பாண்டியன் ஸ்டோர்ஸ்: நல்ல மாமியாராக முடிவெடுத்த கோமதி.. பாண்டியனின் நெகிழ வைத்த செயல்! பாவம் சரவணன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ( Pandian Stores 2 serial today episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஏப்ரல் 16ஆம் தேதிக்கான எபிசோடில், சரவணன் சொன்ன ஒரு வார்த்தையை கேட்டு கோமதி அவரை அடித்து வெளுத்து இருக்கிறார். இதுவரைக்கும் மாமியார் என்ற அதிகாரத்தில் கோமதி பலமுறை பேசி இருந்தாலும் இன்று ஒரு நல்ல மாமியாராக பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் (Pandian Stores 2 serial April 16 Episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், கதிரும் அவருடைய மாமனார் முத்துவேலும் திருச்சியில் இருக்கும் ஹாஸ்பிடலில் எல்லா செக்கப்பும் எடுத்து விட்டு டாக்டரிடம் விசாரிக்கின்றனர். அப்போது ஆக்டர் இவர் கேன்சரின் ஆரம்ப ஸ்டேஜில் இருப்பதாகவும், சில சிகிச்சைக்கு பிறகு ஆபரேஷன் செய்து கொண்டால் இதெல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார். ட்ரீட்மெண்ட் முழுமையாக எடுக்கவில்லை இல்லை என்றால் எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
அப்போது கதிர் முத்துவேலுக்கு ஆறுதலாக பேசி துணையாக கூடவே இருக்கிறார். மறு பக்கத்தில் மீனாவிடம் பாண்டியன் விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா சரவணனிடம் வந்து தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னதும் அவர் இந்த குழந்தை என்னுடையது இல்ல, வயிற்றில் இருக்கும் குழந்தை யாருடையது என்று கேட்டதை பற்றி போட்டுக் கொடுக்கிறார்.
கோமதி கேட்ட கேள்வி
அதனால் பாண்டியனும் கோமதியும் அதிர்ச்சியில் சரவணனா அப்படி சொன்னான் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு மீனா ஆமாம் சத்தியமாக அவர் அப்படி சொன்னாரு என்று சொன்னதும் பாண்டியன் செந்திலிடம் நீ போய் சரவணனை வீட்டுக்கு வர சொல்லு என்று அனுப்பி வைக்கிறார். உடனே செந்திலும் கடைக்கு போய் சரவணனை வீட்டுக்கு போக சொல்கிறார்.
அதிர்ச்சியில் சரவணன்
அதற்கு சரவணன் என்னாச்சு? என்ன பிரச்சனை? எதுக்காக என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க செந்தில் கடுப்பாகி தயவு செய்து நீ வீட்டுக்கு போ அண்ணே அங்க தெரியும் என்று அனுப்பி வைக்கிறார். பிறகு வீட்டுக்கு வந்ததும் சரவணனிடம் கோமதி உன் கிட்ட தங்கமயில் வந்து பேசினாளா? என்று விசாரிக்கிறார். அப்போது சரவணன் ஆமா ஆனால் ஏற்கனவே கர்ப்பமாய் இருக்கிறேன் என்று ஏமாற்றியது போல இந்த முறையும் ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தேன்னு சொல்கிறார்.
சரவணனை அடித்த கோமதி
ஏற்கனவே என்னை நம்ப வைத்து ஏமாத்துனவள் தானே அதேபோலத்தான் இப்பவும் சொல்லுதானு நினைத்தேன் என்று சொல்ல, அதற்கு கோமதி அதற்காக நீ இத்தனை நாள் உன்கூட வாழ்ந்த பொண்டாட்டியிடம் உன் வயித்துல இருக்கிறது யாரு குழந்தை என்று கேட்டியா? இப்படியா உன்னை வளர்த்தேன்... அடுத்தவங்களை கஷ்டப்படுத்துறதுக்கு உனக்கு எப்படி மனசு வந்துச்சு என்று கன்னத்தில் அரைகிறார்.
பாண்டியன் எடுத்த முடிவு
பிறகு மீனா டாக்டரிடம் சென்று செக்கப் பண்ணினதும் டாக்டர் குழந்தை விஷயத்தை கன்ஃபார்ம் பண்ணியதையும் சொன்னதும் சரவணன் என்ன முடிவெடுக்க என்று தெரியாமல் அதிர்ச்சியில் நிற்கிறார். பிறகு கோமதி என்ன இருந்தாலும் அது நம்ம வீட்டு குழந்தை... இதில் நீங்கதான் முடிவு எடுக்கணும் என்று சொன்னதும் சரவணன் அதிர்ச்சியில் இருந்து கொண்டிருக்கும் போது பாண்டியன் எப்படி இருந்தாலும் அது நம்முடைய குடும்ப வாரிசு.. அதனால முக்கிய முடிவு எடுத்திருப்பதாக சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications