பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: ராஜியால் குடும்பத்துக்குள் வந்த பிரச்சனை! கதிர் சொன்ன விஷயம்! மீனா பார்த்த காட்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை, ஆகஸ்ட் 12, 2025: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில், இன்று, ராஜி மற்றும் கதிரின் காதல் சண்டையும், சக்திவேலின் பிடிவாதமான பேச்சும், சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pandian Stores Vijay TV

சக்திவேலின் பிடிவாதம்

இன்றைய எபிசோடு நான் ஆரம்பத்தில், ராஜி வீட்டுக்குச் செல்லவில்லை. ராஜி, தன் அப்பா அம்மாவிடம், "என்னைப் பார்த்துச் சிரித்து பேசினால் அது போதும். இனிமேல் என்னை வீட்டுக்கு எல்லாம் கூப்பிடாதீங்க," என்று சொல்கிறார். இதைக் கேட்ட கதிர், மகிழ்ச்சியில் குடிக்கிறார் இதை மீனா கவனிக்கிறார். ராஜி, தன் வீட்டுக்குப் போகாததால், சக்திவேல், முத்துவேலைப் பார்த்து, "இனிமேல் ராஜி வீட்டுக்கு வரமாட்டாளா?" என்று கேட்கிறார். அதற்கு முத்துவேல், "ராஜிக்கு இங்கே வர்றதுல விருப்பம் இல்லை. அதைப்பத்தி இனிமேல் பேச வேணாம்," என்று சொல்லிவிடுகிறார்.

சக்திவேலின் கோபம்

சக்திவேல், "அவ அப்படித்தான் சொல்லுவா. வீட்டுக்குள்ள போய் அடிச்சு அழைச்சிட்டு வந்தா," என்று பிடிவாதமாகப் பேசுகிறார். "அவ எப்போ கதிருடன் சந்தோஷமா இருக்கேனு சொல்லிட்டாளோ, இனிமே இதைப்பத்தி பேச வேண்டாம்," என்று வடிவு சொல்லிவிடுகிறார்.

ராஜி, கதிரின் காதல் சண்டை

ராஜி, கதிரைப் பார்த்து, "நான் வீட்டை விட்டுப் போகல என்று வருத்தமா இருக்கிறியா? நான் அப்படியே அப்பா, அம்மா கூட போனாப் பிறகு நீ சந்தோஷமா இருக்கலாம் என்று முடிவெடுத்திட்டியா?" என்று கோபமாகக் கேட்கிறார். எதுவும் பேசாமல் கதிர் அமைதியாக நிற்கிறார். மீனா, ராஜியிடம், "கதிரை உன் இஷ்டம் எனச் சொல்லிட்டான்," என்று சொல்கிறார். "சரி, நீ ஏன் அதுக்கு இப்படி இருக்க?" என்று மீனா கேட்க, ராஜி, "அவனை விரும்பி தொலைஞ்சிட்டேனே," என்று கத்த, மீனா சிரிக்கிறார்.

சமாதானம்

மீனா, ராஜியிடம், "அவனுக்கு உன்னை போகாதேனு சொல்ல ஆசை இருந்திருக்கும். ஆனால், வாயில் வந்திருக்காது," என்று சொல்கிறார். பாண்டியன், குடும்பத்தினரை அழைத்து, "நாளைக்கு குமாருடனான கேஸ் கோர்ட்டுக்கு வருவதாகச் சொல்கிறார். அரசி, "நீங்க இருக்கீங்களே அப்பா. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் வரேன்," என்று சொல்கிறார். கதிர், "அவனை அடிச்சு கையை உடைக்கணும்," என்று கோபமாகக் கூற, பாண்டியன், "இதெல்லாம் எதுவும் வேண்டாம்," என்று திட்டுகிறார்.

இப்படி, இன்றைய எபிசோடில், ராஜி, கதிரின் காதல் சண்டையும், சக்திவேலின் பிடிவாதமான பேச்சும், பாண்டியன் குடும்பத்தினரை, அடுத்தடுத்த பிரச்சனைகளை நோக்கித் தள்ளிச் செல்கிறது. இது, சீரியலின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+