பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் இருந்து விலகிய வசந்த் வசி.. இனி இவருக்கு பதில் யார் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து "செந்தில்" கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வசந்த் வசி விலகி இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக முக்கிய நடிகர் இனி செந்தில் ஆக நடிக்க இருக்கிறார். அது பற்றி இதில் பார்க்கலாம்.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். முதல் சீசனின் அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்தது. அந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்ததும் அதை தொடர்ந்து இரண்டாவது சீசன் உடனே தொடங்கப்பட்டது.

அதிலும் இரண்டாவது சீசனில் அப்பா மற்றும் மகன்களின் கதையை மையப்படுத்தி இருந்து வருகிறது. கூட்டு குடும்பம் மற்றும் அதில் வரும் பிரச்சனைகள், காதல், மோதல் என்று இந்த சீரியலில் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பது ரசிகர்களை இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அதனாலயே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் செந்தில் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வசந்த் வசி சீரியலில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

இனி அவருடைய கேரக்டரில் செந்தில் ஆக நடிகர் வெங்கட் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்திருந்தார். மீனா மற்றும் ஜீவாவிற்கு அந்த நேரத்தில் அதிகமான ரசிகர்கள் உண்டு. அதனால் இணையத்தில் இவர்கள் இருவருக்கும் பேன்ஸ் பேஜ் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்2 சீரியலிலும் மீனாவாக ஹேமா நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக செந்தில் கேரக்டரில் அதே பழைய வெங்கட் மீண்டும் அறிமுகமாகிறார். இவர்கள் இருவருடைய காம்போவால் இனி டிஆர்பி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவுக்கு பிறகு வெங்கட் விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

அந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்தது. அதற்குப் பிறகு எந்த சீரியலிலும் வெங்கட் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் நடிகர் வசந்த் வசி எதற்காக சீரியலில் இருந்து விலகினார் என்பது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் சமீபத்தில் தான் அவர் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியளராக கலந்து கொண்டு அதிலிருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். அதுவும் பெரிய அளவில் பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications