Pandian Stores: மயிலிடம் சுகன்யா சொன்ன ரகசியம்! அரசிக்காக பாண்டியன் எடுத்த முடிவு! சுகன்யா காட்டிய அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலின் இன்றைய எபிசோடில், அரசி சந்தித்த அவமானம் மற்றும் பாண்டியனின் ஆதரவு ஆகியவற்றைச் சுற்றியே கதைக்களம் நகர்கிறது. கோமதி, தன் மகளின் நிலைகண்டு கோபத்திலும், வருத்தத்திலும் இருக்கிறார்.

அரசியின் அவமானமும், கோமதியின் கோபமும்
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், அரசியை வெளியில் அழைத்துச் செல்ல கோமதி முடிவெடுக்கிறார். இருவரும் கிளம்பி வரும்போது, எதிர் வீட்டில் அப்பத்தா வாசலில் அமர்ந்திருக்கிறார். அரசியைப் பார்த்துவிட்டு அவர் பேச வர, அப்பொழுது அங்கு வந்த கோமதி, அவரைத் திட்டிவிட்டுச் செல்கிறார். பின்னர் இருவரும் கடைக்குச் செல்லும்போது, வழியில் பார்க்கும் பெண்கள் அரசியிடம் மோசமான கேள்விகளைக் கேட்கின்றனர். இதனால் கோபமான கோமதி, அவர்களைத் திட்டிவிட்டு, "இன்னைக்கு போக வேண்டாம். வீட்டுக்குச் செல்லலாம்," என்று சொல்லி, அரசியை அழைத்துச் செல்கிறார்.
அடுத்ததாக வீட்டிற்கு வந்த கோமதி, வாசலில் இருக்கும் அப்பத்தாவைப் பார்த்து, "தப்பு செஞ்ச உங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் நல்லா இருக்காங்க," என்று ஜாடை பேசிவிட்டு வீட்டிற்குள் செல்கிறார். கோபத்தில் உட்கார்ந்திருக்கும் கோமதியிடம் சுகன்யா காபி எடுத்து வர, "நான் இப்படி கஷ்டப்படுறதுக்கு நீயும் தான் காரணம். என் பொண்ணோட வாழ்க்கையில விளையாடிய யாரும் நல்லாவே இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும்," என்று திட்டி அனுப்புகிறார்.
பாண்டியனின் ஆதரவு
பாண்டியன் வீட்டிற்கு வர, வெளியில் நடந்ததை அவரிடம் தங்கமயில் சொல்கிறார். அரசிக்கு சமாதானம் செய்யும் பாண்டியன், "இனிமேல் அரசி குறித்து யாரும் பேசாத வண்ணம் நான் ஒன்று செய்ய இருப்பதாகச் சொல்லி," செல்கிறார்.
வாசலில் சோகமாக நிற்கும் சுகன்யாவிடம் வந்து பேச்சு கொடுக்கிறார் தங்கமயில். அப்போது சுகன்யா, தனது முதல் திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து வருத்தப்பட்டுப் பேசுகிறார். பின்னர், "தன்னுடைய அக்காவைப் பார்க்க செல்வதாகக்" கூறி குமார் வீட்டிற்குச் சென்று விடுகிறார்.
பாண்டியனின் அதிரடித் திட்டம்
மருமகள்களுடன் கோமதி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, பாண்டியன் வந்து, "அரசி எங்கே?" என்று கேட்கிறார். அவள் ரூமில் இருப்பதாகக் கூற, அவளை அழைத்துக்கொண்டு வெளியில் செல்கிறார். மைக் கட்டிய ஒரு ஆட்டோ வீட்டு வாசலில் நிற்கிறது. "இதை யார் நிறுத்தியிருக்கிறார்கள்?" என்று கோமதி கேட்டுக்கொண்டிருக்க, பாண்டியன் பதில் சொல்வதற்குள், அவர் சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார். பின்னர் ஆட்டோக்காரர் வந்து பாண்டியனை கைகாட்ட, "ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்று கோமதி கேட்க, "நீ எங்கே பேச விட்ட?" என்று பாண்டியன் அவரைத் திட்டுகிறார்.
பாண்டியன், அரசிக்கு ஆதரவாகப் பெரிய திட்டத்தை வகுத்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. இதனால், இனிமேல் என்னென்ன திருப்பங்கள் நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications