பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: பாண்டியன் உயிரை காப்பாற்றிய தங்கமயில்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் பாண்டியனின் உயிரை தங்கமயில் காப்பாற்றி இருக்கிறார். இதனால் மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் ஹோட்டலில் பில்லை தவறாக போட்டு விஷயத்தை குடும்பத்தில் மறைத்ததால் வீட்டில் நடந்த குழப்பத்தை நினைத்து பாண்டியன் மற்றும் குடும்பத்தில் எல்லோரும் பேசாமல் இருக்கின்றனர். இதனால் தங்கமயில் ரொம்பவும் வருத்தமாக இருக்கிறார்.

எப்படியாவது தன்னுடைய மாமனார் மாமியார் தன்னுடன் மீண்டும் பழையபடி பேச வேண்டும் என்று வேதனையில் இருக்கிறார். இது குறித்து தன்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்ல அவர்கள் இதற்கு நாங்கள் ஒரு பிளான் போடுகிறோம் என்று வீட்டில் வந்து பாண்டியன் மற்றும் கோமதியிடம் பேசி இருந்தனர்.
அப்போது இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா தெரியாம ஏதோ தப்பு நடந்துச்சு என்று தங்கமயில் அப்பா சொல்ல அதற்கு பாண்டியன் இது சின்ன தப்பா? ஒரு தப்பு நடந்ததால் அதை வீட்டில் சொல்லாமல் மறைச்சிருக்கா. இது எவ்வளவு பெரிய தப்பு? உங்க பொண்ணு மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் என்று கோபத்தை காட்டி இருந்தார்.

அப்போது தங்கமயிலின் அப்பா நாங்க இத பத்தி பேசுறதுக்காக வரல என் பொண்ணுக்கு நல்லபடியா திருமணம் நடந்தால் எங்க குலதெய்வ கோவிலில் பொங்கல் வைக்கிறதா வேண்டுதல் வச்சிருந்தோம். இப்போ கோவிலில் பொங்கல் வைக்க வேண்டும் என்று உங்களை கூப்பிடுவதற்காக வந்தேன் என்று சமாளித்து இருந்தார்.
ஆனால் குலதெய்வ கோவிலிலே இவர்களுக்கு இல்லை என்றும் என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் சொல்ற பொய்யால் பிரச்சனைக்கு மேல பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்று தங்கமயில் அழுது கொண்டிருந்தார். இப்படியான நிலையில் வரும் நாட்களுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் தங்கமயில் குடும்பத்தினர் எல்லாரும் ஒரு கோவிலில் பொங்கல் வைத்து பங்க்ஷன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அங்கு பாண்டியனும் அவருடைய குடும்பத்தினரும் தங்கமயிலோடு அங்கு வருகின்றனர். அப்போது பாண்டியனுக்கு தங்கமயில் சர்க்கரை பொங்கல் வைக்க பாண்டியன் போதும் நிறுத்து என்று கோபப்படுகிறார்.
பிறகு சிறிது நேரம் கழித்து அங்கு ஒரு இடத்தில் நின்று பாண்டியன் போனில் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு போடப்பட்டிருந்த பந்தல் சரிந்து பாண்டியன் மேலே விழ வருகிறது. இதை கவனித்த தங்கமயில் ஓடி சென்று பாண்டியனை தள்ளி விட்டு விடுகிறார். ஆனால் அந்த நேரத்தில் அந்த பந்தல் தங்கமயில் மீது விழுகிறது.

பிறகு பாண்டியன் உட்பட எல்லோரும் பதறிப் போய் அந்த பந்தலை தூக்கி தங்க மயிலுக்கு தண்ணீர் தெளித்து அவரை எழுப்புகின்றனர். அப்போது மாமாவுக்கு ஒன்னும் ஆகலையே..? மாமா நல்லா இருக்காரா? என்று தங்கமயில் பதறிப் போய் கேட்கிறார். இதைக் கேட்டு பாண்டியன் ரொம்பவும் பீல் பண்ணுகிறார்.
இப்படியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதனால் பாண்டியன் இனி தங்கமயிலை மன்னித்து ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது. இதை வைத்துக்கொண்டு அடுத்த வாரத்தில் தங்கமயில் பாண்டியன் வீட்டிற்குள் என்ன பிரச்சனை செய்யப் போகிறாரோ பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications