பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: ராஜி எடுத்த அதிரடி முடிவு! தங்கமயில் சொன்ன விஷயம்! அதிர்ச்சியில் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை, ஆகஸ்ட் 12, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில், அரசிக்கு நேர்ந்த அவமானத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாண்டியன் ஒரு துணிச்சலான செயலைச் செய்துள்ளார். தெருவில் உள்ளவர்கள் தன் மகளை அசிங்கமாகப் பேசியதால், அதைத் தடுக்க வேண்டும் என்று பாண்டியன் முடிவெடுக்கிறார்.

Pandian Stores Vijay TV

ராஜிக்கு வந்த சோதனை

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், குமாரவேல் ஜாமீனில் வெளியே வந்ததும், வடிவு, "மீண்டும் ராஜியை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்," என்று கூறுகிறார். அதைக் கேட்டதும் குமார் அதிர்ச்சி அடைகிறார் அப்போது இந்த அரசு கல்யாணம் நடந்த சம்பவத்தை கட்சியும் வீட்டில் நடந்த குழப்பங்கள் பற்றியும் எல்லோரும் சொல்கின்றனர்.

பிறகு, "அரசிக்கு எப்படி கல்யாணம் நடந்ததோ, அதேபோல நாமும் ராஜியை அழைத்து வரலாம்," என்று ராஜி அம்மா சொல்ல, முத்துவேலும் அதைச் சரி என்று கூறிவிடுகிறார். ஆனால், அப்பத்தா, "எதா இருந்தாலும் பொறுமையாக யோசித்துச் செய்யுங்கள். இந்த முடிவு எனக்குச் சரியான படவில்லை," என்று கூறிவிடுகிறார். முத்துவேல், "என் மகளின் வாழ்க்கையை பணயம் வைத்து, இரண்டு குடும்பங்களும் சேர வேண்டாம்," என்று கூறுகிறார்.

ராஜி எடுத்த அதிரடி முடிவு

வடிவும், முத்துவேலும், ராஜியை அழைத்துச் செல்ல, பாண்டியனின் வீட்டு வாசலில் நிற்கின்றனர். மயிலிடம், "அவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள்?" என்று ராஜி கேட்க, "உன்னை அழைத்துச் செல்ல வந்து இருக்கிறோம்," என்று அவர்கள் கூறுகின்றனர். ராஜி அதிர்ச்சியில் நிற்க, கோமதி, "என்ன பேசுறீங்க?" என்று கேட்க, "ஏன், உன் மகளை இப்படித்தானே அழைத்துச் சென்றீர்கள்," என்று வடிவு கேட்க, கோமதியின் வாய் அடைபடுகிறது.

அப்போது ராஜி தனக்கு இந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் உதவியாக இருந்தது, சப்போர்ட் செய்தது குறித்து மீனா மற்றும் கோமதி பற்றி பெருமையாக பேசுகிறார். ஆனால் தங்கமயில் மற்றும் அரசி பற்றி எதுவும் சொல்லாததால் இவள பாரு என் பேரை ஒரு இடத்தில் கூட நல்லபடியா சொல்லலையே என்று தங்கமயில் வருத்தப்பட, அதற்கு அரசி என்னை பற்றியும் சொல்லல அவங்க இந்த வீட்டிற்கு வந்தபோது யாரு அவங்களுக்கு உதவி செஞ்சார்களோ அவர்களை பற்றி மட்டும் சொல்லுறாங்க விடுங்க அண்ணி என்று சமாதானப்படுத்துகிறார்.

பிறகு ராஜி கதிரிடம் வந்து வீட்டுக்கு போவது பற்றி கேட்கிறார். அதற்கு கதிர் மனதுக்குள் 'போகாதே' என்று நினைத்தாலும், "உன் இஷ்டம்," என்று சொல்லிவிடுகிறார். ராஜி, வெளியில் வந்து, "அப்பா, அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள்," என்று சொல்லி, "அரசிக்கும், எனக்கும் வீட்டில் தெரியாத ஒரே விஷயம், அவளுக்கு பயந்து தாலி கட்டிக்கொண்டாள். ஆனால், எனக்கு கதிர் கட்டினான். எங்கள் திருமணம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. நான் எங்கும் வரவில்லை," என்று உறுதியாகக் கூறிவிடுகிறார்.

ராஜி, கதிரின் அன்பு

ராஜி, "நான் கஷ்டப்பட்டு இங்க இல்லை. பிடித்துத்தான் இருக்கிறேன். என்னை கதிர் நல்லபடியாகப் பார்த்துக் கொள்கிறான். என் கனவுக்காக அவன் உழைக்கிறான். மாமா, அத்தை, அக்கா என இங்கு இருக்கவே எனக்குப் பிடித்திருக்கிறது," என்று சொல்லிவிடுகிறார். "என்னைத் தப்பா நினைத்துவிடாதீர்கள், என்னை வெறுத்துவிடாதீர்கள். பார்த்தால் சிரிங்க, பேசுங்க. எனக்கு அது போதும்," என்று ராஜி உருக்கமாகப் பேசுகிறார். இதைக் கேட்டு, வடிவும், முத்துவேலும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். கோமதி, "என் மருமகளுக்கு இங்க இருக்கத்தான் பிடிச்சு இருக்கு. அவளை கட்டாயம் செய்யாதீங்க," என்று கூறுகிறார்.

பாண்டியனின் பெருமை

சமீபத்தில் பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை பலர் வெளியே சொல்வதற்குப் பயந்து போய் மறைத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஒரு பெண் பிள்ளைக்குப் பிரச்சனை என்றால், அதை மறைத்து வைக்காமல், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். அதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மொத்த குடும்பமும் ஆறுதலாக நிற்க வேண்டும் என்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ஒரு முக்கியமான செய்தியைக் காட்டியுள்ளது. ராஜி எடுத்த இந்த அதிரடி முடிவு, கதிரின் அன்பு, மற்றும் கோமதியின் ஆதரவு, இந்த சீரியலுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+