பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: ஒன்று சேர்ந்த மருமகள்கள்.. கோமதி குடும்பத்தில் பெரிய குழப்பம்! பாவம் பாண்டியன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 2026 மார்ச் 23ஆம் தேதிக்கான எபிசோடில் தங்கமயில் பற்றிய உண்மைகள் ராஜிக்கும் தெரிய வருகிறது. அதே நேரத்தில் மீனா சொன்ன விஷயத்தை கேட்டு ராஜி பெரிய பிரச்சனையில் சிக்க போகிறார் என்று தெரிகிறது என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மயிலும் மீனாவும் பஸ் ஸ்டாண்டில் பேசிக்கொண்டிருக்கும்போது, அதை ராஜி நேராக பார்க்கிறார். அதற்குப் பிறகு ராஜி, மீனாவை பார்த்து "நீங்க வேலைக்குப் போகலையா? வீட்டில் நடந்த பிரச்னையை எல்லாம் மறந்துட்டீங்களா? எப்படி உங்களால அவங்களை மன்னிக்க முடிகிறது?" என்று கேட்கிறார்.
ராஜி கேட்ட கேள்வி
அதற்கு மீனா உடனே பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதற்கு ராஜி, "எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லுறீங்களே, அப்படின்னா மயில் அக்காவுடன் பேசுறதை ஏன் சொல்லல?" என்று கேட்கிறார். அதற்கு மீனா, "நீ ஒரே பக்கம் மட்டும் நினைக்காதே, என்னோட பக்கத்தையும் கேட்கணும்" என்று பதில் சொல்கிறார்.
பின்னர், மயிலும் மீனாவும் ஆரம்பம் முதல் நடந்த எல்லா விஷயங்களையும் ராஜிக்குப் புரியவைக்கிறார்கள். அதை கேட்ட ராஜி, "இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனா இனிமேல் உங்களுக்கு நேரடியாக ஆதரவு கொடுக்க முடியாது. உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நான் கடவுளிடம் வேண்டிக்கிறேன்" என்று சொல்கிறார்.
அதற்குப் பிறகு மயில், "இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. கதிர் தம்பியிடமும் கூட சொல்லாதே" என்று ராஜியிடம் மீண்டும் கேட்கிறார். ராஜியும் அதற்கு ஒப்புக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
பின்னர், ராஜியும் கதிரும் டீக்கடைக்கு செல்கிறார்கள். அப்போது ராஜி, மீனாவுக்கு போன் செய்து "நான் கதிருடன் இருக்கேன், அவனிடம் சொல்லவா?" என்று கேட்கிறார். அதற்கு மீனா "சொல்லாதே" என்று கேட்டுக்கொள்கிறார்.
இதற்கிடையில், கதிர் மற்றும் ராஜி டீக்கடையில் இருக்கும் போது, முத்துவேல் அங்கே வந்து ராஜியுடன் பேசுகிறார். அவர் கோச்சிங் கிளாஸ், டிராவல்ஸ் பிஸினஸ் எப்படி நடக்கிறது என்று கேட்கிறார். வீட்டில் நடந்த சண்டை பற்றியும் விசாரிக்கிறார்.
அப்போது, உங்க அப்பாடிராவல்ஸ் வைக்க கொடுத்த பணத்தை திரும்ப கேட்கிறாராம்" என்று முத்துவேல் கேட்க, ராஜி "ஆமாம், கேட்கிறார். எப்படியாவது அந்த பணத்தை ரெடி பண்ணி கொடுக்கணும். நான் கொடுத்தாலும் கூட அவர் வாங்க மாட்டார்" என்று பதில் சொல்கிறார். இதற்கு முத்துவேல் "என்ன வேண்டுமானாலும் கேள்" என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications