பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கண்டுபிடிக்கும் ரகசியம்.. கோமதி கேட்ட கேள்வி.. பாண்டியன் வீட்டுக்கு குழந்தை!
சென்னை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial today episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 19ஆம் தேதிக்கான எபிசோடில், சரவணன் தங்க மயிலுடன் உள்ள பிரச்சனை பற்றி முன்னாள் காதலி அஞ்சலியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் மறுபக்கத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மீனாவிற்கு ஆசை வருகிறது என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில், மீனா தங்கமயிலை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விட்டு, அவரின் அம்மாவிற்கும் புத்திமதி சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி தான் வீட்டில் சும்மா இருப்பதால் தான் அம்மா கோபப்படுறாங்க என்பதால், தங்கமயில் தனக்கு ஒரு வேலை வாங்கித் தருமாறு மீனாவிடம் கேட்டிருக்கிறார்.
மீனாவும் அதற்கு ரெடி பண்ணுகிறேன் என சொல்லி இருக்கிறார். தங்கமயில் வீட்டிற்கு வந்ததால் கோபித்துக் கொண்ட செந்தில் மீண்டும் மீனாவிடம் பேசத் தொடங்கி உள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
(Pandian Stores 2 serial February 19, 2026 episode) செந்திலும் மீனாவும், கோமதியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது கோமதியிடம் மீனா பேசிக் கொண்டிருக்கும் போது தங்கமயில் பற்றி பேச்சை எடுக்க, அதற்கு கோமதி கோபப்பட்டு திட்டி அவ பேச்சை இனி இந்த வீட்டில் எடுக்காத அவளால் என் குடும்பமே நிம்மதி இல்லாம போச்சு என்று திட்டுகிறார். பிறகு செந்திலும் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
அப்போது மீனா, ராஜி எங்க என கேட்க, அவ கோச்சிங்கிற்காக கதவை சாத்திக்கிட்டு படிச்சிட்டு இருக்கா என கோமதி சொன்னதும், அப்படியா நான் போய் பார்க்கிறேன் என மீனா, ராஜி ரூமுக்கு சென்று பார்க்கும்போது, அவர் ஹெட்ஃபோனை போட்டுக்கொண்டு அசைன்மெண்ட் எழுதிக்கொண்டிருக்கிறார்.

ராஜி சுவற்றைப் பார்த்து திரும்பி இருப்பதால், அவர் பின்னாடி வந்து நின்ற மீனா, சும்மா இல்லாமல், கழுத்தில் கை வைக்கிறார். கதிர் தான் தன் கழுத்தில் கை வைக்கிறார் என நினைத்து, சும்மா இரு கதிர் என சொல்கிறார். இதையடுத்து ராஜியின் முடியை விலக்கிவிட்டு காதில் கை வைக்கிறார் மீனா. சென்னைக்கு போயிட்டு வந்ததுல இருந்து நீ இப்படி தான் பண்ற என ராஜி உலற ஆரம்பிக்கிறார்.
அய்யனார் துணை சீரியல்: மீண்டும் வீட்டுக்கு சென்ற நடேசன் குடும்பம்.. கடைசியில் எதிர்பாராத சம்பவம்!
அப்போ சென்னையில் இவங்களுக்குள்ள ஏதோ நடந்திருக்கு என மீனா யூகிக்கிறார். அப்போது திடீரென ராஜி திரும்பி பார்த்து மீனா வந்திருப்பதை கவனிக்கிறார். அய்யய்யோ இவங்ககிட்டயா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம் என ராஜி யோசிக்க, என்ன நடந்துச்சுனு ஒழுங்கா சொல்லு என மீனா கேட்கிறார். வேறுவழியில்லாமல் ராஜியும் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் ஒன்னுவிடாம சொல்லிவிடுகிறார்.
ஆக மொத்தம் சென்னைக்கு டிரெயினிங் போறேன்னு சொல்லிட்டு ஹனிமூன் கொண்டாடிட்டு வந்திருக்கீங்க என சொல்லி மீனா, ராஜியை கலாய்க்கிறார். இந்த விஷயத்தை மீனா, வாய்தவறி கோமதியிடமும் சொல்லிவிடுகிறார். அப்போது ராஜி வெட்கம் அடைகிறார். இதையடுத்து மீனாவிடம் கோமதி, நீயும் ஒரு பேரக் குழந்தையை பெற்றுக் கொடு என சொல்கிறார்.

அதன்பின்னர் செந்திலும், மீனாவும் வீட்டுக்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் கர்ப்பிணிப்பெண் நடந்து செல்வதை பார்த்த மீனா, அத்தை சொன்ன விஷயத்தை செந்திலிடம் கூறுகிறார். மறுபுறம் தங்கமயில் தன்னுடைய பிரண்ட்ஸ்களுக்கு போன் போட்டு ஏதாச்சும் வேலை இருக்குமா என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அனைவரும் எதுவும் வேலை இல்லை என சொல்லிவிடுகிறார்கள். அதேபோல் சரவணன், அஞ்சலிக்கு போன் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தான் மனைவியை பிரிந்து வாழும் விஷயத்தையும், தங்களுக்கு என்ன பிரச்சனை, எதனால் இருவரும் டைவர்ஸ் அப்ளை பண்ணியிருக்கிறோம் என எல்லா விஷயத்தையும் சொல்லிவிடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications