Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்: அசிங்கமாக பேசிய சரவணன்! மயில் எடுத்த முடிவு! பலருக்கும் பாடம்! அதிர்ச்சியில் மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial March 5th Episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 மார்ச் நான்காம் தேதிக்கான எபிசோடில் நடந்த சம்பவங்கள் மிகவும் உணர்ச்சிகரமாகவும் அதிர்ச்சிகரமாகவும் அமைந்துள்ளன. குழந்தை பற்றி சரவணன் சொன்ன வார்த்தையால் தங்கமயில் எதிர்பாராத ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இதனால் மீனா அதிர்ச்சியில் இருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நேற்றைய எபிசோடில், கோவிலில் சரவணனை சந்தித்து ஒரு முக்கிய விஷயம் சொல்ல வேண்டும் என தங்கமயில் வருகிறார். அப்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் சரவணனிடம் சொல்கிறார். இந்த செய்தியை கேட்ட பிறகு சரவணன் சந்தோஷப்படுவார் என்று தங்கமயிலும், அவர்களை மீண்டும் ஒன்றாக சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீனாவும் எதிர்பார்த்து இருந்தனர்.

Pandian Stores 2 serial Pandian Stores serial 2

ஆனால் அந்த நம்பிக்கை முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலைக்கு போய்விடுகிறது. தங்கமயில் சொன்ன விஷயத்தை சரவணன் நம்பாமல் சந்தேகப்படுகிறார். இதனால் இருவருக்கும் கோவிலிலேயே வாக்குவாதம் ஏற்படுகிறது. கோபமாக பேசிக்கொண்டு சரவணன் கோவிலின் வெளியே வந்து விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ( Pandian Stores 2 serial today episode) ஆரம்பத்தில், கோவிலுக்கு வெளியே காத்திருந்த மீனாவை பார்த்த சரவணன் மிகவும் கோபமாக, "நீ தான் இதற்கெல்லாம் காரணமா? நான் கூட நீ அவசரமா வரச் சொன்னதுமே உனக்கும் செந்திலுக்கும் ஏதாவது சண்டை வந்திருக்கும் என பயந்து வந்தேன். ஆனா நீ இங்க வந்து இவளை பார்க்க வச்சிருக்க. இனிமே இப்படியெல்லாம் செய்யாதே" என்று மீனாவை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

சரவணன் போன பிறகு மீனா உடனே கோவிலுக்குள் சென்று தங்கமயிலை பார்க்கிறார். அப்போது தங்கமயில் மிகவும் வருத்தத்துடன் அழுதுகொண்டே மீனாவை கட்டிப்பிடிக்கிறார். "நான் எவ்வளவு சொல்லியும் மாமா நம்பவே இல்ல மீனா. டாக்டர் கொடுத்த சீட்டைக் காட்டியும் அவர் நம்பல" என்று சொல்லி தங்கமயில் மனம் உடைந்து பேசுகிறார்.

சரவணன் கேட்ட கேள்வி

அதோடு மட்டும் இல்லாமல் சரவணன் கேட்ட ஒரு கேள்வி தான் தன்னை மிகவும் காயப்படுத்தியதாக தங்கமயில் கூறுகிறார். "அவர் உன் கூட நான் தான் பேச்சுவார்த்தை இல்லையே இல்லையே அப்போ எப்படி குழந்தை வந்துச்சு இது எவனுக்கு உண்டான என்று கேட்டாரு அதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியல" என்று கதறி அழுகிறார். அந்த வார்த்தையை கேட்டதும் மீனாவும் அதிர்ச்சியடைந்து விடுகிறார்.

பின்னர் தங்கமயிலை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் மீனா. வீட்டில் பாக்கியமும் அவரின் கணவரும் மகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். தங்கமயில் வீட்டுக்கு வந்ததும் அவர்களிடம் எந்த வார்த்தையும் பேசாமல் மயில் நேராக தனது அறைக்குள் சென்று விடுகிறார்.

குழப்பத்தில் பாக்கியம்

இதனால் ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்பதை உணர்ந்த பாக்கியம், மீனாவிடம் என்ன நடந்தது என்று தொடர்ந்து கேட்கிறார். ஆனால் மீனா "நான் பார்த்துவிட்டு வறேன்" என்று சொல்லிவிட்டு தங்கமயிலின் அறைக்குள் செல்கிறார்.

அங்கே சென்ற பிறகு தங்கமயிலை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் மீனா. "மாமா கோபத்தில் அப்படி பேசிருப்பார். நீங்க அதையெல்லாம் மனசில் வைத்து கவலைப்படாதீங்க" என்று கூறி அவரை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்.

டிரஸ் மாற்ற போன சீரியல் நடிகை கண்ட காட்சி.. பக்கத்து வீட்டுக்காரரின் கேவலம்! குழப்பத்தில் சென்னை
டிரஸ் மாற்ற போன சீரியல் நடிகை கண்ட காட்சி.. பக்கத்து வீட்டுக்காரரின் கேவலம்! குழப்பத்தில் சென்னை

தங்கமயில் எடுத்த முடிவு

இந்நேரத்தில் அறைக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பாக்கியம் கதவை தட்டுகிறார். அருகில் இருந்த அவரது கணவர், "மயிலு அவளோட மாமியார் வீட்டுக்கு போறதுக்காக துணிகளை பேக் பண்ணிட்டு இருப்பாளோ" என்று யோசிக்கிறார்.

அப்போது தங்கமயில் மீனாவிடம் தானொரு முக்கிய முடிவை எடுத்துவிட்டதாக சொல்கிறார். "இனி எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இனிமேல் அவரை தொந்தரவு செய்ய மாட்டேன். அவரை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவு செய்துவிட்டேன்" என்று கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கர்ப்பத்தை சொன்ன மயிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சரவணன்! இனி மீனா எடுக்கும் முடிவு!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கர்ப்பத்தை சொன்ன மயிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சரவணன்! இனி மீனா எடுக்கும் முடிவு!

சத்தியம் செய்த மீனா

இந்த வார்த்தையை கேட்டதும் மீனா அதிர்ச்சியடைந்து விடுகிறார். உடனே "அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே. இந்த குழந்தை விஷயத்தை அத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லலாம்" என்று மீனா கூறுகிறார்.

ஆனால் அதற்கு தங்கமயில் மறுக்கிறார். "இந்த விஷயத்தை மாமா எப்படியும் அவருடைய அம்மாவிடம் சொல்ல மாட்டார். அதனால் நீயும் யாரிடமும் சொல்லக்கூடாது" என்று மீனாவிடம் சத்தியம் வாங்குகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+