Pandian Stores: சரவணனுக்கு ஷாக் கொடுத்த மயில்! கடுப்பான பாண்டியன், உடைந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்
சென்னை: (Pandian Stores 2 today serial) விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில், இந்த வாரத்தின் முக்கிய எபிசோட், குடும்பத்தில் ஒரு பெரிய கலவரத்தை உருவாக்கியுள்ளது. மருமகள் தங்கமயிலின் அப்பா செய்த திருட்டுப் பழி, அப்பாவி பழனி மீது விழுந்ததால், கடும் கோபத்தில் இருந்த சரவணன், மயிலை நேரடியாகப் பிடித்து விளாசுகிறான். ஆனால், அவள் அதை சமாளிக்கப் போட்ட நாடகம், கடைசியில் பாண்டியனை தலையில் கைவைத்துக் கவலைப்பட வைத்திருக்கிறது!

கதிரின் பாசமும், சரவணனின் கோபமும்
கோமதியின் அம்மா காந்திமதியின் பிறந்தநாளில் வைத்து, எந்தவித விளம்பரமும் இல்லாமல் கதிர் செய்த காரியங்களால், அவன் அனைவரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெறுகிறான். ராஜியும் அவனிடம், "எல்லாமே பண்ணிட்டு எப்படி எதுவுமே தெரியாத மாதிரி இருக்க? எப்படி ஒரே நாள்ல எல்லாரையும் ஒருத்தனால சந்தோஷப்பட வைக்க முடியும்?" என்று கேட்கிறாள். இதைக் கேட்டு வெட்கப்படும் கதிர், "என்னைத் திட்டுனா கூட வாக்குவாதம் பண்ணுவேன். ஆனால், பாராட்டும் போது என்னால எதுவும் பேச முடியலை. போதும் விடு" என்கிறான்.
சரவணனின் கொதிப்பு
இந்தக் குடும்ப பாசங்களுக்கு மத்தியில், மயிலின் அப்பா கடையில் திருடிய சம்பவத்தில் அப்பாவி பழனி மாமா மீது பழி விழுந்ததால், சரவணன் அப்செட்டில் இருக்கிறான். "இன்னைக்கு மயிலை ஒரு வழி பண்ணி விட வேண்டும்" என்று இரவு 11 மணி வரைக்கும் காத்து இருக்கிறான்.
மயில் போட்ட நாடகம்
சரவணன் தூங்கி இருப்பான் என்ற எண்ணத்தில் மயில் ரூமுக்குள் போகிறாள். ஆனால், தூங்காமல் காத்திருந்த சரவணன், அவள் வந்ததும், "உனக்கு வெட்கமா இல்லையா? உன் அப்பா பணம் திருடுனாருன்னு சொன்னேன்ல. கேட்டியா நீ?" என்று கொதித்தெழுகிறான். அதற்கு மயில், "எதுவுமே தெரியாததை போல் எந்தப் பணம் மாமா? நீங்க பேசுறதே எனக்குப் பிடிக்கலை" என்று பச்சையாகப் பொய் பேசுகிறாள்.
சரவணன் கோபத்துடன், "நடிக்காதடி. உங்களால இன்னைக்கு என் மாமா மேல அப்பா சந்தேகப்படுறாரு. சீ கருமம்!" என விளாசிவிட்டு ரூமை விட்டு வெளியில் போகிறான். அதன் பின்னர், மயில் அம்மாவுக்கு போன் போட்டு, "இனிமேல் யாருக்கும் தெரியாமல் அவரை கடைல பணத்தை எடுக்கச் சொல்றேன். அவர் எடுத்த பணத்தை என்கிட்டக் கொடுக்க வேற இல்லை" என்றுப் பேசுகிறாள். "இனிமேல் அப்பாவை பணத்தை எடுக்கக் கூடாதுன்னு சொல்லும்மா" என்று மயில் கோபப்படுகிறாள்.
மீண்டும் நாடகம்
சரியாக அந்தச் சமயத்தில் உள்ளே வந்த சரவணன், "என்னமோ பணமே எடுக்கலைன்னு சொன்ன? இப்போ எப்படி யாருக்கும் தெரியாமல் திருடுறதுன்னு பிளான் பண்றீங்களா?" என்று கேட்க, மயில் மீண்டும், "நான் அப்படியெல்லாம் பேசவே இல்லை" என்று நாடகம் போடுகிறாள். மயிலின் நடிப்பால் கடுப்பான சரவணன், "உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசவே முடியாது. நாளைக்கு உன்னைப்பத்தி எல்லாத்தையும் வீட்ல சொல்றேன். இதுதான் இன்னைக்கு உனக்கு இந்த வீட்ல கடைசி நாள்!" என்கிறான்.
திடீர் விலகல்
இதனால் கடும் அதிர்ச்சியாகும் மயில், விடிந்ததும் சரவணன் எழுவதற்கு முன்பாகவே, பேக்கைத் தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வந்து நிற்கிறாள். பாண்டியன், கோமதி பார்த்து என்னவென்று கேட்க, "உங்க பையன் பேசுறதைக் கேட்டு என்னால இதுக்கு மேலயும் இந்த வீட்ல இருக்க முடியாது. நான் வாழவெட்டியா வாழ்ந்துட்டு போறேன்" என்று சொல்லி மொத்தக் குடும்பத்துக்கும் அதிர்ச்சி கொடுக்கிறாள்.
பாண்டியன், கோமதி என்னவென்று விசாரிக்க, மயில் பாதி விஷயங்களை மறைத்துவிட்டு, தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் குழந்தை இல்லை என்றதும் சரவணன் தன்னைக் கொடுமைப்படுத்துவது போல போட்டு நாடகத்தை போடுகிறாள். இதை முதலில் கோமதி நம்பவில்லை என்றாலும் மயில் கடவுள் மேல சத்தம் சத்தியம் செய்ததால் சரவணனைக் கூப்பிட்டுத் திட்டித் தீர்க்கின்றனர். பாண்டியனும், "ஒழுங்கா மயிலை உள்ள கூட்டிட்டு போய் வாழுற வழியைப் பாரு" என்று கடுமையாக எச்சரிக்கிறான்.
இதனையடுத்து அவளை உள்ளே அழைத்து வர, மயில் "என் வாழ்க்கையை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை" என்று நாடகத்தைத் தொடர, சரவணனோ, "என்னைக்குமே நீ தப்பிச்சுட்டு இருக்கலாம்னு நினைக்காத" என்று கோபத்தோடுசொல்லிவிட்டு, இந்த எபிசோடை ஒரு பரபரப்பான முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டான். இனிமேல் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications