Pandian Stores 2 : மீனாவுக்கு சப்போர்ட் செய்த மயில்! குமார் செய்த செயல்! பாண்டியன் எடுத்த முடிவு
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல், குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், சவால்களையும் மையப்படுத்தி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் மயில், மீனா, ராஜி மற்றும் கதிர் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான திருப்பங்களைப் பற்றி விரிவாகக் காணலாம்.

பண விவகாரத்தில் மயில் - சுகன்யா மோதல்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவின் அப்பாவிடம் பணம் பற்றிச் சுகன்யா பேசியதை அறிந்த மயில், "நீங்கள் இப்படிச் செய்வீங்கனு நான் எதிர்பார்க்கல" என்று சுகன்யாவிடம் கோபமாகச் சொல்கிறார். அதற்கு சுகன்யா, "நான் பொய் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொன்னேன்" என்று பதிலளிக்கிறார். இந்த விவகாரத்தால் மயிலுக்கும் சுகன்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது.
ராஜியால் அம்பலமான குமார்
அடுத்ததாக ராஜி வீட்டிற்கு வரும்போது, அரசி குமாரைச் சந்தித்த விஷயத்தைச் சொல்கிறார். இதைக் கேட்ட அரசி அதிர்ச்சியாகிறார். பின்னர், குமார் அரசியின் வீட்டிற்கு வெளியே நின்று கூப்பிட, கதிர் அங்கு வந்து விடுகிறார். குமாரைக் கண்ட கதிர், "ஏன் அரசியை இப்படி கூப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்கிறார். குமார் மாட்டிக்கொண்டதால், அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்ததாக மயில் கோமதியை பார்த்து நீங்க இப்ப ரொம்ப மாறிட்டீங்க என்று சொல்கிறார் அதற்கு கோமதி நான் இன்னும் மாறல என்று கோபமாக சொல்கிறார்.
மீனாவின் தந்தையின் குழப்பம்
மீனாவின் அப்பா, மீனா செய்த பண விவகாரத்தைப் பற்றித் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த மீனாவின் அம்மா, "பண விஷயத்தை நினைத்தால் எனக்கும் கோபம் தான் வருகிறது" என்கிறார். அப்போது, "மீனா பணம் கொடுத்து வேலை வாங்கலாம் என்று செந்திலுக்குச் சொன்னதே அப்பா தான்" என்று மீனா சொல்ல, அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர் அதைத்தொடர்ந்து தான் எதற்காக வேலைக்கு பணம் கொடுத்தேன் என்ற விஷயத்தை சொல்லி அப்பாவுக்கு சொல்கிறார்.
பாண்டியன் மற்றும் சரவணன் எடுத்த முடிவுகள்
குடும்பச் சூழல் காரணமாக, பாண்டியன் தனது கால் சரியாகும் வரை எங்கும் செல்ல வேண்டாம் என்று கோமதி அறிவுறுத்துகிறார். பாண்டியனோ, தனது வயலை விற்றுவிடலாம் என்று சரவணனிடம் கூறுகிறார். மறுபுறம், சரவணன், மயில் எல்லா விஷயத்திலும் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கோபமாகச் சொல்கிறார்.
இந்தக் குழப்பமான சூழ்நிலைகளால், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் சந்திக்கும் சவால்களால், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் அடுத்தடுத்த எபிசோடுகளில் இன்னும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications