பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஏப்ரல் 11ஆம் தேதிக்கான எபிசோடில், தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பற்றி பழனி சரவணனிடம் பேசுகிறார். மறுபக்கத்தில் ராஜுடைய அப்பாவிற்கு கேன்சர் இருக்கும் விஷயம் கதிருக்கு தெரிந்ததால் அவருக்காக முக்கிய முடிவு எடுத்திருக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், முத்துவேலோட உயிருக்கும் கொஞ்சம் ஆபத்து இருக்கலாம் என்று டாக்டர் சொன்னதை கேட்ட கதிர் ரொம்ப ஷாக் ஆகிடுறார். அதே நேரத்தில் மறுபக்கம் மீனா, செந்தில்கிட்ட ஒரு முக்கிய விஷயம் சொல்லுறார். ஆபீஸ்ல இருந்து அடுத்த வாரம் சென்னை ட்ரெயினிங்குக்கு அனுப்புறாங்க என்று சொல்றார். அதைக் கேட்ட செந்தில் உடனே "நானும் உன்னோடவே வர ட்ரை பண்ணுறேன்" என்று சொல்லி சப்போர்ட் பண்ணுறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அப்டேட்
இதற்கிடையில் கதிர் நேராக முத்துவேலிடம் போய் "என்னாச்சு?" என்று கேட்கிறார். அதற்கு முத்துவேல் எதுவும் பெரிய விஷயம் இல்லன்னு மாதிரி "எனக்கு ஒன்னும் இல்ல" என்று தவிர்க்க முயற்சிக்கிறார். ஆனா கதிர், "நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன், உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எல்லாம் தெரியும்" என்று சொல்லி நேராக கேட்கிறார். அதோடு, "வீட்டில இருந்து யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்ல?" என்றும் கேட்கிறார்.
அதற்கு முத்துவேல் கொஞ்சம் எமோஷனலாகி, "வீட்டில இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சா அவங்க எல்லாரும் அழுவாங்க... அதனால சொல்லல" என்று பதில் சொல்றார். அதற்கு கதிர் நீங்க உங்க தம்பி கிட்டையாவது சொல்லி இருக்கலாம் என்று சொன்னதும் அவன் வெளியில பார்க்க தான் கரடு முரடாக இருப்பான் ஆனால் இந்த விஷயத்தை கேட்டா உடஞ்சு போயிருவான் அழுதுருவேன் என்று சொல்கிறார்.
கதிர் எடுத்த முடிவு
பிறகு இதற்கு என்ன ட்ரீட்மென்ட் எடுக்க போறீங்க என்று கதிர் கேட்க, நாளைக்கு தஞ்சாவூருக்கு போக சொல்லி இருக்காங்க அங்க ஒரு டாக்டரிடம் பேச வேண்டும் என்று சொன்னதும் நான் உங்க கூட வரேன் என்று கதிர் சொல்கிறார். அதற்கு வேண்டாம் என்று முத்துவேல் மறுத்து விடுகிறார். ஆனாலும் கதிர் விடாமல்உங்க நம்பரை குடுங்க, நான் டாக்டரிடம் பேசிவிட்டு நாளைக்கு கண்டிப்பா உங்கள கூட்டிட்டு போறேன் என்று முத்துவேலிடம் நம்பரை வாங்குகிறார்.
தங்க மயில் கேட்ட கேள்வி
அதற்கு அடுத்த சீன்ல சரவணனும் பழனியும் டீ குடிச்சுக்கிட்டு கடை விஷயங்கள் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. அப்போ அந்த இடத்துக்கு மயில் வர்றதை பார்த்த உடனே சரவணன் முகம் சுளிச்சு கோபப்படுறார். மயில் நேராக பழனியிடம் போய் "எப்படி இருக்கீங்க?" என்று சாதாரணமா விசாரிக்கிறார். அதற்கு பழனி நீ என்னை ஜெயிலுக்கு அனுப்பாததால நான் நல்லா தான் இருக்கிறேன் என்று பதில் கொடுக்கிறார். பிறகு கடை பற்றி கேட்க அதற்கும் பழனி சரியாக பதில் சொல்லாததால் மயில் அங்கிருந்து போய் விடுகிறார்.
கோபத்தில் சரவணன்
அதை பார்த்த சரவணன் உடனே கிண்டலாக, "பார்த்தியா மாமா... ஏதோ நல்லவள் மாதிரி வந்து நலம் விசாரிச்சிட்டு போறா" என்று சொல்லுறார். அதுக்கப்புறம் சரவணன் மயில் கர்ப்பமாக இருப்பதாக கோவிலில் வைத்து சொன்ன விஷயத்தை சொல்கிறார். ஆனால் தன்னை ஏமாற்றத்துக்கு மயில் நாடகம் போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பழனி கேட்ட விஷயம்
இதைக் கேட்ட பழனி கொஞ்சம் அதிர்ச்சியுடன், "உண்மையாவா... அவ கர்ப்பமாக இருக்கலாமா?" என்று சந்தேகத்தோட கேட்கிறார். இதைக் கேட்டு கடுப்பான சரவணன் கோபப்படுகிறார். இதனால் பழனி பேச்சை மாற்றுகிறார். அந்த நேரத்தில் சுகன்யா போன் போட்டு கடைக்கு கூப்பிட்டதும் பழனி அங்கிருந்து போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications