பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ராஜி வீட்டில் கொண்டாட்டம்.. பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதாநாயகியாக ராஜி கேரக்டரில் நடிகை ஷாலினி நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கணவரின் பிறந்தநாளை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் ஷாலினியின் கணவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு பல பெண்களின் கனவுகள் முடக்கப்படுவதை அதிகமான வீடுகளில் பார்க்க முடிகிறது. ஆனால் ஷாலினியின் கணவன் அவர் ஆசைப்பட்ட மாதிரி ஷாலினிக்கு வாழ்க்கை வெற்றி அடைய அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறாராம். ஷாலினியின் கணவர் மட்டுமல்லாமல் அவருடைய மாமியாரும் ஷாலினிக்கு உதவியாகத்தான் இருக்கிறாராம். இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷாலினி உருக்கமாக பேசியிருந்தார்.

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலின் ராஜியாக பலருக்கும் தெரிந்த ஷாலினி ஆரம்பத்தில் சின்ன திரையில் அறிமுகமானது கதாநாயகி என்ற நிகழ்ச்சியில் தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் தன்னுடைய திறமையை காட்டி பலருக்கும் பரிச்சயமாக இருந்தார். ஷாலினி தமிழ் பொண்ணு அதுவும் தமிழில் சரளமாக பேசக்கூடியவராக இருந்தாலும் இவருக்கு சீரியலில் டப்பிங் குரல் தான் பேசி இருக்கின்றனர். ஷாலினியின் சொந்த ஊர் கோயம்புத்தூர் தானாம்.
அங்கு தான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாமே. சின்ன வயசுல இருந்து ஆடுவது, பாடுவது போன்றவற்றில் ஆர்வமாக இருந்த ஷாலினிக்கு வீட்டில் இதற்கெல்லாம் அனுமதி கிடையாதாம். அதனால் படித்து முடித்து ஐடியில் சாப்ட்வேர் டெவலப்பராக இருந்து போது தான் ஷாலினி நம்ம கேரியரை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். அந்த நேரத்தில் பிரபு என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.

பொதுவாக பலரும் நடித்த பிறகுதான் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள். ஆனால் ஷாலினி திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்திருக்கிறார். தன்னுடைய மனைவிக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்ட கணவர் பிரபு ஷாலினியை பல இடங்களுக்கு ஆடிஷனுக்கு கூட்டிட்டு போயிருக்கிறார். அந்த மாதிரி கிடைத்த வாய்ப்பு தான் கதாநாயகி நிகழ்ச்சி. கோயம்புத்தூரில் நடந்த அந்த ஆடிஷனில் பல ஆயிரம் பேர் கலந்து இருக்காங்க.

அதில் முதலில் 80 பேரை செலக்ட் பண்ணி, அப்புறம் அதுல 50 பேரை செலக்ட் பண்ணி, அதுல இருந்து 30 பேரை செலக்ட் செய்து பிறகு 20 பேரை செலக்ட் செய்து கடைசியா அதுல எட்டு பேரை தான் செலக்ட் பண்ணி இருக்காங்க. அதில் எட்டு பேர்ல அடுத்தடுத்த பெர்ஃபார்மன்ஸ் பண்ணி அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வந்த கே. எஸ் ரவிக்குமார், நடிகை ராதிகா இருவருடைய மனதிலும் இடம் பிடித்து கதாநாயகி நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்று இருந்தார்.
அதுபோல ஷாலினி கதாநாயகி நிகழ்ச்சியில் பருத்தி வீரன் ப்ரியாமணி, சின்னதம்பி குஷ்பூ போன்ற பல கெட்டப்களில் நடித்து அங்கிருந்தவர்களை வியக்க வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஷாலினியின் கணவர் பிரபு நடத்திய ஸ்டுடியோவில் ஷாலினி நடன பயிற்சி வகுப்பில் சேர்ந்துதான் அவரை காதலித்திருக்கிறார்.

ஷாலினி காதலித்ததை நேரடியாக பிரபுவின் அம்மாவிடம் கூறி, உங்க பையனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனால் அவர் ஷை டைப்பாக இருக்கிறார் என்று பேசி இருக்கிறார். பிறகு பிரபுவின் அம்மா இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். அதுபோல ஷாலினிக்கு கணவர் மட்டும் இல்லாமல் ஷாலினியின் மாமியாரும் அவருடைய கனவு நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications