பாண்டியன் ஸ்டோர்ஸ்: கைது செய்யப்படும் குமார்.. அரசி சொன்ன வார்த்தை! அதிர்ச்சியில் பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஜூலை 23ஆம் தேதிக்கான எபிசோடில் குமார் கைது செய்யப்பட்டது அறிந்ததும் ராஜி ஃபீல் பண்ணுகிறார் இதற்கு கதிர் அவருக்கு ஆறுதல் சொல்கிறார் அதே நேரத்தில் தன்னுடைய மகனுக்காக சக்திவேல் சபதம் போட்டு இருக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில் நடக்கவிருக்கும் சம்பவங்களின் தொகுப்பு இதோ. குமரவேல் கைது செய்யப்பட்டதை அறிந்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து, காவல்துறையினரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். இந்த கூக்குரல் கேட்டு அரசி ஜன்னல் வழியாக பார்க்க, ராஜி மற்றும் கோமதி வாசலில் நிற்கின்றனர். குமாாரின் பெரியப்பா தன்னுடைய வக்கீல் வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்கிறார் ஆனால் காவல்துறையினர் குமாரை ஜீப்பில் அழைத்துச் செல்கின்றனர். குமாரின் அம்மா மற்றும் பாட்டி கதறி அழுகின்றனர். ஆத்திரமடைந்த சக்திவேல், இன்னும் ஒரு மணி நேரத்தில் தன் மகனை வெளியே கொண்டு வருவதாக சபதம் செய்துவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

Pandian Stores Vijay TV

ராஜி வருத்தத்துடன் அறையில் அமர்ந்திருக்க, கதிர் அவளுக்கு ஆறுதல் கூறுகிறான். அப்போது ராஜி, "எனக்கு குமார் பற்றி கவலை இல்லை. அம்மா, பாட்டி நினைத்து தான் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவு அழுதார்கள்" என்கிறாள். அதற்கு கதிர், "எல்லாம் சரியாகிவிடும்" என்று கூறி, நகையைத் திருப்பிக் கொடுத்துவிடச் சொல்கிறான். ஆனால், ராஜி இப்போது கொடுத்தால் இன்னும் பிரச்சனை செய்வார்கள், குமார் பிரச்சனை முடிந்ததும் கொடுக்கலாம் என்கிறாள்.

பின்னர், பாண்டியன் கடையில் இருக்கும்போது, கதிர் புதிதாகத் தொடங்க இருக்கும் டிராவல்ஸ் பிசினஸ் குறித்து சரவணனிடம் பேசுகிறார். "உங்களிடம் கேட்க பயமாக இருக்கிறது, ஆனால் அவன் முன்னேற ஆசையில் லோன் கேட்டுக்கொண்டிருக்கிறான்" என்கிறான். அதற்கு பாண்டியன், "நீ போய் குடோனில் இருக்கும் பொருட்களை எடுத்து வந்து அடுக்கி வை. உனக்குப் பிடிச்சா செய். நான் சொன்னேன்னு பயந்துட்டு செய்ய வேண்டாம்" என்று கூறிவிட்டு, வெளியூர் வேலைக்கு செல்கிறார்.

Pandian Stores Vijay TV

சக்திவேல் வீட்டுக்கு முத்துவேல் வருகிறார். குமார் எங்கே என்று கேட்க, அவனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றும், கேஸ் நடத்திதான் அவனை வெளியே அழைத்து வர முடியும் என்றும் சொல்கிறார் சக்திவேல். இதனால் பெண்கள் அழுகின்றனர். ஆத்திரமடைந்த சக்திவேல், முத்துவேலை திட்டுகிறார். கல்யாணம் செஞ்சி வச்சிட்டாரு, அது போலவே அழைச்சிட்டு வந்துவிடுவாரு என நக்கலாகப் பேசுகிறார். அதுமட்டுமல்லாமல், பாண்டியன் குடும்பத்தை நடுத் தெருவில் நிற்க வைப்பேன் என்றும் சபதம் போடுகிறார்.

வீட்டில் சரவணன் சாப்பிட உட்காருகிறார். அரசி சாப்பிட்டாளா எனக் கேட்க, இல்லை என்று கோமதி கூறுகிறார். கவலையாக உட்கார்ந்து இருக்கும் அரசியை அழைத்து வந்து சரவணன் சாப்பாடு ஊட்டி விடுகிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+