார். அப்பா-மகன் இருவரும் காரில் கிளம்பிச் செல்கின்றனர்.
குமார் சிறை விவகாரம்
மறுபுறம், கோயில் சென்றுவிட்டு ராஜி மற்றும் மீனா சிரித்துப் பேசிக்கொண்டு வருகின்றனர். இதைப் பார்த்த குமாரின் அம்மாவும், ராஜியின் அம்மாவும் கோபத்தில் ராஜியை திட்டுகின்றனர். "நீ செஞ்சதுக்குத்தான் இவ்வளவு பிரச்சனையும்! அதுக்கு பழிவாங்கப் போய்த்தான் இப்போ குமார் ஜெயிலில் இருக்கான். அப்படியே இருந்துட மாட்டான். அவனை எப்படியும் வெளியில் அழைச்சிட்டு வருவோம்!" என்று குமாரின் அம்மா ஆவேசமாகப் பேசுகிறார்.
வெடித்த குடும்ப மோதல்
மீனா, "இப்போ ராஜி என்ன செஞ்சிருக்கணும்னு நினைக்கிறீங்க?" என்று கேட்க, அதற்கு ராஜியின் சித்தி உங்க குடும்பத்தில் எல்லோரும் குமார் மேலே கேஸ் கொடுக்கிறோம் என்று சொன்னபோது, "வேண்டாம்னு அண்ணனுக்காகப் பேசி இருக்கணும்!" என்கிறார்கள். "அது எப்படி குமார் செஞ்ச வேலைக்கு அமைதியா இருக்க முடியும்?" என்று மீனா பதிலுக்குக் கேட்க, "அவன் செஞ்சது இவ செஞ்சதாலதானே!" என்று அவர்கள் ராஜியை குறை சொல்கிறார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் ராஜி மற்றும் மீனாவைத் திட்டிவிட்டுச் செல்ல, ராஜி மீனாவிடம், "தனக்கும் கதிருக்கும் கல்யாணம் நடந்த சூழ்நிலையை சொல்லிவிடலாமா?" என்று கேட்க, மீனா அவளை "அமைதியா இரு!" என்று திட்டுகிறார்.
பாண்டியன் - சக்திவேல் மோதல்
பாண்டியன் வங்கி வாசலில் இறங்கிக்கொள்ள, கதிர் காரை நிறுத்தச் செல்கிறார். கதிர் வருவதற்குள் அங்கு குமாரின் அப்பா சக்திவேல் வந்துவிடுகிறார். "என்ன, என் பையனை ஜெயிலில் வச்சிட்டனு சந்தோசமா இருக்கியா? அப்படியே இருந்துட மாட்டான். அவனை வெளியில் அழைச்சிட்டு வருவோம்!" என்று சக்திவேல் ஆவேசமாகப் பேசுகிறார். அதற்குப் பாண்டியன், "பிள்ளை வளர்க்குறதுக்கு என்னைப் பார்த்து கத்துக்கோ!" என்று பதிலடி கொடுக்கிறார். இருவரும் காரசாரமாகப் பேசிக்கொண்டே இருக்கும் போது சக்திவேல் கோபமாகக் கத்த, அங்கு வரும் கதிர், "எங்க அப்பாகிட்டயே என்ன பேசுறீங்க!" எனத் திட்டுகிறார். பாண்டியன் கதிரைச் சமாதானம் செய்து வங்கிக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்.
வங்கிக்குள் நடந்த பரபரப்பு
வங்கிக்குள் சென்று அதிகாரியைச் சந்தித்த பாண்டியன், தான் கடை வைத்திருப்பதாகவும், தனது மகனுக்காக எங்கு கேட்டாலும் சூரிட்டி போடுவதாகவும் பெருமையுடன் சொல்கிறார். அதிகாரியும் பாண்டியனைப் பெருமையாகப் பேசிவிட்டு, அதற்கான வழிமுறைகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
மொத்தத்தில், இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' எபிசோடு கதிரின் எதிர்கால கனவுகளையும், குமார் விவகாரம் குடும்பங்களுக்குள் ஏற்படுத்தும் பிரச்சனைகளையும் மையப்படுத்தி, உணர்வுபூர்வமான மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications