Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்: உண்மை முகத்தை காட்டிய சக்திவேல்! கோமதிக்கு இது தேவையா? மீண்டும் மயிலால் பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 21ஆம் தேதிக்கான எபிசோடில் கோமதி தன்னுடைய அண்ணன்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரை அவருடைய அண்ணன் சக்திவேல் அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ராஜி தன்னுடைய அப்பாவை பார்க்க வேண்டும் என்று வீட்டுக்கு போயிருந்தார். அப்போது அவரிடம் அப்பாவும் சித்தப்பாவும் சரியாக பேசவில்லை என்றாலும் வீட்டில் எல்லோரும் நல்லபடியாகவே பேசினார். உடனே இதை வீட்டில் வந்து சொன்ன ராஜி, கோமதியை அந்த வீட்டிற்கு கூப்பிட்டு இருந்தார். ஆனால் ராஜி வீட்டிற்கு வந்ததை சித்தப்பா சக்தி வேலால் தாங்கிக்க முடியவில்லை.

Pandian Stores serial vijay tv

ராஜியை தொடர்ந்து கோமதியும் வந்தால் சொத்து பிரச்சனை வந்திடுமே என்று பயத்தில் இருக்கிறார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சரவணன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற, அப்போது மயில் அங்கு வந்து மாமா என்று கூப்பிட, மனதிற்குள் மயிலாக இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது. ஆனாலும் அவளாக இருக்காது என்று நினைத்துக் கொண்டு வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது மீண்டும் மயில் மாமா என்று என்று கூப்பிட, அதை பார்த்து சரவணன் அதிர்ச்சி அடைகிறார். உடனே இங்கிருந்து போயிடு எதற்காக இங்கு வந்தா? என்று சரவணன் ஆவேசமாக சத்தம் போடுகிறார். அப்போது மயில் நான் பேசுவதை கொஞ்சம் கேளுங்க என்று கெஞ்ச, உன் பேச்சை நான் எதுக்குடி கேக்கணும்? என் குடும்பத்தை ஜெயிலில் தூக்கி வச்ச உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு என்று திட்டி தீர்க்கிறார்.

அப்போது இவர்கள் சண்டையை அங்கிருந்த எல்லோரும் வேடிக்கை பார்க்கின்றனர். அந்த சமயத்தில் பாண்டியனும் வர, அவரிடம் மயில் கெஞ்சுகிறார். உடனே சரவணன் கோபமாகி அவரை அடிக்கப் போகிறார். அப்போது பாண்டியன் தடுத்து மயிலிடம் கோர்ட்டில் கேஸ் நடக்குதுமா எதுவாக இருந்தாலும் அங்க போய் பாரு என்று ஒரு ஆட்டோவையும் வரவைத்து மயிலை கிளம்பி போக சொல்கிறார்.

அதற்கு மயில் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க மாமா என்று கெஞ்ச, பாண்டியன் எதையும் கேட்பதாக இல்லை என்று கிளம்பி போகிறார். உடனே வேறு வழியில்லாமல் மயில் ஆட்டோவில் அழுது கொண்டே ஏறி போகிறார். இதனால் சரவணன் என்ன சொல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் நிற்கிறார். மறுபக்கத்தில் கோமதி ராஜியுடன் தன்னுடைய அண்ணன்கள் வீட்டிற்கு வருகிறார்.

வாசலில் கோமதி தயங்கி கொண்டு நிற்க, காந்திமதி வந்து இருவரையும் பார்த்து மகிழ்ச்சியாகி வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு வருகிறார். அப்போது முத்துவேல் சக்திவேல் இருவருக்கும் இந்த விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைகின்றனர். இது நம்ம வீட்ல நடக்கிற விஷயமா? எனக்கு இதை நம்பவே முடியல என்று சந்தோஷப்படுகிறார்.

அப்போது கோமதி தன்னுடைய அண்ணன்களிடம் வந்து நான் ஜெயிலுக்கு போறேன்னு தெரிஞ்சும் எனக்காக ஓடி வந்தீங்க... உங்களுக்கு நன்றி சொல்றதுக்காகத்தான் வந்தேன். அதற்காக என் கையால உங்களுக்கு ஒரு வேளை சமைச்சு போடணும்னு ஆசையா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரணும் என்று கூப்பிட, அதற்கு பழனி கண்டிப்பா வருவாங்க.. உன் கையால சாப்பிடறதுக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும் என்று சென்டிமென்டாக பேசுகிறார்.

இதனால் கடுப்பான சக்திவேல் உனக்கு ஒரு பிரச்சனைன்னு தெரிஞ்சதும் நாங்க வந்தது உண்மைதான். அதுக்காக சொந்தம் கொண்டாடலாம் என்று சொல்லி நினைச்சுடாத.. நீ எங்களுக்கு செஞ்ச துரோகத்தை மறக்க மாட்டோம். உன்னை எவ்வளவு ஆசையாக வளர்த்தோம் ஆனால் நம்ம வீட்ல வேலை செஞ்ச ஒரு பிச்சைக்கார பையன் உன்னை கூட்டிட்டு போயிட்டான்.

எங்களுக்கு எவ்வளவு அவமானமா இருந்துச்சு அதை எல்லாம் எங்களால இப்பவும் ஜீரணிக்க முடியல என்று கத்துகிறார். அப்போது காந்திமதி சமாதானம் செய்ய வர, அவருடைய பேச்சையும் சக்திவேல் கேட்பதாக இல்லை. அதுவரைக்கும் அமைதியாக இருந்த முத்து வேலும் முதல்ல அவளை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுங்கம்மா என்று ஷாக் கொடுக்கிறார். இவர்கள் இப்படி பேசுவார்கள் என்று எதிர்பார்க்காத கோமதி அழுது கொண்டே நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+