பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்( Pandian Stores 2 serial today episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில், கோமதி ஹாஸ்பிடலில் இன்னும் கண் விழிக்காமல் இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய மகள் நிலைமையை நினைத்து காந்திமதியும் அழுது கொண்டிருக்கிறார். தான் செய்த தவறை நினைத்து பாண்டியன் வருந்துகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் (Pandian Stores 2 serial April 1 Episode ) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், ஹாஸ்பிடலில் கோமதியை செக் பண்ணிய டாக்டர் வெளியே வந்து, அவங்களுக்கு பிரஷர் மற்றும் பிபி மிகவும் குறைந்து போயிருப்பதாக கூறுகிறார். மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொண்டாங்களா என்று கேட்க, யாரும் சரியான பதில் சொல்ல முடியவில்லை. எவ்வளவு நேரம் மயங்கி இருந்தார் என்பதற்கும் பாண்டியன் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார்.
கதறும் பாண்டியன்
கோமதிக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை என்றும், உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை என்றும் டாக்டர் சொல்கிறார். இதனால் பாண்டியன் கவலையுடன் அமர்ந்திருக்கிறார். அவ நமக்காக பார்த்து பார்த்து எல்லா வேலையும் செஞ்சுட்டு இருந்தா ஆனா அவ சாப்பிட்டாளா இல்லையா என்று கூட யாருக்கும் தெரியலையே என்று பாண்டியன் புலம்பி கொண்டிருக்கிறார். மீனா அவரை சமாதானப்படுத்துகிறார். வீட்டில் கோமதி ஹாஸ்பிடலில் இருப்பது தெரிந்ததும் அரசி, காந்திமதி, ராஜி என எல்லோரும் கவலையாக இருக்கிறார்கள்.
அம்மா பாசம்
அப்போது காந்திமதி, நான் என் பசங்க வீட்டில் இருக்கும்போது கூட என் பொண்ணு பக்கத்துல இருந்தா நல்லா பாத்துக்குவேன்னு சொல்லிக்கொண்டே இருப்பேன். ஆனா இன்னைக்கு அவ உடம்பு சரி இல்லாம இருந்த நேரத்தில் நான் கூட இல்லாம போயிட்டேனே என்று அழுது கொண்டிருக்கிறார். அதோடு நான் பெத்த பொண்ணு இன்னைக்கு முடியாமல் ஹாஸ்பிடல்ல கண்ணு முழிக்காமல் கிடக்குறா.. நான் குத்துக்கல்லா இருக்கிறேன் என்றெல்லாம் அழுது கொண்டிருக்கிறார்.
ஹாஸ்பிடலில் நர்ஸ் வந்து ரெண்டு பேராக உள்ளே சென்று பார்க்கலாம் என அனுமதிக்கிறார். முதலில் பாண்டியன் மற்றும் சரவணன் உள்ளே செல்கிறார்கள். கோமதி கண் திறக்காததால் பாண்டியன் கவலையடைகிறார். பிறகு டாக்டர் மீண்டும் வந்து பார்க்கிறார். அதன்பின் மீனா மற்றும் கதிர் உள்ளே செல்கிறார்கள். அந்த நேரத்தில் செந்தில் போன் செய்து வரலாமா என கேட்க, மீனா இப்போது யாரும் வர வேண்டாம் என்று சொல்கிறார்.
பீல் பண்ணும் பாண்டியன்
பின்னர் மீனா மற்றும் கதிர், சரவணனிடம் பாண்டியனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சொல்கிறார்கள். பாண்டியன் முதலில் மறுக்கிறார், ஆனால் மீனா சொன்னதால வீட்டுக்கு போகிறார். வீட்டுக்கு வந்த பாண்டியன் யாரிடமும் பேசாமல் தனது அறைக்கு சென்று தனியாக இருக்கிறார்.
கோமதி கீழே விழுந்ததும் கூப்பிட்ட போது தான் போய் பார்க்காததை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது சரவணன் வந்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications